'பிடே' இடைக்கால தலைவராக விஸ்வநாதன் ஆனந்த்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பான ('பிடே') அமைப்பின் இடைக்கால தலைவராக இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பொறுப்பேற்றுள்ளார். இதன்மூலம், 'பிடே' அமைப்பின் தலைமை பொறுப்பை வகிக்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
2018 முதல் 'பிடே' தலைவராக செயல்பட்டு வந்த ரஷ்யாவின் ஆர்காடி டிவோர்கோவிச்சுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, இந்த பொறுப்பு ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐந்து முறை உலக சாம்பியனான ஆனந்த், 2022 முதல் 'பிடே' துணைத் தலைவராக இருந்து வந்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிவோர்கோவிச்சின் தலைமையையும் அர்ப்பணிப்பையும் மதிக்கிறேன். அவர் உருவாக்கிய வலுவான அணியுடன் இணைந்து உலகளவில் செஸ் விளையாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்" என்று தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply