25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற அத்திப்பழம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற அத்திப்பழம்.

அத்திப்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கிறது. ஒரு அத்திப்பழத்தில் சுமார்30 கலோரிகள்,9 கிராம் கார்போஹைட்ரேட்,6 கிராம் இயற்கைச் சர்க்கரை,1 கிராம் நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. மேலும், இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்புச்சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.

அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மைகள் மற்றும் நார்ச்சத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.35 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாக பார்க்கப்படுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மந்தமாக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்கும். மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழத்தை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் இது அவர்களுக்கு பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News