டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி, தொழிலாளர் தினமான 01.05.2025 (வியாழக்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ; (FL1) மற்றும் FL2/FL3/ FL3A/FL3AA மற்றும் FL11 மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply