25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Feb 25, 2025

தொட்டால் சுருங்கி!

மருத்துவ தாவரங்களில் தொட்டால் சிணுங்கிக்கு தனி சிறப்பு உண்டு. இது, மனிதனின் குணத்துடன் ஒப்பிடப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் மிமோசா பியூடிகா. தொட்டால் சுருங்கி, இலச்சகி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை, ஆள் வணங்கி என்ற பெயர்களும் உண்டு.மற்ற தாவரங்களை போன்றே, இதன் இலையும் செல்களின் சேர்க்கையால் ஆனது.இலைக்குள் இருக்கும் செல்கள் ஒரு வகை திரவத்தைக் கொண்டிருக்கும்.இலையைத் தொட்டவுடன் தாவரத்தின் தண்டுப் பகுதியில் வினோத அமிலம் சுரக்கும். உடனே, இலையின் அடிப்பகுதியில் திரவத் தன்மை நீங்கி விடும். மேற்பகுதியில் அது நீங்குவது இல்லை. இதனால், எடையில் மாறுபாடு ஏற்பட்டு இலை சுருங்கும். தொட்டவுடன் அது சுருங்கி விடுவதாக கூறுகிறோம்.

Feb 25, 2025

வால்நட் மரம்

சில தாவரங்கள் ஆண் மரம், பெண் மரம் என்று தனித்தனியாக இருக்கும். ஆனால், வால்நட் மரம் பருவத்திற்கு ஏற்ப தன் பூக்களின் பாலினத்தை மாற்றிக் கொள்ளும். இது  அறியப்பட்ட விஷயம் தான் என்றாலும், முதன்முறையாக இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் தெளிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

Feb 24, 2025

உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்று எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும், இந்த வங்கியின் பெயரை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இந்த வங்கி லோகோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று உங்களுக்குத்  தெரியுமா? . எஸ்பிஐ வங்கியின் லோகோ கங்காரியா ஏரி மற்றும் பைலின் ஏரியிலிருந்து எடுக்கப்பட்டது.

Feb 24, 2025

புற்று நோயை தடுக்க மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது.

 உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று புற்றுநோய்.அதிலும் குடல் புற்றுநோய் என்பது மிகவும் அபாயகரமா னது. அதிலிருந்து தப்பிப்பதற்கு சிறந்த உபாயத்தை இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.ஏறத்தாழ 5,42,000 மக்களைக் கொண்டு ஓர் ஆய்வுநடத்தப்பட்டது.ஒவ்வொருவருடையஉணவுப்பழக்கம்பற்றியும்கேட்டறியப்பட்டுஆவணப்படுத்தப்பட்டது.அனைவரும் 16 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட் டனர். அதில், 12,259 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு மட்டும் எப்படி வந்தது ? பிறருக்கு ஏன் வரவில்லை என்பது குறித்து ஆராயப்பட்டது.இதிலிருந்து தினமும் 300 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொண்டு வருபவர்களுக் குக் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு 17 சதவீதம் குறையும் என்று கண்டறிந்துள்ளனர். தின மும் ஒரு குவளை பால் சாப்பிட்டால் இந்தச் சுண்ணாம்புச் சத்து நமக்கு கிடைத்துவிடும்.பால் சாப்பிடப் பிடிக்காதவர்கள் டோபு அல்லது பிரக்கோலி போன்ற காய்கறிகள் மூலம் இந்த கால்சியத்தைப் பெறலாம்.அதேபோல இந்த ஆய் வில் மற்றொரு விஷயமும் தெரியவந்துள்ளது. தினமும் 100 கிராம் ரெட் மீட் அதாவது ஆடு, பன்றி, மாடு, முயல் ஆகிய விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவது இந்தப் புற்றுநோய்வரும் வாய்ப்பை 29 சதவீதம் அதிகரிக்கிறது.தினமும் 200 கிராம் மது குடிப்பது புற்றுநோய் வரும் வாய்ப்பை 15 சதவீதம் அதி கரிக்கிறது. ஆகவே மது, மாமிசத்தைத் தவிர்த்துவிட்டு, பால் குடிப்பது நல்லது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

Feb 23, 2025

ஆட்டம் போடுகிறான் மனுஷன்.

புத்தகம் அமைதியாக இருக்க, படித்தவன் ஆட்டம் போடுகிறான்...பாட்டில் அமைதியாக இருக்க ,குடித்தவன் ஆட்டம் போடுகிறான்..பணம் அமைதியாக இருக்க, வைத்திருப்பவன் ஆட்டம் போடுகிறான்..பிணம் அமைதியாக இருக்க, எடுத்து செல்பவன் ஆட்டம் போடுகிறான்..

