25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


ஆரோக்கியம்

Sep 17, 2024

தினமும் 1 -தேனில் ஊற வெச்ச நெல்லிக்காய்

தேன் மிகச்சிறந்த அருமருந்து என்பதால்தான், மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் இந்த தேனில் ஊறவைத்து சாப்பிடப்படுகிறது. அதிக அளவிலான வைட்டமின் C, ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த நெல்லிக்காய், நோய்த்தொற்றுகள் நம்மை எளிதில் அண்டவிடாமல் தடுக்கிறது. ஆப்பிள்களைவிட சிறந்த பண்புகளை கொண்டிருக்கும் நெல்லிக்காய், ஹீமோகுளோபின் பிரச்சனையை சரி செய்யக்கூடியவை. ரத்தம் சுத்தமாகும்.. ரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பட்டு வந்தால், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். நெல்லிக்காய் + தேன் இரண்டுமே ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்கள் என்பதால், உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை தடுக்கின்றன.கண் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை மிகவும் நல்லது.. இதனால் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண் சிவந்து போகுதல், போன்றவை நீங்கிவிடும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்களுக்கு, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் அற்புதமான மருந்தாகும். வெள்ளைப்படுதல் தொந்தரவு உள்ள பெண்களும் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.. வெள்ளைப்படுதல் பிரச்சனை தீர்வதுடன், அதிகப்படியான மாதவிலக்கு உள்ளிட்ட கருப்பை சம்பந்தமான பாதிப்புகளும் நீங்கிவிடும்.. நெல்லிக்காயில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலுக்கு ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. செரிமான கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கல், அஜீரணமும் நீங்கும்.. நெல்லிக்காய், தேன் இரண்டுமே சரும ஆரோக்கியத்தை காக்கக்கூடியவை. மேம்படுத்த உதவும். இதனால் தோல் தொந்தரவுகள் நெருங்குவதிலலை., தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.. அதுமட்டுமல்லாமல் சிலருக்கு நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் அளவாகவும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது பாதுகாப்பானது

Sep 11, 2024

உடல் எடை அதிகரிக்கணுமா?

உடல் மெலிந்து காணப்படுபவர்கள் உடல் எடை அதிகரிக்க ,இவற்றை எல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.தினம் ஒரு கைப்பிடி அளவு முந்திரி மற்றும் உலர் திராட்சை.தினம் இரண்டு வாழைப்பழம்.அடிக்கடி கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிடுதல் .அதிக அளவு மீன், இறால், முட்டை சாப்பிடுதல்.பாதாம், பாலாடைக்கட்டி கிழங்கு வகையில், உருளை கிழங்கு சேனைக்கிழங்கு.அதிக அளவு பீன்ஸ்.  *.தேங்காய் பால், ஆளி விதை மற்றும் பாஸ்தா.இது போன்ற உணவுகளைசாப்பிட்டு் வந்தால் ஆரோக்கிய முறையில் உடல் எடை அதிகரிக்கும்

Sep 08, 2024

மூட்டு வலி குணமடைய.....

பூண்டு இலைகளை வேப்ப எண்ணெய்யில் வதக்கி மூட்டுப் பகுதியில் கட்டலாம். மூக்கிரட்டை வேரை நன்கு கசக்கி, தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை பருகலாம். கொய்யா இலைகளை அரைத்து, மூட்டுப் பகுதியில் பூசலாம்  சூடான பாலில் 3 ஏலக்காய், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இரவில் அருந்தலாம். அத்திப்பாலை மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமடையலாம்.

Sep 06, 2024

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை

ஆரைக்கீரைகுளிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியது.மழை மற்றும் குளிர் காலத்தில் தான் இந்த கீரை எங்கும் கிடைக்கும், கோடை காலத்தில் கிடைப்பது அரிது.நீர் நிலைத்து நிற்கும்  இடத்தில் செழித்து வளரும், கீரையின் ஒரே நரம்பின் உச்சியில், நான்கு இலைகளுடன் காணப்படும்.பச்சை நிறத்துடன் மெல்லியதாகவும், வட்டமாக இருக்கும், சமைத்தால் புளிப்பு ருசியுள்ளதாக இருக்கும், இதற்கு புளியாரை என்று கூறுவார்கள்.ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இந்த கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடலாம், சாம்பார் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பொறியலாகவும் செய்யலாம்'.சிலருக்கு அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் இறங்கும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கட்டுப்பட்டு, சரியான அளவில் வெளியேறும்.சிலருக்கு ரத்தத்தில் பித்தம் அதிகமாகி அமிலத்தன்மை ஏற்பட்டு பித்த கோளாறுகளை உண்டுபண்ணும், தொடர்ந்து இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த பிரமேகம் நோய் முற்றிலும் குணமாகும்.பித்த கிறுகிறுப்பு, பித்த வாந்தி, தலைவலி போன்ற பித்த சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.இக்கீரையை உணவில் உட்கொண்டு வர, ரத்த போக்கும், வெள்ளைபாடு நிவர்த்தியாகும். 

Sep 05, 2024

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....

இதயத்தைப் போலவே சிறுநீரகமும் நம் உடலின் முக்கியமான உறுப்பு.உடலில் உள்ளஅழுக்குகளை அகற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன.ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டு சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கிறது.ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளை சாப்பிடுவது உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.தர்பூசணி தண்ணீர் சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவும்.

