25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


வானியல் மன்றத்தினை(Astronomy Club) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வானியல் மன்றத்தினை(Astronomy Club) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் மருளுத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் வானியல் மன்றத்தினை (Astronomy club) (26.11.2026) தொடங்கி வைத்தார்.மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும், விண்வெளி மற்றும் வானியல் குறித்த அறிவையும் வளர்க்கும் நோக்கில்  விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் மேங்கோ கல்வி நிறுவனத்துடன் (Mango Education) இணைந்து வானியல் மன்றம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விண்வெளி என்பது பூமி, சூரிய குடும்பம், கோள்கள், நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் என எண்ணற்ற அதிசயங்களையும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கிய ஒரு மிகப்பெரிய உலகமாகும். மாணவர்கள் பாடப்புத்தகங்களில் மட்டுமே விண்வெளி பற்றிய தகவல்களைப் படித்துக் கற்காமல், அதை நேரடியாக அறிந்து, ஆராய்ந்து, கேள்விகள் எழுப்பி, அறிவியல் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் சிவகாசி வட்டத்தில் 2 பள்ளிகளிலும், விருதுநகர் வட்டத்தில் 2 பள்ளிகள் என மொத்தம் 4 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் முதற்கட்டமாக இன்று  மருளுத்து பள்ளியில் வானியல் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவகாசி வட்டத்திலுள்ள சாணார்பட்டி, வடபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மற்றும் விருதுநகர் வட்டம் தடங்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் தேர்ந்தெடுக்கப்படும் நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.இந்த வானியல் மன்றங்கள் மாணவர்களுக்கு கோள்கள், நிலவு, நட்சத்திரங்கள், சூரிய குடும்பம், விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக்கோள்கள் போன்றவற்றைப் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதோடு, அறிவியல் சார்ந்த செயல்பாடுகள், ஆய்வுகள் மற்றும் அனுபவக் கற்றல் வாயிலாக அவர்களுடைய ஆர்வத்தை மேலும் வளர்க்க உதவும்.


ஒரு மாணவரின் சிறிய கேள்வி, நாளைய பெரிய அறிவியல் கண்டுபிடிப்பிற்கான தொடக்கமாக இருக்கலாம். எனவே, மாணவர்கள் கேள்வி கேட்கவும், சிந்திக்கவும், ஆராயவும், புதியவற்றை கற்றுக்கொள்ளவும் ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த வேண்டும்.இந்த வாய்ப்பினை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, விண்வெளி மற்றும் வானியல் சார்ந்த துறைகளில் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உருவாக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மேங்கோ கல்வி நிறுவனர் திரு.ஒபிலி சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்க கல்வி) திரு.ஜான்சன், வட்டாரக் கல்வி அலுவலர், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News