25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் பொது மக்களுடன் இணைந்து நடத்தும் 39-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம் பொது மக்களுடன் இணைந்து நடத்தும் 39-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா .

இராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம்,அனைத்து சமுதாய பெரியோர்களும், பொது மக்களுடன் இணைந்து நடத்தும் 39-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா நிகழ்ச்சிநிரல் கால அட்டவணை

நாள் : 07-09-2026 திங்கட்கிழமை முதல் 14-09-2026 திங்கட்கிழமை வரை

விழாவை துவக்கி வைப்பவர்: தவத்திரு. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள்,

 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசீக பராமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்க உள்ளார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆதினங்கள், ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள், சாது சன்னியாசிகள்.ஆன்மீக வாதிகள். விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆசிகள் வழங்க உள்ளார்கள்.

 

நாள் : ஆவணி மாதம் 21-ம் நாள் (07-09-2026) திங்கட்கிழமை

நேரம் : மாலை 6-00 மணிக்கு மேல் 7-00 மணிக்குள்

மத நல்லிணக்க திருவிழாவாகவும், மேளதான வாத்தியங்களுடன் கோ பூஜை செய்தும் விழா துவங்க உள்ளோம்.

சென்னை சிவகலாலயம் மாணவர்கள் இணைந்து வழங்கும் பரதநாட்டிய குழுவினர்களுடன் பரத நாட்டியம். நடனம்.

நர்த்தனம் திரு. Dr. S. சிவக்குமார் - Dr. S. சைலஜா.  

 

நாள் : ஆவணி மாதம் 22-ம் நாள் (08-09-2026) செவ்வாய்க்கிழமை

நேரம் : மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்

திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி, சன்டிவி தெய்வ தரிசனம் புகழ், "சொல்லரசி"

வாகீச கலாநிதி கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு

 

நாள் : ஆவணி மாதம் 23-ம் நாள் (09-09-2026) புதன்கிழமை

நேரம்: மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்

திருமதி. சிவஸ்ரீ தேஜஸ்வி சூர்யா அவர்கள் குழுவினர்களுடன் நாம சங்கீர்த்தனம் நடைபெறும்.

ஆனந்த பவன் - நிகழ்ச்சி & அன்னதான உபயதாரர். 

.

நாள் : ஆவணி மாதம் 24-ம் நாள் (10-09-2026) வியாழக்கிழமை

நேரம்: மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்

திருமதி. சவிதா ஸ்ரீராம் அவர்கள் குழுவினர்களுடன் தெய்வீக பக்திப் பாடல்கள் நடைபெறும்.

 

நாள் : ஆவணி மாதம் 25-ம் நாள் (11-09-2026) வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்

திரு. இறை அருள் செல்வன் H. சூரியநாராயணன்

அவர்கள் குழுவினர்களுடன் பக்தி பாமாலை நடைபெறும்.

 

நாள்: ஆவணி மாதம் 26-ம் நாள் (12-09-2026) சனிக்கிழமை

நேரம்: மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மடாதிபதிகள். ஆதினங்கள். ஜீயர் சுவாமிகள். சாது சன்னியாசிகள் வருகை தருகிறார்கள். 

குருமகா சன்னிதானங்கள் வரும் நேரமும், தேதியும் பக்தர்களுக்கு மறு அழைப்பிதழில் தெரிவிக்கப்படும். 

 

நாள் : ஆவணி மாதம் 27-ம் நாள் (13-09-2026) ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 6-00 மணிக்கு மேல் மாலை 6-00 மணிக்குள்

திருவாசகம் முற்றோதல் மாபெருந்திருவிழா

கயிலைப் புனிதர் திருவாசகச் சித்தர் சிவதிரு. சிவ தாமோதரன் ஐயா

(சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம், திருக்கழுகுன்றம்) அவர்கள் நடத்துகின்றார்கள்

 

நாள் : ஆவணி மாதம் 27-ம் நாள் (13-09-2026) ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 7-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்

கோவிந்தபுரம் ஸ்ரீ முரளிதரதாஸ் குழுவினரின் நாமபிரச்சார் மற்றும்

அவர்களுடன் இணைந்து திருபுவனம் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமி பஜனை குழுவினரின் திவ்யநாமம் நடைபெறும்.

 

நாள் : ஆவணி மாதம் 28-ம் நாள் (14-09-2026) திங்கட்கிழமை

நேரம் : காலை 5-00 மணிக்கு மேல் 8-00 மணிக்குள்

திரு. ஈங்கோய்மலை ஸ்ரீ லலிதா ஸமாஜம் ஸ்ரீமாதாஜீ அவர்களின் நினைவாகவும் மற்றும் அம்பாஜிகள் ஆசியுடனும் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் & லட்சார்ச்சனை , அபிஷேக ஆராதனை நடத்த உள்ளார்கள்.

 

நாள் : ஆவணி மாதம் 28-ம் நாள் (14-09-2026) திங்கட்கிழமை நேரம் : மாலை 5-00 மணிக்கு மேல் கொடியசைத்து விழாவினை தொடக்கி வைப்பவர்: மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசீக ஸ்ரீ ஞானசம்மந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News