காற்றில் பறக்கும் புதிய டெஸ்லா ரோட்ஸ்டர் கார்.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பிரமிக்க வைக்கும் சிறப்பம்சங்களுடன், டெஸ்லா நிறுவனத்தின் புதிய'ரோட்ஸ்டர்'(TeslaRoadster) கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ராக்கெட் தொழில்நுட்பம்: எலான் மஸ்கின் 'ஸ்பேஸ்எக்ஸ்' (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து, இந்த காரில் 'கோல்ட்-கேஸ் த்ரஸ்டர்' (Cold-gas thruster) எனும் ராக்கெட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கார் காற்றில் குதிப்பது, பறப்பது போன்ற சாகசங்களைச் செய்ய முடியும்.
சக்க்ஷன் சிஸ்டம்(SuctionSystem): காரின் அடிப்பகுதியில் உள்ள இந்தத் தொழில்நுட்பம் காரை தரையோடு பலமாகப் பிடித்துக் கொள்ளும். இதனால் செங்குத்தான அல்லது தலைகீழான பாதைகளில் கூட வழுக்காமல் பயணிக்க முடியும்.
புதிய வடிவமைப்பு: சுமார்9 ஆண்டுகளுக்குப் பிறகு, முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் இது வெளியாகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
வேகம் (Acceleration): வெறும் 0.81 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்துள்ளது.
அதிகபட்ச வேகம்: மணிக்கு 370 முதல் 400 கி.மீ.-க்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியது.
மைலேஜ் (Range): ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 1,000 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
மாடல்கள்: பெர்ஃபார்மன்ஸ்(Performance), த்ரஸ்ட்(Thrust) மற்றும் ராக்கெட்(Rocket) ஆகிய3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது.விலை மற்றும் உற்பத்தி: இதன் ஆரம்ப விலை சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ₹1.68 கோடி). இந்த காரின் உற்பத்தி 2028-ஆம் ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply