25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


முக்கிய அறிவிப்பு

Oct 09, 2024

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.

 இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம் வந்தவர் ரத்தன் டாடா. இவருக்கு வயது86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரா ரத்தன் டாடா மும்பையில் வசித்து வந்தார்.பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, வயது மூப்பு, ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில், டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் ரத்தன் டாடா வெளியிட்ட அறிக்கையில்‛‛எனது உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவி வருகிறது. இதனை நான் அறிந்துள்ளேன். உண்மையில் இந்த தகவல்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை சார்ந்து வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளேன். என்னை நினைத்து கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. நான் நலமாக இருக்கிறேன். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என கூறியிருந்தார்.இந்நிலையில் தான் ரத்தன் டாடா, மும்பையில் பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் சிகிச்சை பலனின்றி ரத்தன் டாடா காலமானார். தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (அக்.09) இரவு, 11.30மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், 2012-ல் ஓய்வு பெற்றார். பல லட்சம் இளைஞர் களுக்கு முன்னோடியாகவும் உலகஅரங்கில் திறமையான திகழ்ந்த  ரத்தன் டாடாவின் மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்  ரத்தன் டாடாவின் இறப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது. நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் செய்த பங்களிப்பு செய்து தொழில்துறையின் டைட்டனாக விளங்கிய அவர் தொடர்ந்து நினைவில் வைக்கப்படுவார். ரத்தன் டாடாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைட்டும்'' என கூறியுள்ளார்.ல்,‛‛ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிக்கிறது.இராஜபாளையம் டைம்ஸ் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Oct 06, 2024

மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா 10.10.2024 வரை 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தகவல்

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை திட்டமிடப்பட்டு மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.அதன்படி, விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழாவிற்கு, மாவட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகள் வர விரும்புவதாலும், கல்லூரி மாணவர்கள் பார்வையிடுவதற்காகவும் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று மேலும் மூன்று நாட்கள் 10.10.2024 வியாழக்கிழமை மாலை வரை புத்தகக் காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே, இப்புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென  மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S.,  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Oct 03, 2024

மதுரை மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கிட சிறப்பு முகாம்

மதுரை மண்டல அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கிட சிறப்பு முகாம் வரும் 09.10.2024 புதன்கிழமை அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடும் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைத்து அதிகஅளவில் மாற்றுத்திறனாளிகள் முகாமில் கலந்துகொள்ளுமாறும், கலந்துகொள்ள விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள்https://docs.google.com/forms/d/1WLiFUFOri9FCZBEYD8GYoNCc84r9JgQp0qFlNS1qiGI/edit  என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறும் மாவட்டஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன், I A S,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 01, 2024

அருள்மிகு ஸ்ரீஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோவில் சர்வ சமுத்ர அக்ரஹாரம், இராஜபாளையம். நவராத்திரி உற்சவம்  (03.10.2024-12.10.2024)

புரட்டாசி மாதம் 17-ம் தேதி (03-10-2024) வியாழக்கிழமை முதல் புரட்டாசி மாதம் 26-ம் தேதி (12-10-2024) சனிக்கிழமை வரை நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது.நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை ஸப்தசதீ பாராயணமும், அம்பாளுக்கு அபிஸேகமும் மாலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது..நவராத்திரி நன்னாளில் கீழ்க்கண்டவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார்கள்.நாள்,கிழமை,அலங்காரம்03.10.2024 வியாழக்கிழமை - ப்ராஹ்மீ04.10.2024  வெள்ளிக்கிழமை-புவனேச்வரீ05.10.2024 சனிக்கிழமை -கோவிந்த ரூபிணீ06.10.2024 ஞாயிற்றுக்கிழமை - ஐந்த்ரீ07.10.2024 திங்கள்கிழமை - மாஹேச்வரீ08.10.2024 செவ்வாய்க்கிழமை -கௌமாரீ09.10.2024 புதன்கிழமை - வைஷ்ணவீ10.10.2024 (துர்க்காஷ்டமி)வியாழக்கிழமை - மஹிஷாசுரமர்த்தினி11.10.2024 (சரஸ்வதீ பூஜை) வெள்ளிக்கிழமை - மஹாஸரஸ்வதீ12.10.2024 (விஜயதசமி) – சனிக்கிழமை,மாலை 6 மணிக்கு காலபைரவர் அபிஸேகம். அனைவரும் வளமும், நலமும் மன அமைதியும் பெற்று இன்புற்றிருக்க நவராத்திரி நன்னாளில் வழிபட்டு அருள் பெற்றுய்ய அன்புடன் அழைக்கிறோம். ஸப்தஸதீ பாராயணம் நாளொன்றுக்கு சிறப்பு ஸங்கல்பத்திற்கு ரூ 1000/-நவராத்திரி சிறப்பு பூஜைக்கு நாளொன்றுக்கு ரூ 2000/- மேலும் பக்தர்கள் மனமுவந்து அளிக்கும் நன்கொடைகளும் பூஜா திரவ்யங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.(மேலும் விவரங்களுக்கு திருக்கோவில் அர்ச்சகருடன் அல்லது - 9003273690 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளவும்).இப்படிக்கு பி. ஆர். வெங்கட்ராம ராஜா பரம்பரை அறங்காவலர்.

