.இந்தியக் குடும்பங்கள் வசம் சுமார் 35,000 டன்களுக்கும் அதிகமான தங்கம் உள்ளது. இது உலகின் மொத்த தங்கத்தில் 11% ஆகும். அமெரிக்க அரசின் பாதுகாப்புக் கிடங்கில் உள்ள தங்க இருப்பை (8,133 டன்) விட இது 4 மடங்கு அதிகமாகும். இந்தியாவில் பாரம்பரியமாகவும், கலாச்சார ரீதியாகவும் தங்கம் ஒரு பாதுகாப்பான சேமிப்பாகவும், சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுவதால் பல தசாப்தங்களாக இந்தச் சேமிப்பு தொடர்கிறது.
ஸ்பேஸ் எக்ஸ் அதிரடி: எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் மூலம் உலகின் எந்த நகரத்திற்கும் 30 நிமிடங்களுக்குள் பயணிக்கும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பயண நேரம்: லண்டன் முதல் நியூயார்க் வரை வெறும் 29 நிமிடங்களிலும், நியூயார்க் முதல் பாரிஸ் வரை 30 நிமிடங்களிலும் செல்ல முடியும்.மெகா புரட்சி: எதிர்காலத்தின் இந்த அதிவேகப் போக்குவரத்து முறை, உலகளாவிய மனித மற்றும் சரக்கு போக்குவரத்தில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கப் போகிறது.
பூமி மற்றும் செவ்வாய் கோள்கள் ஒரே மாதிரியான விண்வெளிப் பொருட்களால் உருவானவை என புதிய ஆய்வில் தகவல். சூரிய குடும்பத்தின் வெளிப்புறப் பொருட்களால் பூமி உருவானது என்ற பழைய கருத்தை இந்த ஆய்வு மாற்றியுள்ளது. பூமியைப் போலவே செவ்வாயும் ஆரம்பத்தில் தண்ணீருடன் இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
1.தினமும் Apple சாப்பிட்டால் Doctor தேவையில்லை. 2. தினமும் 4 Badam (பாதாம்) சாப்பிட்டால் Cancer அருகே கூட வராது. 3.தினமும் Lemon (எலுமிச்சை) எடுத்துக்கொண்டால் Fat (கொழுப்பு) இருக்காது. 4. தினமும் 2-3 litters Water (தண்ணீர்) குடித்தால் Dry Skin வராது. 5. தினமும் 4 Khajoor (பேரீச்சம்பழம்) சாப்பிட்டால் Weakness (சோர்வு) இருக்காது. 6. தினமும் 8 மணி நேர Sleep (உறக்கம்) இருந்தால் Stress (மன அழுத்தம்) இருக்காது !. 7. தினமும் 40 நிமிடம் Exercise (உடற்பயிற்சி) செய்தால் Fit ஆகவும், இளமையாகவும் காணப்படுவீர்கள்.
இந்திய ராணுவத்தின் தரைப்படை வலிமையை மேம்படுத்தும் வகையில், ரூ.975 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து.. இதன்படி, போர்க்களத்தில் எதிரிகள் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளைத் தகர்த்துமுன்னேறிச் செல்ல உதவும் TRAWL கருவிகள் கொள்முதல் செய்ய திட்டம்.. இவை இந்திய ராணுவத்தின் பிரதான பீரங்கிகளான T-72 மற்றும் T-90 ரக டாங்கிகளில் பொருத்தப்படும்..
