லயன்ஸ் கிளப் ஆப் இராஜபாளையம் சக்கராஜா கோட்டை ராஜுக்கள் சங்கம் மெட்ராஸ் ENT ரிசர்ச் பவுண்டேசன் மற்றும் இன்ஸ்ட்டியூட் ஆப் ஸ்பீச் ஹாண்ட் இயரிங் (பி) லிமிடெட்இணைந்து நடத்தும்இலவச காது, மூக்கு, தொண்டை மருத்துவ முகாம் 6 வயதிற்குட்பட்ட பிறவி காது கேளாமைக்கான இலவச அறுவை சிகிச்சைகுழந்தைகள், பெரியவர்களுக்கான காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ பரிசோதனை முகாம்MJF Lion P. A. B. ராஜூ அவர்கள் நினைவாக முன்னாள் மாவட்ட ஆளுநர் 32484( 1991-92),முன்னாள் தலைவர், சக்கராஜா கோட்டை ராஜுக்கள் மகாசபை நாள் : 25.05.2025 ஞாயிற்றுக்கிழமைநேரம்: காலை 10.00 to 2.30 மணி வரைஇடம் : சக்கராஜா கோட்டை பூசப்பாடி தாயாதியார் பண்ணை மாளிகை ஸ்ரீ P.A.C.ராமசாமி ராஜா கல்யாண மண்டபம், சக்கராஜா கோட்டை இராஜபாளையம்.இம்முகாமில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 6 வயதிற்குப்பட்ட பிறவியிலேயே வாய்பேச முடியாத காது கேட்காத குழந்தைகள் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். முன்பதிவு செய்யும் நாட்கள் : 18.05.2025 to 24.05.2025, சக்கராஜக்கோட்டை அலுவலகம். முன்பதிவிற்கு செல் நம்பர் :V.ரமேஷ் (MERF ENT) - 99945 31168Lion T.K. ராதாகிருஷ்ணன் - 94438 69338 Lion S. ரமணன் - 94980 28429Lion K. தியாகராஜன் - 97510 34303A.S. கோபால் ராஜா -97916 62932
விருதுநகர் மாவட்டம், சிவகாசி - திருத்தங்கல் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 424 Rly KM: : 559/700-800 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே 24.05.2025 அன்று இரவு 11.00 மணி முதல் 25.05.2025 அன்று காலை 06.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழிதடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் ,மதுரை மீனாட்சி புக் ஷாப், இணைந்து 5 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ், ஆங்கில புத்தகங்கள் ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்து வரும் புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு உள்ளது.இங்கு இன்றுவரை சாகித்ய அகடமி விருது பெற்ற நாவல்கள், இலக்கியம், நாவல், சரித்திரம், ஆன்மி கம், மருத்துவம், ஜோதிடம், தன்னம்பிக்கை, அனைத்து போட்டி தேர்வுகள் பற்றிய புத்தகங்கள், யார் இந்த மோடி? பணம் சார் உளவியல், வேள்பாரி, பண வாசம் போன்ற அதிக தேடல் உள்ள புத்தகங்கள் உள்ளன.எழுத்தாளர்கள் சுஜாதா, எஸ். ராமகிருஷ்ணன், கண்ணதாசன், கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், இந்திரா சவுந்தர்ராஜன், வரலொட்டி ரெங்கசாமி, வெங்கடேசன், வேலராமமூர்த்தி, யுகபாரதி உள்ளிட்ட எழுத்தாளர்கள படைப்புகள் இங்கு உள்ளன.மே 15 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். 10 சதவீத தள்ளுபடியில் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் கிடைக்கும்.
வழங்கப்படும் படிப்புகள்கேபிடேஷன் கட்டணம் இல்லைஅரசு உதவிபெறும் பாடப்பிரிவுகள்B.Com, B.A (வரலாறு), B.Sc (வேதியியல்),கல்விச் சேவையில் 52 ஆண்டுகள்B.Sc (கணிதம்), B.Sc (இயற்பியல்), M.A (வரலாறு), M.Com.,சுயநிதி பாடப்பிரிவுகள்B.Com, B.Com (Computer Application), BBA, B.A (Tamil), B.A (English), B.Com (Professional Accounting), B.Sc (Computer Science), M.A (English), M.Sc (Maths), M.Sc (Computer Science), M.Com. Part TimeD (வரலாறு, வணிகம், வேதியியல், இயற்பியல், கணிதம், தமிழ் & உடற்கல்வி)சிறப்பம்சங்கள்மிக குறைந்த கல்வி கட்டணம் மூன்று பகுதிகளாக கல்வி கட்டணத்தை செலுத்தும் வசதி.இருபாலருக்கும் தனித்தனியே விடுதி வசதி.விளையாட்டு மற்றும் +2 வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை.குறைந்த கட்டணத்தில் கல்லூரி பேருந்து வசதி.நவீன வசதிகளுடன் கூடிய புதிய அறிவியல் வளாகம்.அனைவருக்கும் கணினி வசதி.நவீன நீச்சல்குளம், உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஜிம் (GYM) வசதி,போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்.விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகள். கல்விச் சுற்றுலா மூலம் மகிழ்ச்சியான கல்வி சூழல்.கல்விக்கான சிறந்த வேலைவாய்ப்பு2025-2026 ஆம் ஆண்டிற்கான மாணவ / மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.*+2 தேர்வு முடிவுகள் வெளியான நாள் முதல் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை நடைபெறும்.சேர்க்கையின்போது தேவைப்படும் ஆவணங்கள்+2 மதிப்பெண்கள் பிரிண்ட் அவுட் (ஆன்லைன்) -1ஆதார் கார்டு நகல் 1 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2ஸ்பாட் அட்மிஷன்*ஜாதி சான்றிதழ் நகல் -தொடர்புக்கு - 9994531935, 94894 84267.
