25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


தெரிந்து கொள்ளுங்கள்

Apr 13, 2024

. பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன்

 உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும் வியப்படைய செய்துள்ளது விவோ பிராண்ட். பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் பல காலமாக ,சிறப்பான கேமரா (camera) அம்சங்களை உலகிற்கு அறிமுகம் செய்த விவோ நிறுவனம், இப்போது யாரும் எதிர்பார்த்திடாத வகையில், புதிதாக பறக்கும் கேமராவை ஸ்மார்ட்போனுடன் இணைத்துள்ளது.விவோ(Vivo) நிறுவனம் விரைவில் பறக்கும் கேமரா அம்சம் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது.சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களில் வருவது போன்ற ஹைடெக்கான அமைப்பை இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் இரண்டு பகுதிகளாக பிரியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.விவோ டிசைன் செய்துள்ள இந்த புதிய பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம் பார்ப்பதற்கு வழக்கமான ஸ்மார்ட்போன் போல காட்சியளிக்கிறது. இந்த போனிற்குள் நிறுவனம் ஒரு மினி ட்ரோன் கருவியை இன்பில்ட்டாக(miniinbuiltdrone) மறைத்து வைத்துள்ளது. இந்த ட்ரோனில்200MP திறன் வரை வழங்கக்கூடிய ஒரு மைக்ரோ கேமராவை விவோ உருவாக்கியுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் வழக்கமான ட்ரிபிள் கேமரா அம்சமும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.ஏரியல் வியூ வீடியோ மற்றும் புகைப்படங்களை படம்பிடிக்க இந்த் போனுடன் வரும் குவாட்க்காப்டர் ட்ரோனை(quadcopter) நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ட்ரோன் புகைப்படம் மற்றும் வீடியோ(dronephotographyandvideorecording) பதிவு கலாச்சாரம் இப்போது உலகம் முழுக்க பேமஸ் அடைந்து வரும் ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது..இதை புரிந்துகொண்ட விவோ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் பறக்கும் கேமராவை வழங்க ஒரு மினி டிரோன் கருவியை போனுக்குள் மறைத்து வைத்து உருவாக்கியுள்ளது. இந்த வடிவமைப்பிற்கான டிசைனை விவோ நிறுவனம்2020 ஆம் ஆண்டு சமர்ப்பித்து உரிமையை வாங்கி கொண்டது. நான்கு வருட நீண்ட போராட்டத்திற்கு பிறகு, வெற்றிகரமாக போனில் இருந்து பிரிந்து செயல்படும் ஒரு பறக்கும் கேமராவை விவோ இப்போது உருவாக்கியுள்ளது.,எந்த நிறுவனத்தாலும் இத்தகைய வெற்றிகரமான ப்ரோட்டோடைப் சாதனத்தை உருவாக்க முடியவில்லை என்பதே உண்மையாகும். உலகமே திரும்பி பார்க்கும் வகையில் விவோ நிறுவனம் மட்டும் இதை சாத்தியமாக்கியுள்ளது.போனில் இருந்து பிரிந்து பறக்கும் ட்ரோனை கட்டுப்படுத்த ஸ்மார்ட்போனிலேயே கண்ட்ரோலராக (controller) பயன்படுத்தும் அமைப்பையும் நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது. பறக்கும் பொழுது பொருள் அல்லது மனிதர்கள் மீது மோதாமல் இருக்க ஆட்டோமேட்டிக் டிடெக்ஷன் அம்சமும் இதில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மினி டிரோன் எவ்வளவு நேர பயன்பாட்டை வழங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இது திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த விவோ பறக்கும் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம்$1000 டாலருக்கு மேல் விலை பெரும் என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வண்டுமென்றால், கட்டாயம் விலை அதிகமாக தான் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன்னும் பல கட்ட சோதனைகளுக்கு பிறகு 2027ல் வெளிவரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Apr 13, 2024

நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்க பெண்களுக்கு உதவியாக உள்ள வெள்ளி கொலுசு.

பெண்களின் கால்களுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது அவர்கள் அணியக்கூடிய கொலுசுகள். இந்தியாவில் வெள்ளிக்கென்று தனி மவுசு உள்ளது.நம்முடைய முன்னோர்கள் சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயங்களிலும் ஒவ்வொரு விதமான பராம்பரியம் ஒளிந்துள்ளது. இதைப் பராம்பரியமாக பின்பற்றி வந்தாலும், இக்காலத்திற்கு ஏற்ப பல விதமான டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். அதுவும் பெண்களுக்கு அழகு சேர்ப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியத்திற்கு என்பதால் வெள்ளியில் கொலுசுகளை அணிந்து மகிழ்கின்றனர்..பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவற்றைக் குறைக்க வேண்டும் என்பதால் தான் வெள்ளியிலான கொலுகளை அணிய சொல்கின்றனர்.. வெள்ளி கொலுசுகளைப் பெண்கள் காலில் அணியும் போது எலும்புகள் வலுவடையும். வெள்ளி உலோகம், கணுக்கால்களைத் தொடும் போது, தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்த உதவியாக உள்ளது.வெள்ளி கொலுகளை அணியும் பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் குணப்படுத்தவும், கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவியாக உள்ளது. மேலும் வெள்ளியிலான கொலுசுகளை அணியும் போது பெண்களுக்கு ஹார்மோன் அளவை சமன் செய்ய உதவியாக உள்ளது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.நாள் முழுவதும் பெண்கள் நின்றுக் கொண்டே பல்வேறு வேலைகளைச் செய்வதால் கால் வலி பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், இந்த பிரச்சனையை வெள்ளி கொலுசு அணிவதன் மூலம் தீர்க்க முடியும்.வெள்ளி கொலுசுகள் குதிகால் நரம்பைத் தொட்டு கொண்டிருப்பதால், இந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இதோடு பெண்களின் இடுப்பு பகுதியை உறுதிப்படுத்தவும் வெள்ளி கொலுசுகள் பயன்படுகிறது. இதனால் தான் நம்முடைய முன்னோர்கள் கட்டாயம் கால்களில் தண்டை, சிலம்பு, கொலுசு என காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.உடலில் உள்ள சூட்டை அகற்றுவதோடு, இதனால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளையும் சரி செய்வதற்கு வெள்ளி கொலுசுகள் உதவியாக உள்ளது.வெள்ளி கொலுசுகளை அணிவதன் மூலம் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும், இதோடு பெண்களுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு விதமான நோய்களுக்குத் தீர்வு காணவும் உதவியாக உள்ளது. வெள்ளி கொலுசுகளைக் கால்களில் அணியும் பெண்கள் அழகாகத் தெரிவதோடு, உலோகத்தில் உள்ள கதிர்வீச்சுகள் அவர்களின் மனநிலையை மாற்றமும், எப்போதும் நேர்மறையான எண்ணங்களோடு பயணிக்கவும் பெண்களுக்கு உதவியாக உள்ளது..

