'ஆரன்முழா குறளப்பன் ' திவ்ய தேச பெருமாள் குறை தீர்ப்பவர்.
கேரளா பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முழா திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது. அர்ஜூனன் பூஜித்த குறளப்பன் இங்கு மூலவராக இருக்கிறார். இவரை வழிபட்டால் நம் குறை அனைத்தும் தீரும்.
பாண்டவர்கள் வனவாசம் சென்ற போது கோளப்பகுதிக்கு வந்தனர். பம்பா நதிக்கரையில் நிலக்கல் என்னுமிடத்தில் பெருமாள் சிலை ஒன்றை அமைத்து அர்ஜூனன் வழிபட்டான். பின்னர் சிலையை ஆறு மூங்கில்களால் ஆன கட்டுமரம் ஒன்றில் வைத்து பம்பை ஆற்றில் விட்டான். கரை ஒதுங்கும் இடத்தில் யாராவது கோயில் கட்டட்டும் என்பதே அவனது எண்ணம். மலையாளத்தில் 'ஆறு முழா' (ஆறு மூங்கில்) என்பதற்கு 'ஆறு மூங்கில்' எனப் பொருள்.
சிலையைச் சுமந்த கட்டுமரம் ஆறு மூங்கில்களால் ஆனதால் இத்தலம் 'ஆறுமுழா எனப்பட்டது. காலப்போக்கில் 'ஆரன்முழா' என மாறியது.சிலை கரை சேர்ந்த இடத்தில் பம்பை நதிக்கரையில் இளம்துறவி ஒருவர் வாழ்ந்தார். பெரும் பள்ளமாக இருந்த இப்பகுதியைத் தன் தவசக்தியால் மேடாக்கி கோயில் கட்டினார்.கேரளாவில் மற்ற கோயில்களை விடவும் உயரமான இடத்தில் கோயில் இருப்பது இங்கு மட்டுமே. கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் திருக்குறளப்பன் என்ற பெயரில் மூலவர் இருக்கிறார். தாயார் பெய பத்மாசினி. நம்மாழ்வார் இங்கு பாடியுள்ளா பிரம்மாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, இங்கு பெருமாள் வாமன மூர்த்தியாக காட்சியளித்துள்ளார்.
'வல்லங்களி' எனப்படும் பிரபலமானபடகு போட்டி உருவானது இங்கு தான்.ஆண்டு தோறும் ஆவணி மாத உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று பம்பை நதியில் போட்டி நடக்கும். அர்ஜூனனின் பிறந்த நாளான அன்று வல்லங்களி கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுக்கும் மேலாக இப்போட்டி நடக்கிறது.இங்குள்ள வன்னி மரத்தின் காயை எடுத்து தலையை மூன்று முறை சுற்றி வீசினால் நோய் தீரும்.
0
Leave a Reply