'சூப்பர் 100' மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரில் தான்வி சர்மா வெற்றி.
'சூப்பர் 100' மாஸ்டர்ஸ் பாட்மின்டன்தொடர் அசாமின் கவுகாத்தியில் ,பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா 16, இந்தோனேஷி யாவின் தலிலா புதேரி மோதினர். இதில் தான்வி சர்மா 6-21, 21-11, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்ற போட்டிகளில் இந்தியாவின் அன்மோல் கார்ப், தஸ்னிம்மிர், அஷ்மிதா, அனுபமா, இஷா ராணி, தன்யா ஹேம்னாத் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
இந்தியாவின் தருண், இந்தோனேஷியாவின்ரிச்சி டுடா ரிச்சார்டோ ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மோதினர். இதில் தருண் 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் சங்கர் முத்துசாமி காயத்தால் விலகியதால், சகவீரர்மிதுன் மஞ்சுநாத் மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இந்தியாவின் துஷார் சுவீர் 21-14, 21-19 என சகவீரர் ரகு மாரிசாமியை வென்றார்..
0
Leave a Reply