25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >>


புலிகளின் உயிர் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் போலி கண்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புலிகளின் உயிர் பாதுகாப்புக்கு முக்கிய பங்கு வகிக்கும் போலி கண்கள்.

மிகவும் சக்திவாய்ந்த புலிகளுக்கு 'போலி கண்கள்' போன்று செயல்படும்  ஒன்றுதான் காதுகளில் உள்ள வெள்ளை அடையாளங்கள். இவைபார்ப்பதற்கு பெரிய கண்களை போன்று தோற்றமளிக்கின்றன.. இந்த வெள்ளை நிறக் குறிகள் 'கண் புள்ளிகள்' அல்லது 'ஓசெல்லி' என்று அழைக்கப்படுகின்றன. புலிகளுக்கு மட்டுமல்லாமல் பட்டாம் பூச்சிகள் மற்றும் சில ஊர்வனவற்றில் உருமறைப்பு நோக்கங்களுக்காக இதே அடையாளங்கள் காணப்படும்.

 

கண் புள்ளிகள் இருப்பது தற்காப்புக்கான ஒரு வடிவமாக பார்க்கப்படுகிறது. புலிகள் தண்ணீர் குடிக்கும்போது அல்லது ஓய்வு எடுக்கும்போது நிஜ கண்களை பயன்படுத்துகின்றன. எனவே, அவற்றின் கவனம் தண்ணீரில் மட்டுமே இருக்கும். அந்த சமயத்தில் மாய கண்களை காட்டுவதன் மூலம், புலிகள் தங்களை அணுக நினைக்கும் மற்ற விலங்குகளை பயமுறுத்தலாம். கண் புள்ளிகள் இருப்பதால், மற்ற விலங்குகள் புலிகள் உண்மையில் தங்களை பார்த்துக் கொண்டிருப்பதாக நினைத்து அருகில் வராது. பெரும்பாலான விலங்குகள் தங்களை வேட்டையாடுபவர்களை குழப்ப அல்லது தப்பிக்க இது போன்ற வடிவங்களை பயன்படுத்துகின்றன.  புலிகளின் உயிர் பாதுகாப்புக்கு உண்மையில் இரண்டாவது கண்கள் இல்லை என்றாலும், இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News