Apr 13, 2024

பிரஷர் குக்கர் பயன்படுத்தும் முறை

,.எதிர்பாராதவிதத்தில் வரும் விருந்தாளிகளைச் சமாளிக்கவும்,சமையலறையில் பல மணி நேரம் வியர்வை வடிய சமையல் செய்வதிலிருந்து தப்பிக்கவும் பிரஷர் குக்கர் மிக உதவுகிறது.பிரஷர் குக்கரில் அரிசி, பருப்பு, காய்கறி என்று மூன்று விதப் பண்டங்களை ஏறக்குறைய ஒரே மணி நேரத்தில் வேக வைக்க முடியும். பல ஆண்டுகள், பிரஷர் குக்கரில் உணவு தயாரித்துப் பழக்கமிருந்தாலும், இல்லத்தலைவியர் பலருக்கு பிரஷர் குக்கரின் சக்தி, திறமை மற்றும் குக்கரைப் பாதுகாப்பது எப்படி என்பது முழுமையாகத் தெரிந்திருப்பதில்லை.குக்கரின் வெளிப்புறத்தை சோப்புக்கலந்த கொதி நீரினால் சுத்தம் செய்து, உடனே உலர வைக்க வேண்டும். குக்கரை நீரில் அமுக்கி வைக்கும்போது, பளபளப்பு மங்கிவிடுகிறது. வாஷிங் சோடா உபயோகித்துச் சுத்தம் செய்யக்கூடாது. குக்கர் மங்கிய நிலையில் இருந்தால், அலுமினியத்தைச் சுத்தம் செய்யக்கூடிய டார்ட்டாரிக் அமிலம் உபயோகித்துச் சுத்தம் செய்யலாம்.சமைக்கும்போது, குக்கருள் ஒரு சிறு துண்டு புளியோ, அல்லது ஒரு துண்டு எலுமிச்சையோ போட்டு வைத்தால், உட்புறம் கறுப்பாக ஆகாமல் பளிச்சென்று இருக்கும். (எலுமிச்சம் தோலை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துப் பயன்படுத்தலாம்.. குக்கரைச் சுத்தப்படுத்தியவுடன், நன்றாக உலர்ந்த துணியால் துடைத்து வைக்க வேண்டும். மூடியை மூடிய நிலையில் வைக்க வேண்டாம். பல வீடுகளில், குக்கரை, சமைப்பதற்கு மட்டுமன்றி வேறு பல வேலைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். இது தவறு. குக்கருக்குள் வைக்கப்படும் பாத்திரங்களை வேறு எதற்கும் உபயோகிக்கக் கூடாது.குக்கரையும், உள் வைக்கும் பாத்திரங்களையும் குப்புறப் போட்டுச் சுத்தம் செய்யக் கூடாது. குப்புறப் போட்டுச் சுத்தம் செய்யும்போது, விளிம்புகள் தேய்ந்து, பாத்திரங்கள் ஒன்று மீது ஒன்று சரிவரப் பொருந்தாது. பொருந்தாதபோது, இடைவெளி இருக்கும். எனவே ஆவி ஏற்படுவது தடைப்படும். ஆகவே குக்கரையும் பாத்திரங்களையும், வேறு எந்த முறையிலும் பயன்படுத்தக் கூடாது.இரப்பர் வளையம் நெடுநாட்களுக்குப் பயன்பட வேண்டுமானால் குக்கரைத் திறந்தவுடன் வளையத்தை எடுத்துக் குளிர்ந்த நீரில் போட்டு விடவும். வாரத்திற்கு ஒருமுறை, ரிஃப்ரிஜிரேட்டரில் உள்ள ஐஸ் தயாரிக்கும் ஷெல்ஃபில் ஒரு மணி நேரத்திற்கு வைத்து எடுக்கவும். குக்கருள் ஏற்படும் ஆவியைச் சீராக்கி குக்கருள் இருக்கும் அழுத்தம் மாறாமல் ஒரே நிலையில் இருக்க உதவுகிறது வெயிட் வால்வு. அளவுக்கதிகமான ஆவி ஏற்படும்போது, ஆட்டோமேடிக்காக, வெயிட் வால்வு, அளவுக்கதிகமான ஆவியை வெளியேற்றி குக்கருள் ஒரே நிலையான அழுத்தம் தொடர்ந்து இருக்கும்படிச் செய்கிறது. பிரஷர் குக்கரில் கேஸ்கட் ரிலீஸ் சிஸ்டம் இருக்கிறது. வெயிட் வால்வில் உணவுத் துண்டுகள் சேர்ந்து அடைத்துக் கொண்டு விடுமேயானால் வெயிட் வால்வு சரிவரச் செயல்பட்டு குக்கருள் ஏற்படும் அதிக ஆவியை வெளியேற்ற முடியாது. கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும்போது, குக்கருள் உள்ள ஆவியின் அழுத்தம் அதிகமாகும்போது, கேஸ்கெட்டின் ஒரு பகுதி சரிந்து அதிகமான ஆவி குக்கருக்குள் போய்விடுகிறது.கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் இல்லாதபோது, உணவுத் துண்டுகள் அடைத்துக்கொண்டு வெயிட் வால்வு செருகப்படும் துவாரமும் அடைபட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு. குக்கருள் ஏற்படும் அதிக ஆவியின் அடிக்கத்தின் காரணமாக வெயிட் தூக்கி அடிக்கப்படும். எனவே, குக்கர் மூடியைச் சுத்தப்படுத்தும்போது, ஒரு சிறிய, மெல்லிய ஊசியை, வெயிட் வால்வு செருகப்படும் துவாரத்தில் நுழைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.கேஸ்கெட் ரிலீஸ் சிஸ்டம் இருக்கும்போது கேஸ்கெட் சரிந்து விழுந்துவிடுகிறது. இவ்வாறு கேஸ்கெட் விழுந்துவிடும்போது, குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிக் குளிரச் செய்து, வெயிட் வால்வு ஏன் வேலை செய்யவில்லை என்று கவனிக்க வேண்டும். குக்கர் மூடியின் ஒருபுறத்தில் பொருத்தப்பட்டிருப்பது சேஃப்டி வால்வு. குக்கருக்குள் போதுமான நீர் இல்லாதபோதும், வெயிட் வால்வு அடைத்துக் கொள்ளும்போதும், குக்கருள் அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. குக்கருள், பாதுகாப்பான அளவுக்கு மேல் ஆவியின் அழுத்தம் அதிகமானால், இந்த சேஃப்டி வால்வு உருகி, அளவுக்கதிகமான ஆவியை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில குக்கர்களில் இந்த சேஃப்டி வால்வு கைப்பிடிக்கு அடியில் அமைந்திருக்கும். 

