தமிழ்நாடு மின் பகிர்மான கோட்ட அலுவலகங்களில் 05.04.2025 அன்று ஒரு நாள் மட்டும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் (பொ) அவர்கள் தகவல்.
மின் நுகர்வோர் மற்றும் பொது மக்களிடமிருந்து மின் கட்டணத்தொகை வேறுபாடு மின் மீட்டர்கள் மாற்ற வேண்டியது, சேதமடைந்த மின்கம்பங்கள் மாற்றுவது மற்றும் குறைந்த மின் அழுத்தம் சரி செய்தல் போன்ற புகார்கள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் 05.04.2025 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர் (இ&ப) அலுவலகங்களிலும் ஒரு சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில், 05.04.2025 அன்று அருப்புக்கோட்டை கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், பெத்தம்மாள் கோவில் எதிரில், திருச்சுழி ரோடு, அருப்புக்கோட்டை. விருதுநகர் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், ராமமூர்த்தி ரோடு, விருதுநகர்.சிவகாசி கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், காரனேசன் ரோடு, பெல் ஹோட்டல் எதிரில், சிவகாசி. திருவில்லிபுத்தூர் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், கோட்டைப்பட்டி, திருவில்லிபுத்தூர்.இராஜபாளையம் கோட்டத்தில் செயற்பொறியாளர் அலுவலகம், சத்திரப்பட்டி ரோடு, பொன்னகரம், இராஜபாளையம் ஆகிய இடங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0
Leave a Reply