வல்லாரைக் கீரை பொரியல்.
தேவையான பொருட்கள்:
1 கட்டு வல்லாரைக்கீரை,1 பெரிய வெங்காயம்,1 துண்டு தேங்காய்,1. வர மிளகாய்,1 பல் பூண்டு,
1 ஸ்பூன் எண்ணெய்,உப்பு .
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு ஏறியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
கீரையை கழுவி தண்ணீர் வடித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் கீரையை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கீரையை வேக வைத்துக் கொள்ளவும்.
கீரை வேகும் நேரத்தில் மிக்ஸியில் தேங்காய், பூண்டு, வர மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். கீரை வெந்ததும் இதில் தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த தேங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் கீரையோடு வறுத்து அதன் பின் பரிமாறுங்கள்.
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை பொதுவாக கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் அதிகமாக வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து பொரியல் செய்தால் கசப்பு தன்மை குறைந்து விடும்.
0
Leave a Reply