Apr 12, 2024

போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்! லட்சாதிபதி ஆக தினமும் ரூ.200

இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தோராயமாக 9.5 ஆண்டுகளில் (115 மாதங்கள்) ஒரு முறை முதலீட்டை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது.இது 7.5 சதவீத கூட்டு வருடாந்திர வருவாயின் நிலையான விகிதத்தை வழங்குகிறது.கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தின் கீழ், எந்தவொரு வயது வந்தவரும் தனிநபர் அல்லது 3 பெரியவர்கள் வரை கூட்டு கணக்கைத் திறக்க தகுதியுடையவர் ஆவார்கள்.கிசான் விகாஸ் பத்ரா என்பது அஞ்சல் அலுவலகத்தின் சேமிப்புத் திட்டமாகும். இது கிராமப்புறங்கள் மற்றும் சிறிய நகரங்களில் உள்ள தனிநபர்களின் நீண்டகால சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆபத்து இல்லாதமுதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்பமாக அமைகிறது 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கிஷான் விகாஸ் பத்ரா கணக்குகளைத் திறக்கலாம். மேலும், பாதுகாவலர்கள் சிறார்கள் அல்லது மனநலம் குன்றியவர்கள் சார்பாக கணக்குகளை திறக்கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தை ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம். மேலும், 100 இன் மடங்குகளில் முதலீடு செய்ய வேண்டும்.உதாரணமாக நீங்கள் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்தால், முதிர்ச்சியின்போது ரூ.10 ஆயிரம் கிடைக்கும்.KVP திட்டத்தின் முக்கிய ஈர்ப்பு அதன் இரட்டிப்பு அம்சமாகும், அதாவது உங்கள் முதலீட்டுத் தொகை முன்னரே தீர்மானிக்கப்பட்ட காலத்தில் இரட்டிப்பாகும். தற்போது,KVP இன் இரட்டிப்பு காலம் 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆகும். அதாவது ஒரு வருடத்திற்கு தொடர்ந்து தினமும் ரூ.200 முதலீடு செய்தால், பத்தாண்டுகளுக்குள் உங்கள் முதலீடு இரட்டிப்பாகும்.ஒரு வருடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.200 முதலீடு செய்தால், அந்த ஆண்டுக்கான மொத்த முதலீடு ரூ.73,000 (200 * 365) ஆகும். இரட்டிப்பு காலம் 115 மாதங்களில் 7.5 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்துடன் (ஆண்டுதோறும் கூட்டும்) நிர்ணயிக்கப்பட்டால், உங்கள் முதலீடு 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் ரூ.1,46,000 ஆக இரட்டிப்பாகும்..

