சையது மோடி பாட்மின்டன்: காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சூப்பர் 300 அந்தஸ்து பெற்ற சையது மோடி சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் திரீசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-9, 21-8 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஷ்ரேயா, பிரனவி ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஷ்வினி பாட், ஷிகா ஜோடி 16-21, 21-12, 21-19 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மான்யா, ரேஷிகா ஜோடியை வீழ்த்தியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா 21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் இஷிகாவை வீழ்த்தினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 21-12, 22-20 என்ற செட் கணக்கில் பிரான்சின் லூகாஸ் ரெனோயர், கேட்டோன் ஜோடியை வீழ்த்தியது.
0
Leave a Reply