25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் .

உலகிலேயே மிக அதிகமான பெண் விமானிகளைக் கொண்ட நாடு, இந்தியா கடந்த, 2023ல் எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி, உலகளவில் உள்ள விமானிகளில் பெண்களின்பங்கு, 5-5-7 சதவீதம் மட்டுமே. ஆனால், இந்தியாவில் இது, 15 சதவீதமாகஉள்ளது.

 

இந்திய விமான நிறுவனங்களான, 'இண்டிகோ,ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், விஸ்தாரா' போன்றவற்றில், 1,500க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் பணியாற்றுகின்றனர்.

 

இந்த சாதனைக்கு வித்திட்டவர், இந்தியாவின் முதல் பெண் விமானியான, சரளா தாக்ரல். அவரது முன்னோடி முயற்சிகள், இன்று ஆயிரக்கணக்கான பெண்களை, விமான போக்குவரத்து துறையில் சிறந்து விளங்க வைத்துள்ளன.

 

பஞ்சாப் மாநிலத்தில், 1914ம் ஆண்டு பிறந்த சரளா, 1936ல், தன் 21 வயதில், லாகூர்விமானப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, தனி விமானம் ஓட்டி, 'ஏ' உரிமம் பெற்றார். அவரது கணவர், பி.டி.ஷர்மாவும் விமானி தான். சரளா, ஒரு குழந்தையின்

தாயாக இருந்த போதும், அவருக்கு பி.டி.ஷர்மா மிகப்பெரிய ஊக்கமாக இருந்தார்.

 

சரளா, 1937ல் வணிக விமான உரிமம் பெற்று, இந்தியாவின் முதல் பெண் வணிக விமானியானார்.ஆணாதிக்கத்தை உடைக்கும் வகையில் சேலை அணிந்து, விமானம் இயக்கினார்.

 

சரளாவின் தைரியமும்,உறுதியும்,அப்போதைய ஆணாதிக்க சமூகத்தில், பெண்களுக்கு புதிய பாதைகளைத் திறந்தன. இன்று, இந்தியபெண் விமானிகள், உலக அரங்கில் புகழ் பெற்றுள்ளனர். கேப்டன் ஜோயா அகர்வால் போன்றவர்கள், போயிங் 777' ரகத்தை சேர்ந்த பெரிய விமானங்களை இயக்கி, சாதனை படைத்துள்ளனர்.

 

பாலின இந்தியாவின் இந்த பெருமை, சமத்துவத்திற்கு முன்மாதிரியாகவும், பெண்களின் திறனை உலகுக்கு உணர்த்தும் ஒளிவிளக்காகவும் திகழ்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News