Apr 12, 2024

BSNL ரீசார்ஜ்.. ரூ.397 போதும்.. 150 நாட்கள் வேலிடிட்டி

`.ஜியோ நிறுவனத்தை விட கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் எக்கச்சக்க நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.பிஎஸ்என்எல் ரூ 397 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 397 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 10 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பாக 150 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டாஇ வரம்பற்ற அழைப்புகள், மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் முதல் 30 நாட்களுக்கு வழங்கப்படும்.பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 666 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 105 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு டியூன்ஸ், ஜிங்க் மியூசிக் மற்றும் ஆஸ்ட்ரோடெல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான பிஎஸ்என்எல் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் அதிக நன்மைகள் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டம் ( bsnl rs 797 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா லிமிட் முடிந்த பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும். ஆனால் பிஎஸ்என்எல் ரூ.797 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படும் டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், எஸ்எம்எஸ் போன்ற நன்மைகள் முதல் 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின்பு, ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) மட்டுமே 300 நாட்களுக்கு ஆக்டிவாக இருக்கும். குறிப்பாக 60 நாட்களுக்குப் பிறகு அனைத்து சலுகைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.பிஎஸ்என்எல் ரூ 997 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 997 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 160 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்துவிட்டால் 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையைக் கொண்டுவருவதால், இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் மக்கள் அதிகம் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

Apr 11, 2024

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும், அரிசி விலையில் மாற்றம்

 தமிழகத்தில் அரிசியை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்திருந்தது.இதற்கு பிறகு பருவமழை தவறியது, குறைவான விளைச்சல், மிக்ஜாம் புயல், ஜனவரியில் வீசிய பலமான காற்று, போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவாகிவிட்டது.. இதனால் நெல் விலையும் அதிகமாகி விட்டது. எனவே, அடுத்த 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகளும் கடந்த ஜனவரி மாதமே கணித்து கூறியிருந்தார்கள். காரணம் என்ன: மேட்டூர் அணையும் மூடப்பட்டு, சம்பா சாகுபடிக்கு மழையும் கைகொடுக்காமல் டெல்டா விவசாயிகளும் கையை பிசைந்தனர். இவையெல்லாம்தான் தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணமானது. சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்தது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்தது.. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையானது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்தது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை எகிறியது... கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், இப்போது விலை குறைந்து வருகிறதாம்.அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளது.தற்போது கோடை விளைச்சலும், சந்தைக்கு வர தொடங்கிவிட்டதால், அரிசியின் விலையில் மாற்றம் தென்பட்டு வருகிறதாம்.. விலையும் குறைந்து தொடங்கியுள்ளதாம்.. அரிசி விலை: அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை கண்காணித்தும் வருகிறது. அதன்படி, ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது... அரிசியின் விலை திடீரென குறைந்துள்ளதால், பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு வருகிறது.ஆனால், கடந்த 6 மாதங்களை எடுத்துக் கொண்டால், எவ்வளவுதான் அரிசி விலை உயர்ந்தாலும், தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் உறுதி தந்தவாறே இருந்தார். அதற்கேற்றவாறு, தற்போதுவரை ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், ரேஷன் அரிசி தாரர்களுக்கும், நிம்மதி ஏற்பட்டுள்ளது..

Apr 11, 2024

1994-ல்தாத்தாவாங்கிய 500 ரூபாய்பங்கைகண்டுபிடித்தவர்

1994ல் அவரது தாத்தா500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.சண்டிகரைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் தன்மய் மோதிவாலா.1994ல் அவரது தாத்தா500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியிருக்கிறார். அந்த பங்குகளை அவரது தாத்தா விற்கவே இல்லை. காலப்போக்கில் அதைப் பற்றி மறந்து போயிருக்கிறார்.1994ல் அவரது தாத்தா செய்த ஒரு சிறிய முதலீடு, தற்போது கணிசமான தொகையாகப் பெருகியிருக்கிறது.இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளவர்,``என் தாத்தா பாட்டி1994ல்500 ரூபாய் மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கினார்கள். அவர்கள் அதை மறந்துவிட்டார்கள். அவர்கள் அதை ஏன் வாங்கினார்கள், அவர்கள் அதை வைத்திருந்தார்களா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. ஓர் இடத்தில் குடும்பத்தின் சொத்துக்களை அடுக்கி வைக்கும்போது இதுபோன்ற சில சான்றிதழ்கள் எனக்குக் கிடைத்தன(ஏற்கனவே இவற்றை டிமேட்டிற்கு மாற்றுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது)’’ என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தபதிவு பலரின்கவனத்தைப் பெறவே, இந்த பங்குகளின்தற்போதைய மதிப்புஎன்ன எனக்கேட்டுள்ளனர். டிவிடெண்டைதவிர்த்து தற்போதுபங்குகளின் மதிப்பு 3.75 லட்சமுள்ளதாகவும், இதுமிகப்பெரிய தொகைஇல்லையெனினும்30 ஆண்டுகளில்750 மடங்கு வருமானம்என்பது உண்மையில்பெரியது என்றும்மருத்துவர் தெரிவித்துள்ளார். அதோடுஇந்த சான்றிதழ்களைடிமேட்டாக மாற்றுவதற்குச்சிரமப்பட்டதைக் குறித்தும்இதற்காக ஓர்ஆலோசகரின் உதவியைப்பெற நேர்ந்ததுஎன்றும் செயல்முறையின்வேதனையான விஷயங்களையும்பகிர்ந்துள்ளார்.

Apr 10, 2024

இந்திய வானின் மன்னன் இண்டிகோ விமான நிறுவனத்தின் ராகுல் பாட்டியா..!

எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்று இரண்டாண்டுகள் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை பார்த்த ராகுல் பாட்டியா தனக்கு வேறு ஒரு வேலை இருப்பதாகக் கருதினார்.1988 ஆம் ஆண்டில் அவர் தனது தந்தைக்கு உதவ நினைத்தார். இன்டர்குளோப் என்ற நிறுவனத்தை தொடங்கி டிராவல்ஸ் துறையில் புதிய தளத்தை உருவாக்கினார்.காலப்போக்கில், அவர் அதை பயண தொழில்நுட்பம், விருந்தோம்பல் மற்றும் வணிக ஜெட் விமானங்களில் ஒரு கூட்டு நிறுவனமாக மாற்றினார். 1992 இல், தனியார் பங்கேற்புக்கான விமான உரிமங்களை அரசு வழங்கியது. வழக்கமான லஞ்சம் வாங்கும் முறையை ராகுல் விரும்பவில்லை. அவர் ராகேஷ் கங்வால் (யுஎஸ் ஏர்வேஸ்) உடன் இணைந்து விண்ணப்பித்தார். 2004 இல், உரிமம் வந்தது, இண்டிகோ ஏர்லைன்ஸ் பிறந்தது.அதிகரித்து வரும் எரிபொருள் விலையால் அனைவரும் விமான நிறுவனத்தை இயக்க முடியாமல் அதிகப்படியான நஷ்டத்தை எதிர்கொண்ட நிலையில், 2005 ஆம் ஆண்டு பாரிஸ் விமான கண்காட்சியில் $6.5 பில்லியன் மதிப்புள்ள 100 ஏர்பஸ் ஏ320-200 விமானங்களை ராகுல் ஆர்டர் செய்தார். 2006 ஆம் ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி இண்டிகோவின் முதல் ஏர்பஸ் விமானத்தை டெலிவரி செய்தார். ஆகஸ்ட் 4, 2006 அன்று, இண்டிகோ முதல் முறையாக புது தில்லியிலிருந்து குவாஹாட்டி வழியாக இம்பாலுக்கு பறந்தது. அதன் குறைந்த விலையுள்ள - கூடுதல் சேவைகள் இல்லாத மாடலில் விமானம் புறப்பட்டது.இந்த மாடலின் வெற்றியை தொடர்ந்து ராகுல் 2007 இல் மேலும் 15 விமானங்களை வாங்கினார், அப்போது முதல் இண்டிகோ சந்தையை மொத்தமாக புரட்டிப்போட்டது. 2010 இல் ரூ.2664 கோடி விற்பனையைத் தொட்டது.இந்தியாவின் இரண்டு பெரிய தனியார் விமான நிறுவனங்களான - ஜெட் ஏர்வேஸ் மற்றும் கிங்ஃபிஷர், 2,114 கோடி நஷ்டத்தை சந்தித்தபோது, இண்டிகோ 2010 இல் 550 கோடி லாபத்தை ஈட்டியது. 17.3% சந்தைப் பங்குடன், ஏர் இந்தியாவைத் தூக்கி எறிந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிறுவனமாக மாறியது. இண்டிகோ தன் மாடலைப் பற்றி சரியாக கணித்தது. மொத்த ஆர்டர்களுக்கு 40% தள்ளுபடியுடன், விமான நிறுவனங்களில் வாங்கும் போது வெறும் 4% மட்டுமே முன்பணம் செலுத்த வேண்டியிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு புதிய விமானத்தைப் பெறுவதற்கு விமானத்தை விற்கலாம்.2011ல், இண்டிகோ நிறுவனம் சர்வதேச விமானங்களை இயக்க அனுமதி பெற்றதால், 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள 180 ஏர்பஸ் ஏ320நியோ விமானங்களை ராகுல் ஆர்டர் செய்தார். இண்டிகோ வளர்ந்து கொண்டே இருந்தது மற்றும் ஒரு விமானத்தில் 180 பயணிகளுக்கு எகனாமி வகுப்பு இருக்கைகளை மட்டுமே வழங்கியது. 2013 வாக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை முறியடித்து 27% சந்தைப் பங்கைப் பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாக இண்டிகோ ஆனது..நவம்பர் 10, 2015 அன்று, இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் 3008.5 கோடி ஐபிஓவவை வழங்கியது. 6.63 மடங்கு அதிக சந்தா பெற்றதால், இண்டிகோ 44,290 கோடி சந்தை மதிப்பைத் தொட்டது. இண்டிகோ 20 நிமிட திருப்பம் மற்றும் 12 மணி நேர விமானச் செயல்பாட்டு நேரத்துடன் 58.6% சந்தைப் பங்காக வளர்ந்தது. ஏர் இந்தியா (13.2%) மற்றும் விஸ்தாரா (8.65%) கூட நம்ப முடியவில்லை. இன்று, இண்டிகோ 100 இடங்களுக்கு தினமும் 1800 விமானங்களை இயக்குகிறது. 300க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டிருப்பது இந்தியாவில் முதல் முறையாகும் மற்றும் 702 கோடி லாபத்துடன் ஆண்டுக்கு 54,000 கோடி வருவாய் ஈட்டுகிறது. இது ஆண்டுக்கு 85 மில்லியன் பயணிகளுக்கு மேல் பறக்கிறது.ஒரு சிறந்த வணிக மாடல் எந்த நாளிலும் எந்த போட்டியையும் வெல்ல முடியும் என்பதை ராகுல் பாட்டியா நிரூபித்துக் காட்டியுள்ளார்..

Apr 10, 2024

ஹோட்டலில் எண் 13 அறை அல்லது கட்டிடத்தில்13 வது மாடி பெயர்  இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம்! காரணம்?.

நீங்கள் உலகின் பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது விதவிதமான ஹோட்டல்களில் தங்கியிருக்கக் கூடும். பல கட்டிடங்களுக்கும் சென்றிருக்கக் கூடும். அதில் நீங்கள் பல முறை, ஹோட்டலில் எண் 13 அறை அல்லது கட்டிடத்தில் 13 வது மாடி பெயர்  இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம். மேலை நாடுகளில் 13 எண்ணை கேட்டாலே மக்கள் அலறுவதைக் காணலாம் அதற்கான காரணம்?. மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக எண்13 என்பது மிகவும் அபசகுனமாக கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. இயேசுவின் கடைசி விருந்து(LastSupper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை13 என கூறப்படுகிறது. மேலும் யேசு மரித்த நாள்13ம் தேதி வெள்ளிக்கிழமை என கூறப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்13 எண்ணை பார்த்தாலும், கேட்டாலும், மக்கள் அச்சத்தில் உறைந்து விடுகின்றனர்.இது ஒரு வகையான ஃபோபியா என மருத்துவர்கள் கூறுகின்றனர். எண்13 பற்றிய இந்த பயம் ட்ரிஸ்கைடேகாபோபியா என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் உலகின் பல இடங்களில் குறிப்பாக மேலை நாடுகளில் அறை எண்13 அல்லது13 வது தளம் காணமுடியாது.12 வது மாடிக்குப் பிறகு நேரடியாக14 வது தளம் இருக்கும்.இந்தியாவிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில்13ம் எண்ணை காண முடியாது. அதே போல் பல பெரிய ஹோட்டல்கள் அல்லது கட்டிடங்கள் சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், 13வது மாடி, 13ம் எண் கொண்ட அறைகள் கட்டப்படுவதில்லை. 

Apr 10, 2024

பெங்களூரில் விமான டிக்கெட்டுக்கு நிகரான டாக்சி கட்டணம்

சில நேரங்களில் விமான போக்குவரத்து கட்டணம் என்பது டிமாண்டை பொறுத்து அதிகரிப்பது, குறைவதுமாக இருக்கும். குறிப்பாக பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருக்கும்.\ஆனால் வாரத்தின் சில நாட்களில் விமான கட்டணங்கள் என்பது நாம் எதிர்பாராத அளவு மிகக்குறைவாக இருக்கும். அப்படி குறைந்த டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு பேரிடியாக விழுந்துள்ளது வாடகை கார்கட்டணம்..மானஸ்வி சர்மா என்பவர் புனேவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்துள்ளார். விமான நிலையம் வந்திறங்கிய அவர் வீட்டுக்கு செல்வதற்காக ஊபர் தளத்தில் வாடகை கார் பதிவு செய்துள்ளார்அப்போது வாடகை காருக்கு ஆகும் கட்டணம் அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிட்டதட்ட விமான கட்டணத்துக்கு நிகரான வாடகை கார் கட்டணம் இருந்ததை கண்டு ஷாக்கான அவர் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மானஸ்வி சர்மா புனேவில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் 3,500 ரூபாய்க்கு டிக்கெட் பதிவு செய்து பயணம் செய்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்ல ஊபர் வாடகை காரை பதிவு செய்த போது அதில் 2,000 ரூபாய் கட்டணமாக காட்டியுள்ளதுஅந்த ஸ்கிரீன் ஷாட்டை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் புனேவிலிருந்து பெங்களூரு வருவதற்கு 3,500 ரூபாய் தான் கட்டணம் செலுத்தினேன், ஆனால் பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து என்னுடைய வீட்டிற்கு செல்வதற்கு 2,000 ரூபாய் நான் செலுத்த வேண்டி இருக்கிறது என பதிவிட்டு இருந்தார்.அவரது இந்த பதிவு எக்ஸ் தள பயன்பாட்டாளர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சிலர் மாற்று வழிகளில் வீட்டிற்கு செல்ல முயற்சி செய்து இருக்கலாமே என்ற யோசனைகளை வழங்கியுள்ளனர். பேருந்துகளை பயன்படுத்தி இருக்கலாமே அல்லது உங்கள் நண்பர்கள் யாரேனும் அழைத்திருந்தால் அவர்கள் நிச்சயமாக 2000 ரூபாய்க்கு கீழேதான் கேட்டிருப்பார்கள் என ஒருவர் கூறியுள்ளார்.அதே வேளையில் பெங்களூரு போக்குவரத்து நெரிசல் குறித்தும் பலர் புலம்பியுள்ளனர். பெங்களூரு விமான நிலையத்திலிருந்து நகருக்குள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வது என்பது மிக மோசமான ஒரு அனுபவமாக மாறி வருகிறது எனக் கூறியுள்ளனர்.

1 2 ... 41 42 43 44 45 46 47 ... 54 55

AD's



More News