Feb 23, 2025

தங்க நானோ துகள்கள் கொழுப்பை கரைக்கும்.

உடல் பருமனால் பாதிக்கப்படு பவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க  வேண்டியது அவசியம். ஆனால், கொழுப்பைக் கரைக்க பயன்படும் மருந்துகள் ஆரோக்கியமான தசைகளை வலுவிழக்கச் செய்து விடுகின்றன. இதனால், தசை வலி மையைக் குறைக்காமல் கொழுப்பை மட்டும் கரைக்கும் மருந்தை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா பல்கலை தங்க நானோ துகள்களை இதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் துகள்கள் அவற்றின் உடலில் உள்ள கொழுப்பை 36 சதவீதம் வரை குறைத்துள்ளது.இந்த மருந்து கொடுக்கப்பட்டு வெறும் ஒன்பது வாரங்களில் இவ்வளவு முன்னேற்றம். அது மட்டும் இல்லாமல் எலிகளின் சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கி யத்தையும் மேம்படுத்தி இருக்கின்றன. எனவே வருங்காலத்தில் இது மனிதர்களுக்கும் பயனுள்ள மருந்தாக அமையும் என்று விஞ்ஞானிகள்  கூறுகின்றனர்.

Feb 23, 2025

மின்சார சாப்ஸ்டிக்கை கொண்டு சாப்பிட்டால், உப்பு சப்பில்லாத சாப்பாடு. (நவீன கரண்டி)

 அதிக ரத்த அழுத்தம் இருக்கிறது. இனிமேல் உப்பை குறைவாகச் சாப்பிட வேண்டும்என்று  உங்கள் மருத்துவர் அறிவு றுத்தி உள்ளாரா :உப்பு சப்பில்லாமல் எப்படி சாப்பிடுவது என்று  வருத்தப்படுகிறீர்களா?  கவலை வேண்டாம். உங்களுக்காகவே உரு வாக்கப்பட்டிருக்கிறது இந்த நவீன கரண்டிமின்சாரத்தில் இயங்கும் இந்தக்கரண்டி  (Electric spoon) 2022 ஆண்டே வடிவமைக்கப்பட்டு விட் டது. ஜப்பானைச் சேர்ந்த உணவுத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன் முதலில் மின்சார சாப்ஸ்டிக்கை உருவாக்கியது. இதைக் கொண்டு சாப்பிட்டால், உணவில் உப்பு குறைவாக இருந்தாலும், நம் நாக்கு, உவர்ப்பு சுவையை உணர்ந்து ஆறுதல் அடையும்.அதே போல் இப்போது இந்த மின்கரண்டி உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்தக் கரண்டியில் இரண்டு எலக்ட்ரோடு இருக்கும். ஒன்று கைப்பிடியில், மற்றொன்று உணவு எடுக்கும் பகுதியில் இருக்கும். உணவை எடுக்கும் போது, உணவில் இருக்கும் சோடியம் அயனிகளை மட்டும் இந்தக் கரண்டி ஈர்த்துப் பிரித்துவிடும்.சோடியம் அயனிகள் தனியே நாக்கில் படும்போது, உவர்ப்பு சுவையை நாக்கு உணர்ந்து கொள்ளும். இதனால் குறைவான உப்பு இருந்தாலும், நமக்கு நிறைவாக இருக்கும்.ஆரம்பத்தில் 200 கரண்டிகள் மட்டும் வடிவமைக்கப்பட்டன. அவை அனைத்தும் விற்றுவிட்டன. இதைத் தொடர்ந்து,  பிப்ரவரி முதல் மறுபடியும் இந்த ஸ்பூன் உற்பத்தியை துவங்கி உள்ளனர். இதில் ஒரே ஒரு பிரச்னை என்ன வென்றால், தங்களுடைய உடலிலே பேஸ்மேக்கர் முதலிய மருத்துவ மின் கருவிகள் வைத்திருப்பவர்கள் இதைப் பயன்படுத்தக்கூடாது

Feb 21, 2025

ஐஐடி-மண்டி, அமெரிக்காவைச் சேர்ந்த நய்யாரின் தாராளமான நன்கொடை $85,000 பெற்றது.

