25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 14.06.2025 அன்று நடைபெறவுள்ளது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 14.06.2025 அன்று நடைபெறவுள்ளது

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை / நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 14.06.2025-ந் தேதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்பட்டுவரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

எனவே, இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.

மேலும், வாடகை வீட்டில் வசித்து வரும் புதிய குடும்ப அட்டை கோரும் விண்ணப்பதாரர்கள்  வாடகை ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், தனி மின்சார கட்டண அட்டை, தனி எரிவாயு இணைப்பு அல்லது தனி சொத்து வரி ரசீது ஆகியவற்றில் ஏதேனும் இரண்டு ஆவணங்களை இணைத்து  இணையவழியில்  விண்ணப்பம் செய்துகொள்ளலாம்.

AAY மற்றும் PHH மின்னணு குடும்ப அட்டைதாரர்களில் (குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்) கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்கள் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு கைவிரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம்.

 மின்னணு குடும்ப அட்டையில் கைவிரல் ரேகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமை தோறும் இம்முகாம் நடைபெறும் அதனை பயன்படுத்தி கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News