முடக்கத்தான் கீரை பொரியல்.
தேவையான பொருட்கள்:
1கட்டு முடக்கத்தான் கீரை,15 சின்ன வெங்காயம்,
1 கொத்து கறிவேப்பிலை,1 காய்ந்த மிளகாய்,1/2ஸ்பூன் மஞ்சள் தூள்,
1/2ஸ்பூன் சீரகம்,தேவையானஅளவு உப்பு,1ஸ்பூன் கடுகு,
1/2ஸ்பூன் உளுத்தம்பருப்பு,1ஸ்பூன் கடலை பருப்பு,1/4கப் தேங்காய் துருவல்.
செய்முறை :
கீரையை சுத்தம் செய்து நன்கு கழுவி எடுத்து வைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலை பருப்பு தாளித்து
வெங்காயம், கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கீரை, மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
கீரை வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
ஆரோக்கியமான முடக்கத்தான் கீரை பொரியல் ரெடி.
0
Leave a Reply