உலக பாரா வில்வித்தை தகுதிச் சுற்றில் ஷீத்தல் தேவி அசத்தல்.
ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் நடைபெற்று வருகிறது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு தகுதிச் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி (19) பங்கேற்றார்.
பிறக்கும்போதே இரு கைகளும் இல்லாத ஷீத்தல் தேவி, வலது கால் மற்றும் தோளின் உதவியுடன் வில்லை நிலைநிறுத்தி, வாயால் அம்பை செலுத்தி இலக்கை துல்லியமாகத் தாக்கி அசத்தினார்.
ஆண்களுக்கான தனிநபர் ‘காம்பவுண்டு’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராகேஷ் குமார் 702 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான தோமன் குமார் 696 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும், குர்விந்தர் சிங் 689 புள்ளிகளுடன் 8-வது இடத்தையும் பிடித்து நேரடியாக 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
0
Leave a Reply