Sep 04, 2024

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கேரட்

இயற்கையாகவே இனிப்புச் சுவை உடைய. கேரட்டைச் சமைத்து உண்பதை விடப் பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள பெரும்பாலான சத்துகள் விரயமாகாமல் உடலுக்குள் போகும்.பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகியசத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாசியம், ஃபோலிக் அமலம், கோலின், கால்ஷியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச்சத்தும் கேரட்டில் இருக்கிறது. கண் பார்வை கூர்மையடையவும், தோல் மற்றும் எலும்பு உறுதி ஆகவும், ரத்த விருத்திக்கும் இது மிகவும் நல்லது.வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கண்ணுக்கும், சருமத்துக்கும், உடல் வளரச்சிக்கும் மிகவும் உதவுகிறது.இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அகலும், மேலும் குடல் புண் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதால் இதய நோய்களை அண்டவே விடாது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதால் வாரத்தில் இரண்டு நாட்களாவது சமையலில் கேரட்டைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. பக்கவாதத்தை அண்டவிடாது.

Sep 03, 2024

உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ்கள்

சுரைக்காயில்சுமார்90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி, ஈ, கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற'சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதயத்தை பராமரிக்கிறது.சுரைக்காயையும், சிறிது புதினா இலைகளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது இஞ்சி,ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர் க்கவும்.அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கல்உப்பு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.இவ்வாறு தயாரித்த சுரைக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது.சருமம் பளபளப்பாக இருக்க உதவும்..இஞ்சியை தோல் சீவி, கழுவி சுத்தம் செய்து, துருவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி பாட்டிலில், இந்த துருவிய இஞ்சி, சீரகப்பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும்.இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதனை மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதற்கு, அரை மணி நேரத்திற்குமுன்னதாக எடுத்துக்கொண்டால் நல்ல ப லன் கிடைக்கும்.இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால், அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வு தொல்லைஆகியவைநீங்கி'ஜீரணசக்திஅதிகரிக்கும்.அதேபோல் இது உடலில் கெட்ட கொழுப்புகளை தங்கவிடாமல் உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

Sep 02, 2024

மூக்கிரட்டை கீரை சிறுநீரகம் மற்றும் மூலம் பிரச்சனைகளை சரி செய்யும்

 மூக்கிரட்டை கீரை வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், வயல் வெளிகளிலும் தரையில் படர்ந்திருக்கும்.சிறுநீரகம் மற்றும் மூலம் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்த மூக்கிரட்டை கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.இப்படி காலை மாலை என தினமும்2 வேளை சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். அதேபோல, மூலக்கட்டி இருந்தாலும் சுருங்கி குணமாகும்.இந்த கீரையுடன் அதன் தண்டுகளையும் சேர்த்து, நறுக்கி ஒரு பாத்திரத்தில்4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால் சிறுநீரகத்துக்கு நல்லது.சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், தொற்றுநோய்கள் இருந்தாலும் இந்த கீரை அதை குணப்படுத்திவிடும்.மஞ்சள் காமலை இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் இந்த கீரையை சேர்த்து சாப்பிடலாம்.இந்த இலைகளை பேஸ்ட் போல அரைத்து கண்களில் தடவ கண் இமை வீக்கம் குணமாகும். இந்த வேரை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் கண் நோய்கள் குணமாகும்.இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடல் எடையில் மாற்றம் காணலாம்.மூக்கிரட்டை பொடியானது சிறந்த மலமிளக்கியாகவும்செயல்படுகிறது. மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவுகிறது.

Sep 01, 2024

முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால் அல்சர் குணமாகும்

முட்டைகோஸில், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.முட்டைக்கோஸை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் சிறிது இஞ்சி, சீரகம், கல் உப்பு, எலுமிச்சம் சாறு, மிளகுதூள், புதினா இலைகளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.முட்டைகோஸ் ஜூசில், குறைவான கலோரியே உள்ளதால், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கப் பயன்படுகிறது.அல்சர் உள்ளோர், முட்டைகோஸ் தண்ணீர் அருந்தி வருவதால், விரைவில் குணமாகும். மேலும் இது வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.முட்டைகோஸ் ஜூசில் அதிகப்படியான, 'ஐசோசியனேட்' இருப்பதால், இவை நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.முட்டைகோஸ் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவதால், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் இருக்க உதவும். மருகரும்புள்ளிகள், பருக்கள் போன்ற சரும பிரச்னைகளுக்கு, நல்ல பலன் தரும்.சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகிறது. தலைமுடி உதிர்வதை குறைக்கிறது.

Aug 29, 2024

வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் வில்வம்

வில்வத்தில் ஏஜிலைன், மார்மின், மார்மிலோசில் போன்ற மருத்துவ வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என, அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலையில் துவர்ப்பு சத்து அதிகம். வில்வ இலையை வதக்கி, வீக்கங்களுக்கு கட்டினால், வலி மற்றும் வீக்கம் குறையும் வயிற்றில் உண்டாகும் புண்கள் மற்றும் புற்றுநோயை வில்வ இலைச் சாறு குணப்படுத்துகிறது. வயிற்று சவ்வுகளில் உள்ள புண்களை ஆற்றும் அற்புத சக்தி வில்வத்திற்கு உண்டு.வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால், நீரிழிவு பாதிப்புக்கான மருந்துகளில் வில்வம் அதிகம் சேர்க்கப்படுகிறது.மேலும், இதை கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுத்தால், கண் சிவப்பு, வலி, வீக்கம் குறையும். வில்வ இலையை அரைத்து, 10 மி.லி, அளவு எடுத்து, 50 மி.லி, தயிரில் கலந்து குடித்தால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.வில்வ காயை வெயிலில் காய வைத்து, அதை எரித்து கரியாக்கி, பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களில் உண்டாகும் நோய்களை போக்கும்.வில்வ மரத்தின் பட்டையை நீரில் கொதிக்க வைத்து, வடி கட்டி, காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு கொடுக்கலாம். இது, எல்லாவித காய்ச்சல்களையும் கட்டுக்குள் கொண்டு வரும்.

1 2 ... 22 23 24 25 26 27 28 ... 33 34

AD's



More News