25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முக்கிய அறிவிப்பு

May 12, 2025

ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி .

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் ,மதுரை மீனாட்சி புக் ஷாப், இணைந்து 5 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ், ஆங்கில புத்தகங்கள்  ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது.இங்கு இன்றுவரை சாகித்ய அகடமி விருது பெற்ற நாவல்கள்,  இலக்கியம், நாவல், சரித்திரம், ஆன்மி கம், மருத்துவம், ஜோதிடம், தன்னம்பிக்கை, அனைத்து போட்டி தேர்வுகள் பற்றிய புத்தகங்கள், யார் இந்த மோடி? பணம் சார் உளவியல், வேள்பாரி, பண வாசம் போன்ற அதிக தேடல் உள்ள புத்தகங்கள் உள்ளன.எழுத்தாளர்கள் சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், இந்திரா சவுந்தர்ராஜன், வரலொட்டி ரெங்கசாமி, வெங்கடேசன், வேலராமமூர்த்தி, யுகபாரதி உள்ளிட்ட எழுத்தாளர்கள படைப்புகள் இங்கு உள்ளன.மே 15 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். 10 சதவீத தள்ளுபடியில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் கிடைக்கும். 

May 09, 2025

இராஜபாளையம் இராஜூக்கள் கல்லூரி நன்கொடை இல்லை(இருபாலர் பயிலும் கல்லூரி)

வழங்கப்படும் படிப்புகள்கேபிடேஷன் கட்டணம் இல்லைஅரசு உதவிபெறும் பாடப்பிரிவுகள்B.Com, B.A (வரலாறு), B.Sc (வேதியியல்),கல்விச் சேவையில் 52 ஆண்டுகள்B.Sc (கணிதம்), B.Sc (இயற்பியல்), M.A (வரலாறு), M.Com.,சுயநிதி பாடப்பிரிவுகள்B.Com, B.Com (Computer Application), BBA, B.A (Tamil), B.A (English), B.Com (Professional Accounting), B.Sc (Computer Science), M.A (English), M.Sc (Maths), M.Sc (Computer Science), M.Com. Part TimeD (வரலாறு, வணிகம், வேதியியல், இயற்பியல், கணிதம், தமிழ் & உடற்கல்வி)சிறப்பம்சங்கள்மிக குறைந்த கல்வி கட்டணம் மூன்று பகுதிகளாக கல்வி கட்டணத்தை செலுத்தும் வசதி.இருபாலருக்கும் தனித்தனியே விடுதி வசதி.விளையாட்டு மற்றும் +2 வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை.குறைந்த கட்டணத்தில் கல்லூரி பேருந்து வசதி.நவீன வசதிகளுடன் கூடிய புதிய அறிவியல் வளாகம்.அனைவருக்கும் கணினி வசதி.நவீன நீச்சல்குளம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஜிம் (GYM) வசதி,போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்.விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள். கல்விச் சுற்றுலா மூலம் மகிழ்ச்சியான கல்வி சூழல்.கல்விக்கான சிறந்த வேலைவாய்ப்பு2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவ / மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.*+2 தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை நடைபெறும்.சேர்க்கையின்போது தேவைப்படும் ஆவணங்கள்+2 மதிப்பெண்கள் பிரிண்ட் அவுட் (ஆன்லைன்) -1ஆதார் கார்டு நகல் 1 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2ஸ்பாட் அட்மிஷன்*ஜாதி சான்றிதழ் நகல் -தொடர்புக்கு - 9994531935, 94894 84267.

May 09, 2025

அன்பு சொந்தங்களே ,அன்பு வேண்டுகோள்.

பல பொய்யான தகவல்கள் பரவி வருவதால், Facebook, WhatsApp, X மற்றும் Instagram பயன்டுத்துவோர்க்கு எச்சரிக்கை - இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதால், மக்களை அரசு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளது. தற்போதைய இந்தியா-பாகிஸ்தான் நிலைமை தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தை நீங்கள் கண்டால், அதை PIBFactCheck-க்கு புகாரளிக்கவும்.”இதற்காக, பயனர்கள் +91 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண்ணில் செய்தி அனுப்பலாம் அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

May 09, 2025

ராம்கோ சிமிண்ட்ஸ் மற்றும்,பீமா ஜூவல்லர்ஸ் ஆதரவுடன் கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள்.

இராஜபாளையம் நகர் கூடைபந்து கழகம் நடத்தும் ராம்கோ சிமிண்ட்ஸ் மற்றும்,பீமா ஜூவல்லர்ஸ் ஆதரவுடன் இந்திய அளவிளான கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் இடம்: -P.A.C.M மேல்நிலைப்பள்ளி, P.S.K நகர் இராஜபாளையம். : 10.05.2025  முதல்   15.05.2025 வரை ,மாலை 5.30 மணி முதல் .

May 04, 2025

நாளை ராஜபாளையம் தாலுகா மக்களின் மின் குறைதீர் முகாம்.

 நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மே 6 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப் பட்ட குறைகளை நேரில் தெரிவித்து மக்கள் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,என  முத்துராஜ்  மின் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Apr 27, 2025

டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA  மற்றும்   FL 11   ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,1981-ன்படி, தொழிலாளர்  தினமான 01.05.2025 (வியாழக்கிழமை) அன்று  தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. .   மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ;  (FL1) மற்றும் FL2/FL3/ FL3A/FL3AA  மற்றும் FL11  மதுபான உரிம ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது  The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 21, 2025

ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம்

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம் 24.04.2025 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும் அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.30 மணி அளவில் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவிலில் ஸ்தாபகர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும், ஸ்தாபகரின் ஜோதிக்கும் பூஜைகள் நடத்தி பின்னர் ஜோதியினை ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, மத்தியசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக தொடர் ஓட்டத்தின் மூலம் ராமசாமி ராஜா நகருக்கு (துலுக்கப்பட்டி) ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எடுத்துச்செல்வார்கள்.காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24.04.2025 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில் "கலா ரத்ன" "இசை அரசர்" ஸ்ரீ சந்தீப் நாராயண் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

Apr 17, 2025

ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும்,எலும்பு நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ ஆலோசனை

மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்எலும்பு நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இராஜபாளையம் வருகைமுழங்கால். தோள்பட்டை ,  தண்டுவடம் மற்றும் குழந்தை எலும்பியல் நோய் சிறப்பு மருத்துவர்கள்(விளையாட்டு காயங்கள், முழங்கால், முதுகெலும்பு மற்றும் குழந்தைகளின் ஆர்த்தோ) மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்படும்இரத்த அழுத்தம்இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Random)மருத்துவரின் ஆலோசனைஇவை அனைத்தும் ரூ.100/- மட்டுமே!X-RAY 50% சலுகைக் கட்டணத்தில் பார்க்கப்படும்.பழைய எக்ஸ்ரே, ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தால் கொண்டு வரவும்நாள் :19-04-2025 (சனிக்கிழமை)நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரைஇடம் : இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் நகர், இராஜபாளையம். முன்பதிவிற்கு: 88870 88873.

Apr 06, 2025

இராஜபாளையம்,ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாலய வாருஷீக ப்ரதிஷ்டாதின அழைப்பிதழ்.

ஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய மஹாஸம்ஸ்தானம் தக்ஷிணாம்னாய சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், இராஜபாளையம் கிளைஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாலய வாருஷீக ப்ரதிஷ்டாதின அழைப்பிதழ்10.04.2025 வியாழக்கிழமை நிகழ்ச்சி நிரல்காலை 7.35 மணிகுருவந்தனம், கணபதி பூஜை, அனுக்ஞை புண்யாஹவாசனம், மஹாஸங்கல்பம்காலை 7.50 மணிஸ்ரீராஜகணபதிக்கு அதர்வஷீர்ஷ பாராயணத்துடன் அபிஷேகம்காலை 8.15 மணிஸ்ரீ ஆதிசங்கரபகவத்பாதாசார்யர்க்கு ஸ்ரீ ருத்ர பாராயண அபிஷேகம்காலை 8.45 மணிஸ்ரீ சாரதாம்பாளுக்கு ஸ்ரீதுர்கா, ஸ்ரீ சூக்த பாராயண அபிஷேகம்காலை 9.15 மணிஸஹஸ்ரநாம அர்ச்சனைகாலை 10.00 மணிதீபாராதனை, ப்ரசாதம்மாலை 6.30 மணிஸஹஸ்ரநாம, த்ரிஷதீ அர்ச்சனைகள்மாலை 7.15 மணிரதோற்சவம் இப்படிக்கு ஸ்ரீ பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி, இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்.

Apr 03, 2025

தமிழ்நாடு மின் பகிர்மான கோட்ட அலுவலகங்களில் 05.04.2025 அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொ) அவர்கள் தகவல்.

மின் நுகர்வோர் மற்றும் பொது மக்களிடமிருந்து மின் கட்டணத்தொகை வேறுபாடு மின் மீட்டர்கள் மாற்ற வேண்டியது, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுவது மற்றும் குறைந்த மின் அழுத்தம் சரி செய்தல் போன்ற புகார்கள்  இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர் (இ&ப) அலுவலகங்களிலும் ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில், 05.04.2025  அன்று அருப்புக்கோட்டை கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், பெத்தம்மாள் கோவில் எதிரில், திருச்சுழி ரோடு, அருப்புக்கோட்டை. விருதுநகர் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், ராமமூர்த்தி ரோடு, விருதுநகர்.சிவகாசி கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், காரனேசன் ரோடு, பெல் ஹோட்டல் எதிரில், சிவகாசி. திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், கோட்டைப்பட்டி, திருவில்லிபுத்தூர்.இராஜபாளையம் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், சத்திரப்பட்டி ரோடு, பொன்னகரம், இராஜபாளையம் ஆகிய இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 26 27

AD's



More News