மண்டி (முனிஷ் சூட்)அதன் கல்வி மற்றும் ஆராய்ச்சி முன்முயற்சிகளுக்கு ஒரு பெரிய ஊக்கமாக, இந்திய தொழில்நுட்ப நிறுவனம்-மண்டி(IITMandi) முன்னெப்போதும் இல்லாத வகையில்USD85,000 நன்கொடையாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு முக்கிய நபரும்,IITRoorkee இன் முன்னாள் மாணவருமானMohinderL. நய்யாரிடமிருந்து பெற்றுள்ளது. இந்த பங்களிப்பு, ஐஐடிமண்டிடோரா அலுவலகத்திற்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட நன்கொடையாளர் இதுவரை செய்த மிகப்பெரிய பங்களிப்பு, நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.தாராளமான நன்கொடையானது, ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், ஐஐடிமண்டியில் கல்வி வாழ்க்கையின் ஒட்டுமொத்தத் தரத்தை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஐஐடிமண்டி எண்டோவ்மென்ட் நிதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும்.இந்த நிதியின் மூலம், நிறுவனம் தனது சமூகத்திற்கு நிலையான வாய்ப்புகளை உருவாக்குவதையும், அதன் ஆராய்ச்சி திறன்களை வலுப்படுத்துவதையும், உயர்கல்வியில் புதுமைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.நன்கொடைத் தொகையின் பயனுள்ள பயன்பாட்டை உறுதி செய்வதற்காக, நய்யார், ஐஐடிமண்டி மற்றும் ஐஐடிரூர்க்கி அறக்கட்டளை இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்(எம்ஓயு) கையெழுத்தானது. புரிந்துணர்வு ஒப்பந்தம், திறமைகளை வளர்ப்பது, கல்வி வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் கற்றல் மற்றும் புதுமைகளின் முன்னணி மையமாக ஐஐடி மண்டியின் நீண்டகால பார்வையை முன்னோக்கி நகர்த்துதல் ஆகியவற்றின் பகிரப்பட்ட நோக்கத்தை கோடிட்டுக் காட்டுகிறது.ஐஐடிமண்டியின் இயக்குநர் பேராசிரியர் லக்ஷ்மிதர் பெஹெரா, நய்யாரின் பரோபகார சைகைக்கு ஆழ்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார், அத்தகைய பங்களிப்புகள் நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கு எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்கின்றன என்பதை வலியுறுத்தினார்.அவர் கூறினார், “இந்த நன்கொடை ஐஐடிமண்டியில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் எல்லைகளைத் தள்ள எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஒரு முக்கிய உதவியாக உள்ளது. இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உயர்கல்வியின் எதிர்காலத்தில் நீடித்த தாக்கத்தை உருவாக்க இது எங்களுக்கு உதவும்.திருப்புமுனை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் நிதிஐஐடிமண்டியின் வள உருவாக்கம் மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளின் டீன் பேராசிரியர் வருண் தத், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்கும் அதிநவீன ஆராய்ச்சிகளை நடத்துவதற்கும் நிறுவனத்தின் நோக்கத்தை ஆதரிப்பதில் நய்யார் போன்ற முன்னாள் மாணவர்கள் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்."நய்யாரின் தாராளமான ஆதரவு, கல்வித் தகுதியின் உயர் தரத்தைப் பேணுவது மட்டுமல்லாமல், மிகவும் தேவைப்படும் மாணவர்களின் வாழ்வில் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்தவும் உதவும்" என்று அவர் குறிப்பிட்டார்.ஆராய்ச்சி, மாணவர் உதவித்தொகை மற்றும் ஆசிரிய மேம்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ற சூழலை உருவாக்க, எண்டோவ்மென்ட் நிதியைப் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.கல்விசார் சிறப்பை மையமாகக் கொண்டு, இந்த நிதியானது ஐஐடி மண்டியில் உள்ள ஒட்டுமொத்த கற்றல் மற்றும் ஆராய்ச்சி, உலகப் புகழ் பெற்ற நிறுவனமாக நிலைநிறுத்துகிறது.

Feb 21, 2025

எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்.

தமிழ்நாட்டின் நீர்நிலைகளைக் காப்பாற்ற துபாயில் அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்ட தொழில்நுட்ப வல்லுநர் நிமல் ராகவன்.கஜாபுயலின்பேரழிவுதாக்கத்தால், அவர்இந்தியாதிரும்பினார்.கடந்த 5 ஆண்டுகளில், அவர்10மாநிலங்களில்லட்சத்திற்கும்மேற்பட்டமரங்களைநட்டு220நீர்நிலைகளைப்புதுப்பித்துள்ளார்.

Feb 21, 2025

சிரியஸ்  (Ceres)

சிரியஸ்  (Ceres) என்பது செவ்வாய் கோளுக்கும், வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குறுங்கோள், அமெரிக் காவின் நாசா அனுப்பிய டான்  (Dawn) வின் கலம்   தந்த தகவல்களில் இருந்து, ஒரு காலத்தில் இந்தக் குறுங்கோளில் 90 சதவீதம் பனிக்கட்டிகள் இருந்துள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

AD's



More News