25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Mar 11, 2024

இன்போசிஸ் பல உச்சங்களைத் தொட விஷால் சிக்காவின் கணிசமான பங்கு

இந்திய ஐடி துறையில் மிகவும் பிரபலமானவர் விஷால் சிக்கா. நாட்டின் மிகப் பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸின் முன்னாள் சிஇஓ இவர். உலகம் முழுவதும் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க செய்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.6,95,000-க்கும் மேல் ஆகும்.நாராயணமூர்த்தியால் நிறுவப்பட்ட இன்போசிஸ் இந்தியாவின் அதிபுத்திசாலிகள் பலரால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. அதில் விஷால் சிக்காவும் ஒருவர். 2014 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டுவரை இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் சிஇஓவாகவும் விஷால் சிக்கா பதவி வகித்துள்ளார்.இன்றைக்கு இன்போசிஸ் பல உச்சங்களைத் தொடுவதற்கு விஷால் சிக்காவும் கணிசமான பங்கை அளித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓவாகவும் நிர்வாக இயக்குநராகவும் விஷால் சிக்கா நியமிக்கப்பட்டார். 2017 ஆம் ஆண்டு வரை அவர் இன்போசிஸ்க்கு தலைமை வகித்தார். விஷால் சிக்கா தனது பதவிக்காலத்தில் நாட்டிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்களில் ஒருவராக இருந்தார். அப்போது அவரது சம்பளம் ரூ.48 கோடிக்கும் மேல் ஆகும். இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு விலகிய பின்பு 2019 ஆம் ஆண்டில் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் கம்பெனியான வியானய் என்ற நிறுவனத்தை தொடங்கி அதில் முழுமூச்சாக விஷால் சிக்கா தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.. சிடிஓ என்ற வீதத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த டெக்னாலஜி ஆர்க்கிடெக்சர் மற்றும் சாப் நிறுவனத்தின் தயாரிப்பு உத்திகளுக்கும் பொறுப்பாக இருந்தார்.இன்னும் விஷால் சிக்காவைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் சாப் நிறுவனத்தின் மிக முக்கியமான இன்-மெமரி டேட்டா பிளாட்பார்மான SAP HANA-வை உருவாக்கியப் பெருமை இவருக்கு உண்டு. சாப் நிறுவன வரலாற்றிலேயே மிக அதிகமாக விற்று வரும் பிளாட்பார்ம் இது. விஷால் சிக்கா தற்போது ஆரக்கிளின் இயக்குநர்கள் குழுவிலும், பிஎம்டபிள்யூ குரூப்பின் மேற்பார்வைக் குழுவிலும், ஸ்டான்போர்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யுமன் சென்டர்டு ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் நிறுவனத்தின் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். அத்துடன் அவரது வியானய் நிறுவனம் சான்பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்டார்ட்அப் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் தொடர்பான சாப்ட்வேர் சர்வீஸ்களை செய்து வருகிறது.

Mar 11, 2024

புதிய ஆர்டர்கள் வரத்து தொடங்கி உள்ளதால் திருப்பூரில் குவியும் வடமாநில தொழிலாளர்கள்

கடந்த சில நாட்களாக ரெயில்களில் சாரை சாரையாக வந்து குவியும்கொண்டிருக்கின்றனர்.தமிழகத்தை சேர்ந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி,21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும், திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி மற்றும் ஹோலிபண்டிகைக்கு மட்டும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது வழக்கம்.சொந்த ஊரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்று விரைவில் திரும்புவர். இந்தநிலையில்பொங்கல் பண்டிகைக்கு5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின் தைப்பூசம், குடியரசு தினம், சனி, ஞாயிறு என4 நாட்கள் விடுமுறைஇருந்தது. மேலும் சில நாட்கள் சேர்த்து வடமாநில தொழிலாளருக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.அதன்படி கடந்த மாதம்16ந் தேதிக்கு பிறகு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள்தற்போது திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர்.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு பிறகு, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள்மட்டுமல்லாது, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கும், கடந்த மாதத்தில் இருந்து ஆர்டர் வரத்துதொடங்கி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்களுக்கு பனியன் நிறுவனங்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளன.திருப்பூரில் இருந்து சென்ற, ஒடிசா, பீஹார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தற்போது திருப்பூர்திரும்பி கொண்டிருக்கின்றனர். உத்தரபிரதேச தொழிலாளர்கள், அயோத்தி ஸ்ரீராமர் கோவில்கும்பாபிஷேகவிழாவுக்காக  உற்சாகத்துடன்  சென்றனர்.விடுமுறை முடிந்து தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததும் கடந்த சிலநாட்களாக,ரெயில்களில் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், தீபாவளிக்கு பிறகு, பொங்கல்பண்டிகை வரை, உற்பத்தி மந்தமாக இருந்தது. புதிய ஆர்டர் விசாரணை சூடுபிடித்துள்ளதால்பின்னலாடை உற்பத்தியும் வேகமெடுக்கும். அதற்காகவே சொந்த ஊர் சென்ற வடமாநிலதொழிலாளர்கள் திருப்பூர் திரும்பி கொண்டிருக்கின்றனர். புதிய தொழிலாளர்களையும் அழைத்து வருகின்றனர் என்றனர்.

