25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு .

நம் உடல்நலனுக்கு  நல்ல கொழுப்பு கள் தேவை. அதிலும் ஒமேகா 3, ஒமேகா 6 ஆகிய கொழுப்பு அமிலங்கள் மிகவும் அவசி யமானவை. ஒமேகா 3, சில தாவரங்கள், மீன்கள், பாசிகளில் உள்ளது.

ஒமேகா 6 தாவர எண் ணெய், விதைகளில் உள்ளது. குழந்தைக ளுக்கு ஏற்படும் ஆஸ்துமா, பெரியவர்களுக்கு ஏற்படும் இதய நோய்கள் ஆகியவற்றை இவை தடுக்கின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலை மேற்கண்ட புதிய ஆய்வில் மேற்கண்ட அமிலங்கள் சில வகை புற்றுநோய்களைத் தடுப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது. தலை, கழுத்து, உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், நுரையீரல், கருப்பை, சிறுநீரகம், மூளை, தைராய்டு சுரப்பி உள் ளிட்ட 19 இடங்களில் ஏற்படும் புற்றுநோய் களை ஒமேகா 3,6கொழுப்பு அமிலங்கள் கட்டுப்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.

லண்டன் மருத்துவ ஆய்வகத்திலிருந்து 2,58,138 மருத்துவ அறிக்கையை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர்.13 ஆண்டுகள் தொடர்ந்து அவர்களைக் கண்கா ணித்தனர். அவர்களில் 29,838 பேருக்குப் புற்று நோய் ஏற்பட்டது.அவர்களைச் சோதித் துப் பார்த்ததில், அவர்கள்  உடலில் ஒமேகா 3, 6 கொழுப்பு அமிலங்கள் மிகக் குறைவாக இருப்பது தெரியவந்தது.

இவை அதிகமாக இருந்தவர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட வில்லை. எனவே புற்றுநோய் வராமல் தடுக்கவும், பொதுவான உடல் ஆரோக்கியத்திற் கும் ஒமேகா 6 கொழுப் பைத் தினமும் ஆண்கள் 17 கிராமும், பெண்கள் 12 கிராமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News