25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆரோக்கியம்

Oct 06, 2024

ரத்தசோகை பாதிப்பு

இரும்புச்சத்து குறைபாடு என்பது உலகம் முழுவதும் மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடாக கருதப்படுகிறது. உலக மக்கள்தொகையில் 30 சதவீதம் பேர் இரும் புச்சத்து குறைபாட்டினால் ரத்தசோகை பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட் டுள்ளனர். பொதுவாக உடலின் பல்வேறு செயல்பாடுக ளுக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. ரத்தத்தில் பிராண வாயுவை கடத்துவதற்கு இரும்புச்சத்து முக்கிய தேவை ஆகும். அன்றாட வாழ்வில் உடல் சோர்வு இன்றி இயங்க இரும்புச்சத்து அவசியம்.உண்ணும் உணவில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாத போது உடலில் உள்ள இரும்புச்சத்து குறைந்து விடும். இது உடலை சோர்வடைய செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, ரத்த சோகைக்கு வழிவகுக்கும். உடலில் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள் ரத்த பரிசோ தனை செய்யும் வரை பெரும்பாலான மக்களுக்கு தெரிவ தில்லை.பொதுவாக, மிகுந்த சோர்வு, கண்ணுக்கு கீழ் கருவளை யம், மூச்சுத்திணறல், முடி உதிர்தல், வெளிர் தோல், கால் களில் ஒரு கூச்ச உணர்வு, தலைவலி, தலைச்சுற்றல், கை கால்களில் குளிர்ந்த உணர்வு, வேகமான இதயத்துடிப்பு, கவலை உணர்வு, நாக்கு, வாய் வீக்கம், எளிதாக உடையும் நகங்கள் ஆகிய அறிகுறிகள் உடலில் இரும்புச்சத்து குறை பாட்டினால் ஏற்படுகிறது.இரும்புச்சத்து குறைபாட்டால் கடுமையான மறதி மற்றும் தூக்கத்தன்மை இருந்து கொண்டே இருக்கும். படி ஏற முடியாது. மூச்சுதிணறல் ஏற்படும். இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டு தீவிரமான நிலைகளில் இதய தாக்குதல் வரை ஏற்படும். 

Sep 29, 2024

வாய்ப்புண் வருவது சாதாரண விஷயம் என்றாலும், அப்படியே விட்டுவிட்டால் பல உடல் உபாதைகளை கொண்டுவந்து விட்டுவிடும்