Mar 09, 2024

கங்கை நதியில் யாரும் குளிக்க வேண்டாம் 

நாட்டின் புனித நதிகளில் ஒன்று கங்கை. இமயமலையில் இந்த நதி உருவாகி பலமாநிலங்கள் வழியாக கடந்து சென்று மேற்கு வங்க மாநிலத்தில் கடலில் கலக்கிறது.கங்கை நதியில் நீராடினால் அனைத்து பாவங்களும் போகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி பேர் கங்கை நதியில் நீராடுகிறார்கள்.இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை ஆறு பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. மேலும், ஒருநாளைக்கு 258 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால் பாக்டீரியா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் கங்கை நதியில் குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை கழிவுநீரை சுத்திகரிக்காமல் நேரடியாக கங்கை நதியில் கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் ஆலைகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் மேற்குவங்க அதிகாரிகளுக்கும் அபராதம் விதிக்கப்படும் என பசுமை தீர்ப்பாயம் எச்சரித்துள்ளது. 

Mar 09, 2024

திருமண கொண்டாட்டத்தில் பேசிய மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா ஜாம்நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இந்த கொண்டாட்டத்தில் உலகளவில் பிரபலமான பிரபலங்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த திருமண கொண்டாட்டம் கண்களை பறிக்கும் நிகழ்வாக இருந்தது.உலகிலேயே மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக அம்பானி குடும்பத்தின் நிலையை இது மேலும் உறுதிப்படுத்தியது.ஒரு பில்லியனரின் மகனாக இருந்தபோதிலும், தனது தந்தைக்கு சொந்தமான துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்த போதிலும், தனக்கு வாரந்திரா பாக்கெட் மணியாகவெறும் ரூ.5 மட்டுமே தன்னுடைய பெற்றோர்கள் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அவரது சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை "பிக்‌காரி”(bikhari) என்று கிண்டல் செய்தனர் (பிக்காரி என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் "பிச்சைக்காரர்" என்று பொருள்)என்றும் ஆனந்த அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ஆனந்த அம்பானியின் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட போது தந்தை முகேஷ் அம்பானி மற்றும் தாய் நீதா அம்பானி குலுங்கி குலுங்கி சிரித்ததாக கூறப்படுகிறது..பிச்சைக்காரன் என்று சிறுவயதில் கிண்டல் செய்யப்பட்டாலும், படிப்பில் சிறந்து விளங்கிய ஆனந்த அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, வேகமாக தொழில் துறையில் சாதித்தார்.தற்போது அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ன் முக்கியமான பிரிவான ரிலையன்ஸ் NewEnergy பிரிவை வழிநடத்துகிறார்.ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 6 மாதமாக தினமும் 16 மணிநேரம் பணியாற்றுவதாக ஆனந்த் அம்பானி 3 நாள் விழாவில் அனைத்து விருந்தினர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

Mar 09, 2024

தனித்துவமான பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள கூகுள் நிறுவனத்தின் தமிழர் சுந்தர் பிச்சை

