25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.50.03 இலட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.50.03 இலட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

 தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரப் பகுதிகளில் ரூ.50.03 இலட்சம் மதிப்பிலான 10 திட்டப்பணிகளுக்கு (27.11.2026) அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில் சிவகாசி வட்டாரப் பகுதியான பூலாவூரணியில் ரூ.5.33 இலட்சம் மதிப்பில் பேவர்பிளாக் அமைத்தல், பெரிய பொட்டல்பட்டி ஊராட்சியில் ரூ.3.21 இலட்சம் மதிப்பில் பேவர்பிளாக் அமைத்தல், ஆனையூர் ஊராட்சி இலட்சுமியாபுரம் ஓடையில் ரூ.5.75 இலட்சம் மதிப்பில் தடுப்பணை அமைத்தல், ஈஞ்சார் ஊராட்சியில் உள்ள ஓடையில் ரூ.5.75 இலட்சம் மதிப்பில் தடுப்பணை அமைத்தல், நிறைமதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.8.72 இலட்சம் மதிப்பில் சமையலறைக்கூடம் அமைத்தல், வடபட்டி கிராமத்தில் உள்ள ஓடையில் ரூ. 5.75 இலட்சம் மதிப்பில் தடுப்பணை அமைத்தல், சித்துராஜபுரம் ஊராட்சி என்.ஆர்.டி வெங்கிடசாமி நகர் தெருவில் ரூ.4.50 இலட்சம் மதிப்பில் பேவர்பிளாக் அமைத்தல், கீழுர் ஐயப்பன் கோவில் தெருவில் ரூ.2.82 இலட்சம் மதிப்பில் பேவர்பிளாக் அமைத்தல், விஸ்வநத்தம் ஊராட்சியில் விநாயகர் தெருவில் ரூ.5 இலட்சம் மதிப்பில் வாறுகாலுடன் கூடிய பேவர்பிளாக் அமைத்தல், அண்ணாமாலையார் தெருவில் ரூ.3.20 இலட்சம் மதிப்பில் பேவர்பிளாக் அமைத்தல் என மொத்தம் ரூ.50.03 இலட்சம் மதிப்பிலான 10 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமானதாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News