வாய்ப்புண்கள் என்பது, எந்த வயனதிருக்கு வேண்டுமானாலும் வரலாம்..சாப்பாடு, மருந்துகளில் அலர்ஜி இருந்தால் வாய்ப்புண்கள் வரும்.. உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் வாய்ப்புண் வரலாம். வெற்றிலை, புகையிலை, பான்மசாலா, சிகரெட், மதுபானம் போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் வாய்ப்புண் வரலாம்.. இரைப்பையில் புண் இருந்தாலும்,சத்தான உணவை சாப்பிடாதவர்கள்,மனஅழுத்தம் உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போன்றோருக்கும் வாய்ப்புண் வரலாம்..சூடாக காபி, டீ குடித்தாலும்,பெண்களுக்கு மாதவிடாய் நேரத்திலும், கருத்தடை மாத்திரைகளாலும்கூட,வாய்ப்புண் வரலாம்.: இந்த வாய்ப்புண்கள் நம்மை அண்டாமல் இருக்க வேண்டுமானால்,முதலில் சத்தான உணவை சாப்பிட வேண்டும்.. வாய் சுகாதாரம் பேண வேண்டும்..சிகரெட், வெற்றிலை, புகையிலை,பான்மசாலா, மதுபானம் போன்றவற்றை நிறுத்த வேண்டும்.. சத்தான காய்கறிகளையும், முளை கட்டிய பயிறுகளையும், கொண்டை கடலை, பச்சை பட்டாணி,கோதுமை, ராகி, சோயாபீன்ஸ்,பால், தயிர், மோர், முட்டை, ஈரல், நண்டு, கீரை, வெல்லம், தேன், பேரீச்சம்பழம் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.வாய்ப்புண்களுக்கு கோவைக்காய் மிகவும் நல்லது.. முடிந்தால் பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பினாலே,புண்கள் ஆறுமாம்.. அல்லது கோவைக்காயை மோருடன் அரைத்து குடித்தாலும் வாய்ப்புண்கள் அகலும். மீன், மாமிசங்களை சாப்பிடும்போது,உடலில் அமில தன்மையை அதிகரிக்க செய்துவிடும் என்பதால், புண்கள் ஆறும்வரை இவைகளை தவிர்க்க வேண்டும். வாய்ப்புண்ணுக்கு வைட்டமின்C குறைவுதான் காரணம் என்பதால்,ஆரஞ்சு பழம் சாப்பிடலாம்..அல்லது காய்ச்சாத குளிர்ந்த பாலை, வாய்ப்புண்களின் மீது அடிக்கடி வைத்தாலும் தீர்வு கிடைக்கும்..தேன் அல்லது வெண்ணெய்யை, வாய்ப்புண்ணில் தடவி வந்தால், விரைவில் குணமாகும். பாலில் தேனை கலந்து குடித்து வந்தாலும், வாய்ப்புண் குணமாகும். தேங்காய் எண்ணெயுடன் தேனை கலந்து புண்களில் தடவினாலும் நிவாரணம் கிடைக்கும். தேங்காய் பாலுக்கு புண்களை ஆற்றும் சக்தி உள்ளதால், தேங்காய் பாலை குடிக்கலாம். இந்த லிஸ்ட்டில் இளநீரையும் சேர்த்து கொள்ளலாம். உடலில் நீர்ச்சத்து எப்போதும் இருப்பதுபோல பார்த்து கொள்ள வேண்டும்.ஒருசில மூலிகைகளும் வாய்ப்புண்ணுக்கு மருந்தாகிறது.. புதினா இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, அதன் சாற்றை மட்டும் எடுத்து, புண்களின்மீது தடவினால் எரிச்சல் நீங்கி, குணமாகும். துளசி இலைகளை நான்கைந்து கழுவி வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலும்,வாய்ப்புண்கள் ஆறும். மணத்தக்காளியின் ஐந்தாறு இலைகளை எடுத்து, கழுவி அப்படியே மென்று அதன் சாற்றை விழுங்கினாலும் புண்கள் ஆறும்..இந்த மணத்தக்காளி, கொய்யா இலைகளும்கூட வாய்ப்புண்களை ஆற்றக்கூடியவைதான்.. இலைகளை கழுவி சுத்தம் செய்து,நெய்யில் வதக்கி துவையல் போல அரைத்து சாப்பிடுவதால் வாய்ப்புண்கள் மெல்ல ஆறும்.. குடல் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும்.வயிறு சுத்தமாக இருந்தாலே வாயில் புண்கள் ஏற்படாது., வாயில் புண் கடினமாகிவிட்டால் அதிக வலி ஏற்படும்.. சாப்பிட முடியாது, தூங்கவும் முடியாது.. உதடுகளும் வீங்கிவிடும்..  பல் டாக்டரை வருடம்2 முறையாவது சந்தித்து வாயை முறையாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் தற்காலிக தீர்வு தான் என்றாலும்,வெகு நாட்களாக வாய்ப்புண்கள் இந்தால், உடனே டாக்டரிடம் செல்ல வேண்டும். ஏனென்றால்,இதுவே, நாளடைவில் வாய் கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே, வாய்ப்புண்2 நாட்களில் ஆறாவிட்டால், உடனடியாக அதற்கான காரணத்தை அறிந்து முறையானசிகிச்சையைமருத்துவர்களிடம் பெற வேண்டியது கட்டாயமாகும்.

Sep 22, 2024

தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிட…

இயல்பாகவே இஞ்சில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.. வைட்டமின் C, B1, B2 போன்ற அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் இஞ்சியில் நிறைந்திருக்கின்றன. இதனால், இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்தநாளங்களில் அடைப்பு உண்டாவதை தடுக்கும் குணத்தை இஞ்சி பெற்றிருக்கிறது.எனவேதான், தேனில் இஞ்சியை ஊறவைத்து சாப்பிட சொல்கிறார்கள். இதனால், கூடுதல் பலன் கிடைக்கிறது.. குறிப்பாக, வயிறு உப்புசம், வயிறு வலி, வயிறு கோளாறு போன்ற வயிறு உபாதைகள் நீங்குகின்றன. தேனில் ஊறவைத்த இஞ்சியில், தினமும் ஒரு துண்டு, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும்போது, தொப்பை மெல்ல கரைய துவங்குமாம்.  சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில், இஞ்சி புற்றுநோயைத் தடுப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோய் உடல் முழுவதும் பரவுவதை இஞ்சி தடுக்கின்றன. ஆஸ்துமா, மூட்டுவலி, சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் அனைவருக்குமே தேனில் ஊற வைத்த இஞ்சி மிகவும் நல்லது. உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை இஞ்சி தடுப்பதுடன், டிஎன்ஏ பாதிப்பையும் தடுத்துநிறுத்தி, முதுமை தோற்றத்தையும் அண்டவிடாமல் செய்கிறது. நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க விரும்புவர்கள் தேனில் ஊற வைத்த ஒரு இஞ்சியை தினமும் சாப்பிட்டாலே போதும் என்கிறார்கள்