 சுந்தர் பிச்சையின் வெற்றி ரகசியமாக , அவர் செல்போன்களை பயன்படுத்தும் விதமும் ஆச்சரியம் அளிக்கிறது.PixelFold எனும் போனை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை, தன்னுடைய விமான பயணங்களின்போதும், பிஸியான நாட்களிலும் இலகுமான போன்களை வைத்திருக்கவே அவர் விரும்புகிறார்.மின்னஞ்சலை விரைவாக சரிபார்க்க மட்டுமே அவர் அந்த சமயங்களில் செல்போனை பயன்படுத்துகிறார். மேலும், கூகுள் பிக்சல் 7 ப்ரோ, சாம்சங் கேலக்சி மற்றும் ஐபோன் ஆகிய ஸ்மார்ட்போன்களை மதிப்பிடுவதற்காக அவர் பயன்படுத்தி வருகிறார்.அத்துடன் ஒவ்வொரு போனிலும் ஒரு சிம்கார்டை அவர் வைத்திருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதுபோன்ற வித்தியாசமான செயல்களும் அவரது வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுகிறது51 வயதாகும் சுந்தர் பிச்சை, பிறரைப் போல் புத்தகம், உடற்பயிற்சிக் கூடம் என்றில்லாமல் தனது நாளை வித்தியாசமான அணுகுமுறையுடன் தொடங்குகிறார்.அவர் முதலில் தொழில்நுட்ப உலகில் மூழ்கிறார். குறிப்பாக, சுந்தர் பிச்சை thelensofTechmemeஐ கையாள்கிறார். இது தினசரி தொழில்நுட்ப செய்திகளுக்காக அவர் அடிக்கடி நாடும் இணையதளம் ஆகும். அதேபோல் பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் கூறுகளை இணைத்துக் கொள்வதை காலை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது, டிஜிட்டல் உலகில் நுழையும் அதே வேளையில் செய்தித்தாளையும் சுந்தர் பிச்சை எடுத்துக் கொள்கிறார். இந்த கலவையானது, வேகமாக மாறி வரும் உலகில் தகவல் தெரிவிப்பில் சுந்தர் பிச்சையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.அத்துடன் அவரது இந்த பழக்கவழக்கம், தனிப்பட்ட விருப்பங்களை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, இன்றைய வேகமான சூழலில் சேகரிக்கப்பட்ட மற்றும் எளிதில் புரியும் வகையிலான தகவலின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் வெளிப்படையாகக் காட்டுகிறது.

Mar 09, 2024

ஏசியை ரிமோட் மூலம் ஆஃப் செய்வதால் மட்டும் மின்சாரத்தை சேமிக்க முடியாது

.தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டதால் பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது. வெயில் காலத்தில் ஃபேன், ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்கள் அதிகளவில் தொடர்ச்சியாக வீடுகளில், அலுவலகங்களில் இயக்கப்படும் என்பதால், இந்த கூடுதல் மின் நுகர்வை எவ்வித தடங்கலுமின்றி எதிர்கொள்ள, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமும் தயாராக உள்ளது.தமிழ்நாட்டின் தற்போதைய மின்தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகாவாட் வரை உள்ளது. இது வரும் ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற மே மாதத்தில் அதன் அளவு இன்னும் கூடி 17,400 மெகாவாட் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பள்ளி ஆண்டுத் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால், அனைத்து பள்ளிகளுக்கும் மின்சாரம் எவ்வித தடங்கலுமின்றி வழங்குவதற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வீடுகளில் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராகும் வகையில் இரவு பகலாக தடையின்றி மின் விநியோகம் கொடுக்கப்படுகிறது. ஆண்டு தேர்வுகள் முடிவுற்ற பின் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்தும் விதமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் விழிப்புணர்வு பதிவுகள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் வெயில் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஏசியை ஆஃப் செய்யும் போது வெறுமனே ரிமோட் கண்ட்ரோலில் மட்டும் ஆஃப் செய்யாமல் ஸ்டெபிலைசரின் சுவிட்சையும் மறக்காமல் ஆஃப் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலமாக தான் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் அதிக மின் கட்டணத்தை தவிர்க்க முடியும் எனவும் அலர்ட்செய்துள்ளது.அரசு என்னதான் மின் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் நம்மில் ஒவ்வொருவரும் மின் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மட்டுமே கோடைக்காலத்தில் தடங்கலின்றி மின்சாரம் பெற முடியும்.அதேபோல் தேவையற்ற அலங்கார விளக்குகள், தோட்டங்களில் பயன்பாடுக்கு அதிகமாக ஆழ்துளை மோட்டார்களை இயக்குதல் உள்ளிட்டவைகளை தவிர்க்க வேண்டும்.

Mar 08, 2024

ஆனந்த் அம்பானி திருமணம் நிகழ்ச்சியில் நடனங்கள்,குத்தாட்டம்

 ஆனந்த் அம்பானியின் திருமணகொண்டாட்டத்தில் பங்கேற்று ஷாரூக்கான் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கு, தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சென்டிற்கும் வருகின்ற ஜூலை 1stதிருமணம் நடைபெறவுள்ளது.இவர்களின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் தொடங்கியது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷூக்கர்பெர்க், பில்கேட்ஸ், பாடகி ரிஹானா பங்கேற்றனர்.டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வீடியோவில், நீதா அம்பானி உளமார ஈடுபட்டு ஆடியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் வாழ்க்கைப் பயணத்திற்குத் தெய்வீக ஆசீர்வாதங்களை வேண்டி நடனமாடினார். நீதா அம்பானி இளம் வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர்.இந்த நிகழ்ச்சிக்கு இசை அமைப்பாளர்கள் அஜய்-அதுல் இசையமைக்க, ஸ்ரேயா கோஷல் பாடினர். இதற்கு நீதா அம்பானி நடனமாடினார். நீதா அம்பானியின் நடனத்திற்கு கோரியோகிராப் செய்தது, நடன அமைப்பாளர் வைபவி மெர்ச்சண்ட்.திரைபிரபலங்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அக்ஷய் குமார், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், வருண் தவான், இயக்குனர் அட்லீ கலந்து கொண்டனர்.மேலும், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், தோனி, ஹர்திக் பாண்ட்யா, ரோஹித் சர்மா, கிரோன் பொலார்டு என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.முதல் நாள் கொண்டாட்டம்  உற்சாகத்துடன் நடந்து முடிந்துள்ளது  கொண்டாட்டத்தில் சர்வதேச புகழ் பெற்ற பாப் பாடகி ரிஹானாவின் கலைநிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது.அவருடன் ஷாரூக்கான், ரன்வீர் சிங், வருண் தவான் உள்ளிட்டோரும் கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதற்கிடையே ஷாரூக்கான் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.     

Mar 07, 2024

 உலகின் மிக ஏழ்மையான புருண்டி நாடு

 அடிப்படை வசதிகள் இன்றி, ஏன் ஒரு வேளை உணவு கூட பெரும் போராட்டமாக இருக்குமளவுக்கு மிக ஏழ்மையான வாழ்வை மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் நாடுகளும் உலகில் இன்றளவும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.உலகின் மிக ஏழ்மையான நாடாக புருண்டி என்ற நாடு கண்டறியப்பட்டுள்ளது, .உலகின் வளர்ந்த பணக்கார நாடுகளில் இருக்கும் மக்கள் வறுமை என்ற சொல்லை கேள்விப்பட்டிருப்பார்கள். உலகின் ஏழ்மையான நாடுகளில், புருண்டி முதலிடம் வகிக்கிறது, இந்தநாட்டின் மக்கள் தொகை சுமார் 12 மில்லியனாக உள்ள நிலையில், இதில் 85 சதவீத மக்கள் மிக கடுமையான வறுமையில் வாடுகின்றனர். இந்த நாட்டில் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பி உள்ள நிலையில் இந்த நாட்டு மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வறுமை வாட்டியெடுக்கும் வாழ்வை வாழ்கிறார்கள்.காலணித்துவ  ஆட்சியின்கீழ் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த நாட்டை ஆண்டு, பின்னர் இந்த நாடு சுதந்திரம் அடைந்த போது, இங்கே பொருளாதார நிலை நன்றாக இருந்தது, காலவோட்டத்தில்1996 ஆம் ஆண்டு முதல் நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது.1996 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் நடந்த பெரும் இனக்கலவரம் மில்லியன் கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது, அன்று தொட்டு அந்நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்து .இந்த நாட்டு மக்களின் ஆண்டு வருமானம் ஆண்டுக்கு 180 டொலர்களாக மிக குறைந்த வருமானமாக அமைகிறது,தவிரவும் இங்கு 3 பேரில் ஒருவர் வேலையில்லாமல் துன்பப்படும் அவலம் நேர்கிறது, நாள் முழுவதும் உழைத்தாலும், தினமும் 50 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலை இங்கே காணப்படுகிறதுஉள்ளிட்ட பல நாடுகள் வறுமையுடன் இன்றளவும் போராடி வருகின்றன, எண்ணற்ற இயற்கை வளங்கள் மண்ணுள்ளே பொதிந்து கிடக்க, வல்லரசு நாடுகளால் அவை சுரண்டப்பட்டு அந்த நாடுகள் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு செல்ல, வளத்தை இழந்து வாழும் வழியையும் இழந்து வறுமை கோர தாண்டவம் ஆட இன்று வறுமையில் வாடும் இந்த நாட்டின் அவலம் அடுத்த சந்ததியையும் விடாமல் துரத்தும்  என்பதே உண்மை.

Mar 06, 2024

தமிழ்நாட்டில் Apple MacBook தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

உலக நாடுகளே பொறாமைப்படும் விதத்தில் ஆப்பிள் (Apple) நிறுவனம் விரைவில் அதன் புதிய மேக்புக் சாதனங்களை தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதன் புதிய மேக்புக் லேப்டாப் கருவிகளை விரைவில் தமிழ்நாட்டில் இருந்து உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கானபிரத்தியேகமான தயாரிப்பு ஆலையை ஆப்பிள் நிறுவனம் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நிறுவவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாட்டின் சாத்தியமான உற்பத்தி மையம் இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஆப்பிளின் பிரபலமான மேக்புக்குகள் அடுத்த ஆண்டில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படவுள்ளதை   நம்மால் எக்ஸ் தலத்தில் பார்க்கமுடிகிறது. இது மாநிலத்தின் தொழில்நுட்ப பிரிவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்தியாவில் ஒரு புதிய ஆலையை நிறுவி, பிசி மற்றும் சர்வர் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் தைவானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பெகாட்ரான்(Pegatron) நிறுவனம் மேக்புக் தயாரிப்பை தமிழ்நாட்டில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வசதியின் உத்தியோகபூர்வ நோக்கம் பர்சனல் கம்ப்யூட்டர் (PC) உற்பத்தியாகும் போது, Apple MacBooks கலவையில் சேர்க்கப்படும் சாத்தியம் இருப்பதாக பல அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த சாத்தியமான மாற்றம் இந்தியா மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டிற்கும் நம்பிக்கைக்குரிய தாக்கங்களைக் கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, இது உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில், மேலும் முதலீட்டை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான சாத்தியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கூடுதலாக, இது மேக்புக்கை இந்திய சந்தையில் அணுகக்கூடியதாக மாற்றும். இது இறக்குமதி செலவுகளை குறைக்க அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆப்பிளைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு பாதுகாப்பான சந்தையாக திகழ்கிறது.சீனாவிற்கு அப்பால் அதன் உற்பத்தித் தளத்தை பல்வகைப்படுத்துவதற்கான நிறுவனத்தின் மூலோபாயத்துடன் இது ஒத்துப்போகிறது. இந்த நடவடிக்கையானது, குறிப்பாக புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைவுகளை எதிர்கொண்ட காரணங்களினால் உருவாகியுள்ளது. ஆகையால், கூடுதல் பிராந்தியத்தை ஆப்பிள் நம்பியிருக்க பார்க்கிறது.இதனால், இந்தியாவை தேர்வு செய்து ஐபோன் தயாரிப்பை துவங்கிய நிறுவனம், விரைவில் மேக்புக் தயாரிப்பையும் துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது இன்னும் வளரும் கதை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேக்புக்குகள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உற்சாகமாக இருந்தாலும், அதை ஆப்பிள் அல்லது பெகாட்ரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.பெகாட்ரான் மற்றும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு இடையேயான சமீபத்திய ஒப்பந்தம், தோராயமாக $120 மில்லியன் டாலர் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. ஆனால், இது எந்த தயாரிப்பு பொருளை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப் போகிறது என்ற குறிப்பிட்ட தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், டெக் வட்டாரங்கள் ஆப்பிள் மேக்புக் தயாரிப்பை எதிர்பார்ப்பதாக உறுதிபட நம்புகின்றன.இந்தச் செய்தி இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கு ஊக்கமளிக்கும் மற்றும் இந்திய நுகர்வோருக்கு ஆப்பிள் தயாரிப்புகளை அதிக அளவில் அணுகுவதற்கான நம்பிக்கையைத் தூண்டுகிறது.

Mar 06, 2024

வங்கியில் லாக்கர்கள் வசதி, வாங்குவதற்கு முன்பாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

வங்கி லாக்கர்கள் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், தனிநபர்கள் எந்த வங்கியிலும் லாக்கரையும் வாங்கலாம்.அவர்கள் ஏற்கனவே வங்கிக் கணக்கை வைத்திருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல். உங்களுக்கு வங்கியுடன் எந்த முன் தொடர்பும் இல்லாவிட்டாலும், பாதுகாப்பான வைப்பு லாக்கரைப் பெறலாம்.  உதாரணமாக, நீங்கள் பேங்க் A இல் உங்கள் சம்பளக் கணக்கையும், வங்கி B இல் உங்கள் சேமிப்பையும் பராமரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், மேலும் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லாத வங்கி C அருகில் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வங்கி C-ஐ அணுகலாம். நீங்கள் KYC செயல்முறையை முடிக்க வேண்டியிருக்கும் போது, குறிப்பிட்ட வங்கியில் வங்கி லாக்கரைப் பாதுகாக்கலாம். வங்கி லாக்கருக்காக வங்கி கணக்கு திறக்க வேண்டிய அவசியமில்லை.அடுத்த முக்கியமான பிரச்சனை வங்கியில் லாக்கர் இல்லை என வங்கிகள் சொல்வது. ஆகஸ்ட் 2021 இல் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளில் மாற்றத்தைத் தொடர்ந்து, வங்கிகள் இப்போது காலியாக உள்ள லாக்கர்களின் பதிவையும் வாடிக்கையாளர்களின் காத்திருப்புப் பட்டியலையும் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.நீங்கள் வங்கியில் லாக்கருக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலளிக்க வேண்டும். உங்கள் விருப்பப்படி லாக்கரை ஒதுக்க வேண்டும் அல்லது காத்திருப்புப் பட்டியல் எண்ணை உங்களுக்கு வழங்க வேண்டும். இது லாக்கர் ஒதுக்கீடு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்கிறது.நீங்கள் ஒரு லாக்கரை பெற விரும்பினால், நிலையான வைப்புத்தொகை திட்டத்தை சேர்வு செய்ய வங்கி உங்களைக் கோரலாம். இது பொதுவாக அவ்வங்கியில் புதிய வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக வங்கிக்கு புதிதாக வருபவர்களுக்கு பொருந்தும்.இது கடுமையானதாகத் தோன்றினாலும், லாக்கரைப் புறக்கணிக்கும் போது அல்லது வங்கி திவாலாகும் போது அரசின் உதவியை உறுதி செய்வதே அடிப்படைக் காரணம். எந்தவொரு தன்னிச்சையான தொகைக்கும் வங்கி பிக்சட் டெபாசிட் கோர முடியாது.விதிமுறைகளின்படி, மூன்று வருடங்களாக வாடகை செலுத்தப்படாமல் மற்றும் செயல்பாடுகள் ஏதும் இல்லாதிருந்தால், லாக்கரை உடைத்ததற்காக வங்கியால் குறிப்பிடப்படும் ஏதேனும் கட்டணங்களுடன், மூன்று வருட வாடகைக்கு சமமான தொகையுடன் பிக்சட் டெபாசிட் நிதியளிக்கப்பட வேண்டும்.லாக்கர்களுக்கு வரும்போது பலர் நாமினிகளின் முக்கியத்துவத்தை கவனிக்கவில்லை. இருப்பினும், வங்கிகள் நாமினி வசதியை வழங்குவது கட்டாயமாகும். உங்கள் லாக்கருடன் தொடர்புடைய ஒரு நாமினியை வைத்திருப்பது மற்றும் நாமினியின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களைத் தேர்ந்தெடுப்பது, மாற்றுவது அல்லது புரிந்துகொள்வதற்கான நடைமுறைகளைப் தெரிந்துகொள்வது முக்கியம்.கூடுதலாக, லாக்கர் வைத்திருப்பவர் இறந்துவிடும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வில் நாமினி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

1 2 ... 38 39 40 41 42 43 44 45 46 47

AD's



More News