குவாலிட்டி வால்ஸ் (Kwality Wall's) நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் தனது அனைத்து தயாரிப்புகளையும் 100% பால் சார்ந்த ( Milk-based) உண்மையான ஐஸ்கிரீம்களாக மாற்றப்போவதாக அதன் (Peter ter Kulve) அதிரடியாகஅறிவித்துள்ளார். இதுவரை பாமாயில் போன்ற தாவரக் கொழுப்புகளைப் (Vegetable Fats) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வந்த மேக்னம், கார்னெட்டோ மற்றும்குவாலிட்டி வால்ஸ் தயாரிப்புகள், இனி முற்றிலும் தரமான பால் மற்றும் பால்பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்படும். இந்திய மக்கள் ஆரோக்கியமான மற்றும்பால் சார்ந்த ஐஸ்கிரீம்களையே அதிகம் விரும்புவதால் இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க முடிவைஎடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
1. இரசாயன சமிக்ஞைகள் (Chemical Signals)நம் உடலில் சுரக்கும் வியர்வை மற்றும் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் மூலம் சில வகையான அமிலங்கள் (உதாரணமாக லாக்டிக் அமிலம் மற்றும் யூரிக் அமிலம்) வெளிப்படும். மற்ற இரத்த பிரிவினரை விட 'O' பிரிவு இரத்த வகை உள்ளவர்களின் உடலில் இருந்து இந்த அமிலங்கள் சற்று அதிகமாக சுரக்கின்றன. இந்த வாசனை கொசுக்களைக் காந்தம் போல் ஈர்க்கிறது.2. 'சீக்ரெட்டர்கள்' (Secretors)உலகில் உள்ள மனிதர்களில் சுமார் 80% பேர் 'சீக்ரெட்டர்கள்' (Secretors) என்று அழைக்கப்படுகிறார்கள். அதாவது, இவர்கள் தங்களின் இரத்த வகை என்ன என்பதைத் தங்களின் உமிழ்நீர் (Saliva) மற்றும் வியர்வை மூலமாகவே வேதியியல் சமிக்ஞைகளாக வெளிப்படுத்தி விடுவார்கள். கொசுக்கள் இந்தச் சமிக்ஞைகளை எளிதில் கண்டறிந்து, 'O' பிரிவு சீக்ரெட்டர்களை நோக்கி உடனே படையெடுக்கின்றன.கொசுக்களை ஈர்க்கும் பிற முக்கிய காரணங்கள்:இரத்த வகை மட்டுமின்றி, கொசுக்கள் உங்களைக் கடிக்க இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன:கார்பன் டை ஆக்சைடு ($CO_2$):நாம் சுவாசித்து வெளிவிடும் கார்பன் டை ஆக்சைடை கொசுக்கள் சுமார் 50 மீட்டர் தூரத்தில் இருந்தே மோப்பம் பிடித்துவிடும். அதிகமாக மூச்சு வாங்குபவர்கள், பருமனானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களைக் கொசுக்கள் எளிதில் குறிவைக்க இதுவே காரணம்.உடல் வெப்பம்: உடற்பயிற்சி செய்து முடித்த உடனோ அல்லது உடல் வெப்பம் அதிகமாக இருக்கும்போதோ கொசுக்கள் அதிகமாகக் கடிக்கும்.ஆடையின் நிறம்: கொசுக்களுக்குக் கண்பார்வையும் உண்டு. கறுப்பு, அடர் நீலம் (Dark Blue) போன்ற கரும் நிற ஆடைகளை அணிந்திருப்பவர்களைக் கொசுக்கள் எளிதாக அடையாளம் கண்டு தேடி வரும்.சுருக்கமாக: 'O' பிரிவு இரத்தம் உள்ளவர்களின் உடல் வாசனை மற்றும் வியர்வை, கொசுக்களுக்கு ஒரு 'பிரியாணி' வாசனை போலத் தெரிவதால் தான் அவர்கள் அதிகமாகக் கொசுக்கடியால் அவதிப்படுகிறார்கள்.
வானியற்பியல் உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக, பூமியிலிருந்து சுமார் 10.7 ஒளி ஆண்டுகள் (Light-years) தொலைவில் உள்ள GJ 887 d என்ற புதிய கோளை வானியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். இது தனது நட்சத்திரத்தின் "வாழக்கூடிய பகுதியில்" (Habitable Zone) அமைந்துள்ளதால், அங்கு திரவ நிலையில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நம்பப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு.தமிழகம் முழுவதும் உத்தரவு..! இனி பாக்கெட் வடிவில் சீல் வைத்து வழங்கப்படும். எடை குறைவு. கலப்படம், கடத்தல் முழுமையாக தடுக்கப்படும். ஏழை, எளிய மக்களின் உணவுப் பாதுகாப்பே எங்கள் முதன்மை. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் உறுதி. முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி. மக்களின் நம்பிக்கை எங்கள் பொறுப்பு. தரமான பொருள்- சரியான எடை - உங்கள் உரிமை பாக்கெட் ரேஷன் -பாதுகாப்பான நாளை.விஜய் வாக்குறுதி செயல்.
சாம்சங் நிறுவனத்தின் செமி கண்டக்டர் பிரிவானது, தனது சிப் விற்பனை மூலம் 49 மடங்கு கூடுதல் வருவாயை கடந்த காலாண்டில் ஈட்டியுள்ளது.இதன் மூலம் நிறுவன ஊழியர்களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ் வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.