25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா  அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம்

ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம் 24.04.2025 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும் அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.

காலை 7.30 மணி அளவில் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவிலில் ஸ்தாபகர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும், ஸ்தாபகரின் ஜோதிக்கும் பூஜைகள் நடத்தி பின்னர் ஜோதியினை ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, மத்தியசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக தொடர் ஓட்டத்தின் மூலம் ராமசாமி ராஜா நகருக்கு (துலுக்கப்பட்டி) ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எடுத்துச்செல்வார்கள்.

காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 

24.04.2025 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில் "கலா ரத்ன" "இசை அரசர்" ஸ்ரீ சந்தீப் நாராயண் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News