கோவை கிட்டாம்பளையம் கிராம மக்கள் 20 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்.
கோவையில் பட்டாசை விரும்பாத கிராமம் கிட்டாம்பளையம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் கடந்த 26 ஆண்டுகளாக பட்டாசில்லா தீபாவளியை கொண்டாடிவருகின்றனர்..கிட்டாம்பாளையம் கிராமத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய வகை வவ்வால் இனங்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க அங்குள்ள மக்கள், பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இங்குள்ள ஆலமரம் மற்றும் புளிய மரங்களில் வசித்து வரும் வவ்வால்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் அதிக அளவில் பறவைகள் சரணாலயம்போல் வசிப்பதால் பட்டாசுகளை வைத்து பறவைகளின் அமைதியை குலைக்க விரும்பாமல் பசுமை தீபாவளியை கொண்டாடிவருகின்றனர். அந்த கிராம மக்களை வாழ்த்தி மகிழ்வோம்!
0
Leave a Reply