இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.
மான்செஸ்டரில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் ,முதல் இன்னிங்சில் இந்தியா 358, இங்கிலாந்து 669 ரன் எடுத்தன. 311 ரன் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கியது இந்தியா. ராகுல் (90), சுப்மன் (102) உதவினர். அடுத்து வந்த ஜடேஜா, வாஷிங்டன் இணைந்து தோல்வியை தவிர்க்க போராடினர்,
ஒரு கட்டத்தில் ஜடேஜா 89, வாஷிங்டன் 80 ரன் எடுத்திருந்தனர். போட்டி முடிய ஒரு மணி நேரம் மட்டும் உள்ள நிலையில் 15 ஓவர்கள் மீதம் இருந்தன. இந்திய அணி 75 ரன் முன்னிலை பெற்றிருந்தது.இதனால் போட்டியை 'டிரா' செய்ய முன் வந்தார் இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ். இதை ஏற்க மறுத்தது இந்தியா. தொடர்ந்து ஜடேஜா, வாஷிங்டன் என இருவரும் சதம் அடித்த பின் (இந்தியா 425/4), 'டிரா' செய்ய ஒப்புக்கொண்டனர்.
0
Leave a Reply