Sep 30, 2024

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 05.10.2024 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 05.10.2024 அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.இம்மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ் ஸ்ரீ சக்ரா, இன்னோவல் மென்பொருள் நிறுவனம், 108 ஆம்புலன்ஸ் சேவை, அடையார் ஆனந்த பவன், ரிலையன்ஸ் ஜியோ, ராயல் என்பீல்டு, விவிவி இதயம் நல்லெண்ணெய் ஆகிய 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ/டிப்ளமோ ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் நேர்காணலில் கலந்து கொள்ள அனைத்து கல்விச்சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது முற்றிலும் ஒரு இலவச சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ளும் வேலை நாடுநர்கள் மற்றும் வேலையளிப்போர் ஆகியோர் www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்பட மாட்டாது என்ற விபரமும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 29, 2024

உலக முதியோர் தினம்

நாள் : 01-10-2024 நேரம் : 10 AM இடம் : ஸ்ரீமதி P.S.K.ருக்மணி அம்மாள் அரங்கம்இராஜபாளையம்.நிகழ்ச்சி நிரல்தமிழ்தாய் வாழ்த்துதிரு. K. பெத்துராஜா தலைவர், REWA.வரவேற்புரை :திரு. M.R. அழகராஜா அவர்கள் புரவலர், இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.தலைமையுரை :திருமதி. M.சீலா சுந்தரி M.C.A.,M.A., மாவட்ட சமூக நல அலுவலர், விருதுநகர் மாவட்டம்.முன்னிலை :நவபாரத் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்உறுதி மொழி :முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்வாழ்த்துரை :திரு. S. மீனாட்சி சுந்தரம் அவர்கள் பொதுச்செயலாளர், FOSCATAN, சென்னை.திரு. Ln. V.R. ஜெயகுமார் அவர்கள் Health Care Coordinator, Apollo Hospitals Chennai.திரு. R. இளங்கோ அவர்கள் இயக்குநர், முதியோருக்கான முதியோர் அமைப்பு. கடலூர்.திரு. S. டாக்டர் ஹக்கீம் ஹான் அவர்கள் Vice President, RBM, Equitas Small Finance Bank, Madurai.திரு. Ln.P.M. ராமராஜ் அவர்கள் B, "SON OF PRIDE" P.R. VIJAYKUMAR CHARITABLE TRUST.முனைவர். P.N. நாராயண ராஜா அவர்கள் Trustee, இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்,திரு. V. தர்மலிங்கம் அவர்கள் ஆலோசகர், Helpage India, விருதுநகர் மாவட்டம்விழா சிறப்புரை :உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் சேர்மன், ராம்கோ குரூப், இராஜபாளையம்.விழா பேருரை:முனைவர் V.P. ஜெயசீலன் I.A.S., அவர்கள் ஆட்சித்தலைவர், விருதுநகர் மாவட்டம்.நன்றியுரை :திரு. N. தேவராஜா அவர்கள்தேசியகீதம்:நிகழ்ச்சி தொகுப்பாளர் : யுவகலா பாரதி, இளம் விஞ்ஞானி, இளம் பெண் சாதனையளர்என்.டி.3, நிறுவனர், "ஆர்ட் ஆஃப் மைண்ட்" உந்துதல் மையம்.செயலாளர், இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம்.அன்பாதரவு: equitas எக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், இராஜபாளையம்.

Sep 26, 2024

விருதுநகர் மாவட்டம் மூன்றாவது புத்தகத் திருவிழா 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெற உள்ளது

விருதுநகர் மாவட்டம், மூன்றாவது புத்தகத் திருவிழா 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று கோலாகலமாக துவங்குகிறது. புத்தக திருவிழாவில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் கவிஞர்கள் பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். பல்வேறு துறைகள் சார்ந்து கண்களையும், சிந்தையையும் கவரும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே அனைத்து வகை பள்ளிகளுக்கும் மாணவர்கள் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் பொருட்டும் புத்தகங்கள் வாங்கும் எண்ணத்தை வளர்க்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தக உண்டியல்கள் வழங்கப்பட்டன. இப்புத்தகத் திருவிழாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாது கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் புத்தக உண்டியல் மூலம் புத்தகங்கள் வாங்கும் மாணவச் செல்வங்களுக்கு 20 விழுக்காடு புத்தக விலையில் தள்ளுபடி வழங்கப்படும். எண்ணற்ற புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தவறாது கலந்து கொள்ள செய்து புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தினை மேம்படுத்துவதற்கு மற்றும் அவர்கள் கல்வியில் மேம்பாடு அடையுமாறு செய்வதற்கு தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம். புத்தகத் திருவிழாவில் உணவு அரங்குகள் மற்றும் சிற்றுண்டி அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த காலாண்டு விடுமுறையை பயனுள்ளதாக அமைத்திட அனைத்து பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுடன் புத்தக திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 26, 2024

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும்  ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் சென்ட்ரல்' இணைந்து நடத்தும் சிறுநீரகக்கல் மற்றும் அனைத்து சிறுநீரக நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

நாள்: 28.09.2024 ( சனிக்கிழமை )நேரம் :காலை 9.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை இடம் :இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம்,ஆண்கள் - பெண்கள் இருபாலருக்கும்சிறுநீரகக் கற்களால் வயிற்றுவலி, வாந்தி, நீர்கடுப்பு ,சிறுநீர் சொட்டுச் சொட்டாக போகுதல்,தன்னை அறியாமல் சிறுநீர் கழித்தல் சிறுநீரக வீக்கம் ,சிறுநீரக பாதையில் அடைப்பு ,ப்ராஸ்டேட் சதை வளர்ச்சி,சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்,விரை வீக்கம் மற்றும் இதர சிறுநீரக உபாதைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும்.மருத்துவ பரிசோதனைகள்ஹிமோகுளோபின் , யூரியா,சிறுநீர் பரிசோதனை ,*இரத்தத்தில் சர்க்கரையின் அளவு,அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் (Abdomen)பரிசோதனைக் கட்டணம் RS 300/- மட்டுமேமுன்பதிவு செய்யும் நபர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்து தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற சிறுநீரியல் துறை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள்  Dr. R. ரவிச்சந்திரன், Dr. K. வேணுகோபால், Dr. பால் வின்சென்ட், Dr. வீசர் விக்னேஷ்  அவர்களது குழுவினர் கலந்து கொண்டு ஆலோசனை அளிக்கிறார்கள்.முன்பதிவிற்கு அழைக்கவும்: 98425 97883, 73730 61694

Sep 19, 2024

தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக பாஸ்போர்ட் இணையதளம் நான்கு நாட்கள் நிறுத்தம்

இந்தியா முழுவதும் பராமரிப்பு தொழில்நுட்ப காரணமாக இன்று (செப். 20) இரவு 8:00 மணி முதல் ,செப். 23  காலை 6:00 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது. எனவே விண்ணப்பதாரர்கள், பாஸ்போர்ட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வது முதல்அனைத்து பணிகளுக்கும் தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்தபின் பாஸ்போர்ட் சேவைக்கான இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும்.பாஸ்போர்ட் இணையதளம் விவரங்களுக்கு மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை  0452 -252 1205 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Sep 15, 2024

டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் மிலாடு நபி தினமான 17.09.2024 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  F.L-1, F.L-2, F.L-3 மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,  1981-ன்படி,    மிலாடி நபி தினமான  17.09.2024  (செவ்வாய்)   அன்று ஒரு நாள் மட்டும்  தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும்   F.L-1,  F.L-2,F.L-3  மற்றும் FL-11  மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர்.வீ.ப.ஜெயசீலன் I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 25 26

AD's



More News