25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியகுங்குமப்பூவை (சிவப்பு தங்கம்')  கர்ப்பிணிகளுக்கு தருகிறார்கள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியகுங்குமப்பூவை (சிவப்பு தங்கம்')  கர்ப்பிணிகளுக்கு தருகிறார்கள் .

குங்குமப்பூ, குரோகஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு - சிவப்பு சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடி, மத்திய தரைகடல் பகுதிகளில் தோன்றியது.. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் சட்டிவஸ் எனப்படும் மலரில் இருந்து கிடைக்கிறது.

குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது. பாலில் குங்குமப் பூவைப் போடும்போது பாலின் நிறம் மாறுகிறது என்பதற்காக, அதைச் சாப்பிடுவதால் குழந்தையும் அந்த நிறத்தில் பிறக்கும் என்பது அர்த்தமில்லை. இது முற்றிலும் தவறான நம்பிக்கை.ஆனால், குங்குமப்பூவுக்கு ஒரு வாசனைப் பொருளாக நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியகுங்குமப்பூவை  கர்ப்பிணிகளுக்கு தருகிறார்கள். 

இனிப்புச் சுவையுள்ள நறுமணப் பொருட்களான குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரியக் கூடியவை. குங்குமப்பூ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மனஅழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கருவுற்ற பெண்ணுக்கு குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவற்றை வழங்கும் சடங்கு இன்றும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குங்குமப்பூவை சிறிதளவு சூடான பாலில் 10 நிமிடங் கள் ஊறவைத்து கையால் நசுக்கிவிட்டு பாலோடு கலந்து குடிக்கலாம். குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண் டால் சிலருக்கு வாந்தி, மயக்கம்,வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது. 

ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். அந்த வாணலியில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து கையால் நசுக்கி பொடி செய்யவும். இதை ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News