25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா.

பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுபண்டு இராஜபாளையம்,அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா ,நிகழும் மங்களகரமான 1201-ம் ஆண்டு பராபவ வருஷம் சித்திரை மாதம் 15-ம் தேதி (28.04.2026) செவ்வாய்க்கிழமை இரவு 6-00 மணி அளவில் மின் விளக்குகளால்அலங்கரிக்கப்பட்ட தட்டுச்சப்பரத்தில் அம்மன் எழுந்தருளியாகி, அருள் ஜோதிவடிவமாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள், கிளாரினெட் கச்சேரி, வான வேடிக்கைகளுடன் புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் சுவாமி முக்கியவீதிவழியாக அருள் ஜோதி சொரூபசக்தியாய் மக்களுக்கு காட்சி கொடுத்து நகர்வலம்வந்து பழையபாளையம் (முனிசிபல் குடிநீர் தண்ணீர் தொட்டி) வடபக்கம்அமைந்துள்ள பழையபாளையம் ராஜூக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன்கோவிலுக்கு வழக்கம் போல் வந்தடையும். அவ்வமயம் பக்தகோடிகள் அனைவரும் தவறாதுபொங்கல் விழா வைபவங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள்பெற வேண்டுகிறோம்.

அன்று இரவு 7 மணி முதல் இரவு 12 மணி வரை மம்சாபுரம் S. தனலட்சுமி வில்லிசை குழுவினரின் ''வில்லிசைக் கச்சேரி" அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் மைதானத்தில் வைத்து நடைபெறும்.

 

இப்படிக்கு,

தலைவர்.பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொது பண்டு

அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழாக் கமிட்டியார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News