25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


வெந்தயக் கீரை பொரியல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெந்தயக் கீரை பொரியல் .

தேவையான பொருட்கள்:
1கட்டுவெந்தயக் கீரை,1/2கப்வெங்காயம் நறுக்கியது,1/4கப் தக்காளி,1/2ஸ்பூன்க.பருப்பு,1/2ஸ்பூன்உ.பருப்பு,

2 சிவப்பு மிளகாய் ,உப்பு ருசிக்கு,1டீஸ்பூன்சர்க்கரை,1டீஸ்பூன்ம,தூள்,2 ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்,
1டீஸ்பூன்கடுகு,2ஸ்பூன்ந.எண்ணெய்,1டீஸ்பூன்பெருங்காயம், தேவைக்குதண்ணீர்.

 

செய்முறை: 
வெந்தயக் கீரையை தண்ணீர் விட்டு நன்கு அலசிக் கொள்ளவும்.கீரையை சுத்தம் செய்ததும் பொடியாக நறுக்கவும்.
கடாயில் ந.எண்ணெய் காய்ந்ததும்,கடுகு,க.பருப்பு,உ.பருப்பு,மிளகாய் தாளிக்கவும்.பிறகு வெங்காயம்,ம.தூள்,உப்பு,காஷ்மீரி மிளகாய் தூள் போட்டு நன்கு வதக்கவும்.பின் தக்காளியை போடவும்.
நன்கு வதக்கிக் கொள்ளவும்.சற்று வதங்கியதும், நறுக்கிய வெந்தயக் கீரை,சர்க்கரை,உப்பு, போடவும்.பிறகு பெருங்காயத் தூள் போடவும்.
அனைத்தையும் நன்கு சுருள வதக்கவும்.வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு.பொரியலை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும். இப்போது சுவையான,சத்தான,ஆரோக்கியமான,*வெந்தயக் கீரை பொரியல்*தயார்.

இதில் சர்க்கரை சேர்ப்பதால் கீரையின் பசுமை நிறம் மாறாது.கசப்பும் தெரியாது. உடலுக்கு ஊக்கத்தை அளிக்கும்.வயிற்றுப் புண்கள்,டயேரியாவை குறைக்கும்.அதிகமாக இரும்புச் சத்து கொண்டது.வாதம்,மற்றும் கப நோய்களை குணமாக்கும்.மண்ணீரல்,மற்றும் கல்லீரலை பலமாக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *