இராஜபாளையம் கண்மாய்களில் ஆகாய தாமரைகள்.
இராஜபாளையம் சுற்றியுள்ள புளியங்குளம், பிரண்டைகுளம், கடம்பன்குளம், பெரியாதி குளம், கொண்டனேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களும் நகரில் உள்ள ஊருணிகளும், ஆகாய தாமரை பாதிப்பில் சிக்கி உள்ளன.
இராஜபாளையம் மலையொட்டிய பகுதிகளில் இருந்து உருவாகும் நீர் சுற்றுப்பகுதி கண்மாய்கள் முதல் மழைக்கு நீர் இருப்பை பெற்று விடும். நகர்பகுதி ஒட்டி உள்ளதால் கண்மாய்களில் குடியிருப்புகளிள் கழிவு நீர் என்று கலந்து விடுகிறது. இதனால் கழிவு நீரில் வேகமாக வளரும் ஆகாய தாமரை செழித்து வளர்வதுடன் நீர்படிப்பு பகுதிகளை ஆக்கிரமித்த வளர்ந்து விடுகிறது.
இதன் காரணமாக தண்ணீர் வரும்போது பாசத்திற்கான கொள்ளளவு குறைந்து பாதிப்பு ஏற்படுத்துவதுடன் நீர்வற்றும் காலங்களில் மடைகள் வழியே பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற வழி இன்றி அடைப்பு ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு சிக்கலை எற்படுத்தி வரும் ஆகாயத்தாமரையை நிரந்தரமாக அகற்றும் வழிமுறையை மேற்கொள்ள வேண்டி விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply