25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சட்டமன்றத்தில் 3 முக்கிய அறிவிப்புகள் – முதல்வர் விஜய்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சட்டமன்றத்தில் 3 முக்கிய அறிவிப்புகள் – முதல்வர் விஜய்.

சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் 3 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

 அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ் திட்டம்.

அன்னபூர்ணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக பொங்கல் முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்பங்கள் மற்றும் நலிந்த குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெறுவார்கள்.

 பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுகிறது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மீனம்பாக்கம் விமான நிலையம் மேலும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 'வெற்றிப் பயணம்' – பெண்களுக்கு விரிவுபடுத்தப்படும் இலவசப் பேருந்துப் பயணம்

மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் 'வெற்றிப் பயணம்' என்ற பெயரில் அக்.2, காந்தி ஜெயந்தி முதல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக மாநகரம் மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் Express, LSS, Deluxe அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும் வகையில் புறநகர் (Mofussil) மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டண அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம் வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தில்:

  • வருமான உச்சவரம்பு கிடையாது.
  • பயணங்களின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை.
  • திருநங்கைகளும் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
  • இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ₹6,000 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News