சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது
அரைத்து விட்ட சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது கொஞ்சம் அதனுடன் கசகசாவை சேர்த்து வறுத்து அரைத்து சேர்த்தால் சாம்பாரின் மணமும், குணமும் அலாதியானதாக மாறிவிடும். சாம்பார் கெட்டியாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.
வீட்டில் டீ தயாரிக்க நீரை கொதிக்க விடும்போது ஒரே ஒரு புதினா இலையும் போட்டு கொதிக்க விட்டு பாருங்கள். டீயின் மனமும் ருசியும்அபாரமாக இருக்கும்.
ரசம் தயாரிக்கும் போது சுண்டக்காய் அளவு இஞ்சி சேருங்கள், சூப்பராக ரசம் இருக்கும்.
இட்லிக்கு மாவாட்டும் போது ஒரே ஒரு ஆமணக்கு விதையை தோல் நீக்கி போட்டுப் பாருங்கள் இட்லி மெது மெது என்று இருக்கும்.
காட்டு நெல்லிக்காயை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள், வைட்டமின்குறையாத ஊறுகாய் ரெடி. தேவை பட்டால் மிளகாய் பொடியும் போட்டுக் கொள்ளலாம்.
0
Leave a Reply