Sep 18, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் அரை நெல்லிக்காய்

 அரை நெல்லிக்காயில் இரும்பு, கால்சியம், வைட்டமின் சி, பாஸ்பரஸ் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன.இதை ஊறுகாய் போல் செய்யாமல் பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் அதன் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று அரை நெல்லிக்காய் சாப்பிடலாம்.அரை நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக, அடர்த்தியாக இருக்க செய்யும். நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு இது உதவும்.இக்காயில் உள்ள வைட்டமின் சி உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிஜென்ட்டுகள் சருமத்தினை பளபளக்க செய்யும்.கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு. அதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.இதில் இருக்கும் உடலுக்கு தேவையான இரும்பு சத்து ரத்த சோகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.வயிற்று புண், நெஞ்செரிச்சல், ஜீரணக்கோளாறுகள், மலச்சிக்கல் என வயிறு சார்ந்த அனைத்து உபாதைக்கும் நல்ல மருந்தாக இவை உள்ளது.தலை சுற்றல், மயக்கம், வாந்தி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக அரை நெல்லிக்காய் இருக்கும்.

Sep 17, 2024

தினமும் 1 -தேனில் ஊற வெச்ச நெல்லிக்காய்

தேன் மிகச்சிறந்த அருமருந்து என்பதால்தான், மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் இந்த தேனில் ஊறவைத்து சாப்பிடப்படுகிறது. அதிக அளவிலான வைட்டமின் C, ஆண்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த நெல்லிக்காய், நோய்த்தொற்றுகள் நம்மை எளிதில் அண்டவிடாமல் தடுக்கிறது. ஆப்பிள்களைவிட சிறந்த பண்புகளை கொண்டிருக்கும் நெல்லிக்காய், ஹீமோகுளோபின் பிரச்சனையை சரி செய்யக்கூடியவை. ரத்தம் சுத்தமாகும்.. ரத்த அணுக்களின் அளவும் அதிகரிக்கும். தினமும் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பட்டு வந்தால், இதய தசைகள் வலிமையடைந்து, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும். நெல்லிக்காய் + தேன் இரண்டுமே ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான ஆதாரங்கள் என்பதால், உடலுக்கு கெடுதலை தரும் ப்ரீ-ராடிக்கல்களினால் ஏற்படும் அபாயத்தை தடுக்கின்றன.கண் சம்பந்தமான கோளாறு உள்ளவர்களுக்கு, இந்த தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை மிகவும் நல்லது.. இதனால் கண் எரிச்சல், கண்களில் இருந்து நீர் வடிதல், கண் சிவந்து போகுதல், போன்றவை நீங்கிவிடும்.. கம்ப்யூட்டரில் எந்நேரமும் வேலை பார்ப்பவர்களுக்கு, தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் அற்புதமான மருந்தாகும். வெள்ளைப்படுதல் தொந்தரவு உள்ள பெண்களும் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம்.. வெள்ளைப்படுதல் பிரச்சனை தீர்வதுடன், அதிகப்படியான மாதவிலக்கு உள்ளிட்ட கருப்பை சம்பந்தமான பாதிப்புகளும் நீங்கிவிடும்.. நெல்லிக்காயில் கலோரிகள் குறைவு, நார்ச்சத்து அதிகம் என்பதால், உடலுக்கு ஆரோக்கியமான உணவாக திகழ்கிறது. செரிமான கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கல், அஜீரணமும் நீங்கும்.. நெல்லிக்காய், தேன் இரண்டுமே சரும ஆரோக்கியத்தை காக்கக்கூடியவை. மேம்படுத்த உதவும். இதனால் தோல் தொந்தரவுகள் நெருங்குவதிலலை., தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கக்கூடும்.. அதுமட்டுமல்லாமல் சிலருக்கு நெல்லிக்காயை அதிகம் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினமும் அளவாகவும், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடுவது பாதுகாப்பானது

Sep 11, 2024

உடல் எடை அதிகரிக்கணுமா?