பல பொய்யான தகவல்கள் பரவி வருவதால், Facebook, WhatsApp, X மற்றும் Instagram பயன்டுத்துவோர்க்கு எச்சரிக்கை - இந்தியா பாக்கிஸ்தானுக்கு இடையே மோதல் நடைபெற்று வருவதால், மக்களை அரசு எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டு கொண்டுள்ளது. தற்போதைய இந்தியா-பாகிஸ்தான் நிலைமை தொடர்பான ஏதேனும் சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கத்தை நீங்கள் கண்டால், அதை PIBFactCheck-க்கு புகாரளிக்கவும்.”இதற்காக, பயனர்கள் +91 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண்ணில் செய்தி அனுப்பலாம் அல்லது factcheck@pib.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இராஜபாளையம் நகர் கூடைபந்து கழகம் நடத்தும் ராம்கோ சிமிண்ட்ஸ் மற்றும்,பீமா ஜூவல்லர்ஸ் ஆதரவுடன் இந்திய அளவிளான கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் இடம்: -P.A.C.M மேல்நிலைப்பள்ளி, P.S.K நகர் இராஜபாளையம். : 10.05.2025 முதல் 15.05.2025 வரை ,மாலை 5.30 மணி முதல் .
நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மே 6 காலை 11:00 மணி முதல் குறைகளை கேட்டறிய இருப்பதால், மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரிய சம்பந்தப் பட்ட குறைகளை நேரில் தெரிவித்து மக்கள் இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்,என முத்துராஜ் மின் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி, தொழிலாளர் தினமான 01.05.2025 (வியாழக்கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. . மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ; (FL1) மற்றும் FL2/FL3/ FL3A/FL3AA மற்றும் FL11 மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் இராஜபாளையம் நகர் தொழில் தந்தை பெருந்தகை ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் 131 வது பிறந்தநாள் உத்சவம் 24.04.2025 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமிராஜா நினைவு இசைப்பள்ளி குழுவினரால் கீர்த்தனாஞ்சலியும் அதனைத் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.காலை 7.30 மணி அளவில் இராஜபாளையம் அருள்மிகு சொக்கர் கோவிலில் ஸ்தாபகர் அவர்களின் திருஉருவப்படத்திற்கும், ஸ்தாபகரின் ஜோதிக்கும் பூஜைகள் நடத்தி பின்னர் ஜோதியினை ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, மத்தியசேனை, சங்கரலிங்காபுரம் வழியாக தொடர் ஓட்டத்தின் மூலம் ராமசாமி ராஜா நகருக்கு (துலுக்கப்பட்டி) ராம்கோ சிமெண்ட்ஸ் ஊழியர்கள் எடுத்துச்செல்வார்கள்.காலை 7.45 மணிக்கு அமரர் ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமிராஜா அவர்களின் திருஉருவச்சிலைக்கு பூஜைகள் நடத்தப்பட்டு அங்கு பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 24.04.2025 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இராஜபாளையம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ P.A.C.ராமசாமிராஜா அரங்கத்தில் "கலா ரத்ன" "இசை அரசர்" ஸ்ரீ சந்தீப் நாராயண் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனையின்எலும்பு நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இராஜபாளையம் வருகைமுழங்கால். தோள்பட்டை , தண்டுவடம் மற்றும் குழந்தை எலும்பியல் நோய் சிறப்பு மருத்துவர்கள்(விளையாட்டு காயங்கள், முழங்கால், முதுகெலும்பு மற்றும் குழந்தைகளின் ஆர்த்தோ) மேலே குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்படும்இரத்த அழுத்தம்இரத்தத்தில் சர்க்கரையின் அளவு (Random)மருத்துவரின் ஆலோசனைஇவை அனைத்தும் ரூ.100/- மட்டுமே!X-RAY 50% சலுகைக் கட்டணத்தில் பார்க்கப்படும்.பழைய எக்ஸ்ரே, ஸ்கேன் ரிப்போர்ட் இருந்தால் கொண்டு வரவும்நாள் :19-04-2025 (சனிக்கிழமை)நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரைஇடம் : இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம், காமராஜர் நகர், இராஜபாளையம். முன்பதிவிற்கு: 88870 88873.