சேலஞ்சர் ஸ்குவாஷ்: இந்திய வீரர் அயன் வஜிரல்லி சாம்பியன்.
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்ற புரொஃபஷனல் ஸ்குவாஷ் சங்கத்தின் (PSA) சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரில் இந்திய வீரர் அயன் வஜிரல்லி சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகத் தரவரிசையில் 173-வது இடத்தில் உள்ள அயன் வஜிரல்லி, 216-வது இடத்தில் உள்ள எகிப்தின் ஹசன் மென்ஹாவியை எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்தாலும் சிறப்பாக மீண்டு வந்த அயன், 7-11, 11-7, 11-9, 11-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றுப் பட்டத்தைக் கைப்பற்றினார். மும்பையைச் சேர்ந்த 20 வயதான அயன், சர்வதேச ஸ்குவாஷ் டூர் தொடரில் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும்.
0
Leave a Reply