கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் (26.09.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார்.
நமக்கு கனவுகள் என்பது அதிகமாக இருக்கின்றது. கனவுகள் அடைய வேண்டும் என்றால் நம்பிக்கை, விடாம முயற்சி மற்றும் கடின உழைப்பு வேண்டும் என்பதை எல்லாம் விட தங்களுக்கு கனவுகளை அடைய வேண்டும் என்றால் நாம் அனைவரும் நன்கு படிக்க வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய உழைப்பிற்கு ஏற்ப பலன் உண்டு. அந்த பலன் கல்வியில் மிக அதிகமாக இருக்கும்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் படிக்க படிக்க தான் முன்னேறி செல்வீர்கள். இன்றைக்கு அரசு பள்ளியில்; ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு முன்பு இல்லை.
ஏனென்றால் நம்முடைய கல்வி முறை என்பது மாறி கொண்டே இருக்கும். அதாவது மருத்துவத்துறையில்,; கடந்த 50 வருடங்களில் 10 முறை மாற்றம் வந்துள்ளது. அதனால் நாம் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும்.நீங்கள் ஒவ்வொருவரின் உழைப்புக்கும் மிகப்பெரிய ஊதியம் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால், நீங்கள் எந்த அளவு உழைக்கின்றீர்களோ அந்த அளவுக்கு உயர்வீர்கள். பன்னிரண்டாம் வகுப்பில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதாக இருக்கும் மற்றும் ஒவ்வொரு மணி நேரமும் நீங்கள் தேர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். அதனை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருமுறை தேர்வு எழுதினால் மறுபடியும் அந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது. ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு ஒரு தங்க முட்டை போன்றது. அதனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த ஒவ்வொரு மணி நேரமும் தங்களுக்கு திரும்ப கிடைக்காது எனவும், மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், வட்டாட்சியர், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
0
Leave a Reply