25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


திருச்சுழி  ஊராட்சி ஒன்றியத்தில்,  அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் முன்னிலையில்,  அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருச்சுழி  ஊராட்சி ஒன்றியத்தில், அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் முன்னிலையில், அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி  ஊராட்சி ஒன்றியத்தில்,  (10.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,  அவர்கள் முன்னிலையில்,  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ரூ.5.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

 அதன்படி, திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.60 கோடி மதிப்பில் 1097.22 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து நிற்கும் இடம், கடைகள், ஓய்வறை, மழைநீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகளைநிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளை துரிதமாக முடித்து விரைவில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

 இந்நேர்வில்,  திட்ட இயக்குநர்(மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன், முன்னாள் திருச்சுழி ஊராட்சி ஒன்றியகுழுத் தலைவர் திரு.பொன்னுத்தம்பி, திருச்சுழி வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News