சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாத்விக்–சிராக் சாம்பியன்.
சீனாவில் ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி–சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ஜியாங் யு ரென்–ஜி டிங் ஹி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 11-21 என்ற கணக்கில் இழந்தது. இருப்பினும், அடுத்த செட்டில் சிறப்பாக விளையாடிய சாத்விக்–சிராக் ஜோடி 21-13 என வென்று போட்டியை சமன் செய்தது.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டிலும் அசத்திய இந்திய ஜோடி 21-17 என வெற்றி பெற்றது.
ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நீடித்த போட்டியில், சாத்விக்–சிராக் ஜோடி 11-21, 21-13, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சீனா மாஸ்டர்ஸ் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. நடப்பு சீசனில் இந்திய ஜோடி வெல்லும் 2-வது பட்டம் இதுவாகும். இதற்கு முன்பு சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓபனிலும் இவர்கள் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
0
Leave a Reply