உடல் மெலிந்து காணப்படுபவர்கள் உடல் எடை அதிகரிக்க ,இவற்றை எல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.தினம் ஒரு கைப்பிடி அளவு முந்திரி மற்றும் உலர் திராட்சை.தினம் இரண்டு வாழைப்பழம்.அடிக்கடி கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிடுதல் .அதிக அளவு மீன், இறால், முட்டை சாப்பிடுதல்.பாதாம், பாலாடைக்கட்டி கிழங்கு வகையில், உருளை கிழங்கு சேனைக்கிழங்கு.அதிக அளவு பீன்ஸ்.  *.தேங்காய் பால், ஆளி விதை மற்றும் பாஸ்தா.இது போன்ற உணவுகளைசாப்பிட்டு் வந்தால் ஆரோக்கிய முறையில் உடல் எடை அதிகரிக்கும்

Sep 08, 2024

மூட்டு வலி குணமடைய.....

பூண்டு இலைகளை வேப்ப எண்ணெய்யில் வதக்கி மூட்டுப் பகுதியில் கட்டலாம். மூக்கிரட்டை வேரை நன்கு கசக்கி, தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை பருகலாம். கொய்யா இலைகளை அரைத்து, மூட்டுப் பகுதியில் பூசலாம்  சூடான பாலில் 3 ஏலக்காய், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இரவில் அருந்தலாம். அத்திப்பாலை மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமடையலாம்.

Sep 06, 2024

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை

ஆரைக்கீரைகுளிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியது.மழை மற்றும் குளிர் காலத்தில் தான் இந்த கீரை எங்கும் கிடைக்கும், கோடை காலத்தில் கிடைப்பது அரிது.நீர் நிலைத்து நிற்கும்  இடத்தில் செழித்து வளரும், கீரையின் ஒரே நரம்பின் உச்சியில், நான்கு இலைகளுடன் காணப்படும்.பச்சை நிறத்துடன் மெல்லியதாகவும், வட்டமாக இருக்கும், சமைத்தால் புளிப்பு ருசியுள்ளதாக இருக்கும், இதற்கு புளியாரை என்று கூறுவார்கள்.ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இந்த கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடலாம், சாம்பார் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பொறியலாகவும் செய்யலாம்'.சிலருக்கு அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் இறங்கும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கட்டுப்பட்டு, சரியான அளவில் வெளியேறும்.சிலருக்கு ரத்தத்தில் பித்தம் அதிகமாகி அமிலத்தன்மை ஏற்பட்டு பித்த கோளாறுகளை உண்டுபண்ணும், தொடர்ந்து இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த பிரமேகம் நோய் முற்றிலும் குணமாகும்.பித்த கிறுகிறுப்பு, பித்த வாந்தி, தலைவலி போன்ற பித்த சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.இக்கீரையை உணவில் உட்கொண்டு வர, ரத்த போக்கும், வெள்ளைபாடு நிவர்த்தியாகும். 

Sep 05, 2024

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....

இதயத்தைப் போலவே சிறுநீரகமும் நம் உடலின் முக்கியமான உறுப்பு.உடலில் உள்ளஅழுக்குகளை அகற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன.ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டு சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கிறது.ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளை சாப்பிடுவது உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.தர்பூசணி தண்ணீர் சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவும்.

Sep 04, 2024

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கேரட்

இயற்கையாகவே இனிப்புச் சுவை உடைய. கேரட்டைச் சமைத்து உண்பதை விடப் பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள பெரும்பாலான சத்துகள் விரயமாகாமல் உடலுக்குள் போகும்.பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகியசத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாசியம், ஃபோலிக் அமலம், கோலின், கால்ஷியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச்சத்தும் கேரட்டில் இருக்கிறது. கண் பார்வை கூர்மையடையவும், தோல் மற்றும் எலும்பு உறுதி ஆகவும், ரத்த விருத்திக்கும் இது மிகவும் நல்லது.வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கண்ணுக்கும், சருமத்துக்கும், உடல் வளரச்சிக்கும் மிகவும் உதவுகிறது.இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அகலும், மேலும் குடல் புண் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதால் இதய நோய்களை அண்டவே விடாது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதால் வாரத்தில் இரண்டு நாட்களாவது சமையலில் கேரட்டைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. பக்கவாதத்தை அண்டவிடாது.

1 2 ... 23 24 25 26 27 28 29 ... 35 36

AD's



More News