குறு சிறு தொழில்களுக்கான கடன் வழங்கும் முகாம்
தமிழ்நாடு அரசு, சமச்சீரான அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டு மக்கள் நலத்திட்டத்திங்களை முனைப்புடன் செயல்படுத்திவருகிறது. அவ்வகையில், சுயவேலைவாய்ப்பினை ஊக்குவிப்பதற்காக அரசின் உத்திரவாதத்துடன் கூடிய மானியக் கடனுதவி திட்டங்களை எளிமைபடுத்தி எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் வருகிற 23.02.2024 வெள்ளிக்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் “மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமினை” மாவட்ட தொழில் மையம் மூலமாக சிறப்பாக நடத்த உத்தேசித்துள்ளது.
அதன்படி, விருதுநகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் வருகிற 23.02.2024 அன்று காலை 10.00 மணியளவில் மானியத்துடன் கூடிய கடன் வசதி முகாமானது மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், அனைத்து பொதுத்துறை/தனியார் துறை வங்கிகளின் மண்டல மேலாளர்கள், வங்கி கிளை மேலாளர்கள மற்றும் மானிய கடனுதவி திட்டத்தினை நடைமுறைபடுத்திவரும் மாவட்ட தொழில் மையம் மற்றும் இதர பல்வகை கடன் வழங்கும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து அனைத்து துறை மானிய கடனுதவி திட்டங்களின் வரையறைகளை எடுத்துரைத்து அன்றைய தினமே கடன் தொகை விடுப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள உள்ளன.
புதிதாக கடனுதவி கோரி விண்ணப்பிக்க உள்ளவர்களும், ஏற்கனவே விண்ணப்பித்து கடன் விடுவிப்பு ஆணையினை எதிர்நோக்கியுள்ள நபர்களும் மேற்கண்ட கடன் உதவி இயக்க முகாம் நடைபெறும் நாளான 23.02.2024 அன்றே கடனுதவி பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சுயதொழில் தொடங்கிட மானியக் கடனுதவி கோரி ஏற்கனவே விண்ணப்பித்த அனைத்து தரப்பினரும் தொழிற் கடன் வேண்டி புதிதாக விண்ணப்பிக்க உள்ள நபர்களும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு உடனடியாக பயன்பெறலாம்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில்; மையம், பொது மேலாளர்அவர்களை நேரிலோ அல்லது 9080078933 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply