திருமண கொண்டாட்டத்தில் பேசிய மணமகன் ஆனந்த் அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழா ஜாம்நகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.இந்த கொண்டாட்டத்தில் உலகளவில் பிரபலமான பிரபலங்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.விலையுயர்ந்த ஆடைகள், ஆடம்பரமான அலங்காரங்கள் மற்றும் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த திருமண கொண்டாட்டம் கண்களை பறிக்கும் நிகழ்வாக இருந்தது.உலகிலேயே மிகவும் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாக அம்பானி குடும்பத்தின் நிலையை இது மேலும் உறுதிப்படுத்தியது.
ஒரு பில்லியனரின் மகனாக இருந்தபோதிலும், தனது தந்தைக்கு சொந்தமான துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்த போதிலும், தனக்கு வாரந்திரா பாக்கெட் மணியாகவெறும் ரூ.5 மட்டுமே தன்னுடைய பெற்றோர்கள் வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக அவரது சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை "பிக்காரி”(bikhari) என்று கிண்டல் செய்தனர் (பிக்காரி என்ற வார்த்தைக்கு ஹிந்தியில் "பிச்சைக்காரர்" என்று பொருள்)என்றும் ஆனந்த அம்பானி தனது சிறுவயதில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ஆனந்த அம்பானியின் இந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்ட போது தந்தை முகேஷ் அம்பானி மற்றும் தாய் நீதா அம்பானி குலுங்கி குலுங்கி சிரித்ததாக கூறப்படுகிறது.
.பிச்சைக்காரன் என்று சிறுவயதில் கிண்டல் செய்யப்பட்டாலும், படிப்பில் சிறந்து விளங்கிய ஆனந்த அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, வேகமாக தொழில் துறையில் சாதித்தார்.தற்போது அவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ன் முக்கியமான பிரிவான ரிலையன்ஸ் NewEnergy பிரிவை வழிநடத்துகிறார்.ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 6 மாதமாக தினமும் 16 மணிநேரம் பணியாற்றுவதாக ஆனந்த் அம்பானி 3 நாள் விழாவில் அனைத்து விருந்தினர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
0
Leave a Reply