25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

May 22, 2026

கடல் வழிவிடும் அதிசயம்! ஜிண்டோ பிளவு! இயற்கையின் பிரம்மாண்டம்!

தென் கொரியாவின் 'ஜிண்டோ அதிசயம்' என்பது கடல் இரண்டாகப் பிரிந்து, ஜிண்டோ மற்றும் மோடோ தீவுகளுக்கு இடையே மக்கள் நடந்து செல்லக்கூடிய ஒரு பாதையை வெளிப்படுத்தும் ஒரு அரிய இயற்கை நிகழ்வாகும்; சூரியன் மற்றும் நிலவின் ஒருங்கிணைந்த ஈர்ப்பு விசையினால் ஏற்படும் தீவிரக் கடல் உள்வாங்கலின் (extreme low tides) காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்படுகிறது.

May 22, 2026

வெயில் காலத்தில் 6 காய்கறிகள் சாப்பிடாதீங்க!!

கத்திரிக்காய், பூண்டு, குடைமிளகாய், பசலைக்கீரை, சர்க்கரை வள்ளி கிழங்கு, காலிஃபிளவர் ஆகியவை உடல் வெப்பநிலையை அதிகரிக்கும்.

May 21, 2026

மறதி நோய்க்குக் காரணம். (Alzheimer's)

அல்சைமர் (Alzheimer's) எனப்படும் மறதி நோய், பெரும்பாலான மக்களிடம் ஏற்கனவே இருக்கும் ஒரு பொதுவான வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, வாயைச் சுற்றி கொப்புளங்களை ஏற்படுத்தும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ்-1 (HSV-1) இந்த நோயுடன் நெருங்கிய தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வைரஸ் நமது நரம்பு மண்டலத்தில் நீண்ட காலம் உறக்க நிலையில் (Dormant) இருக்கும்போது, சிலருக்கு மூளையில் புரதக் கட்டிகள் (Amyloid plaques) உருவாகக் காரணமாகி, காலப்போக்கில் மறதி நோயைத் தூண்டுகிறது. 2026-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான ஆய்வுகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மூலம் அல்சைமர் நோயைத் தடுக்கவோ அல்லது அதன் தீவிரத்தைக் குறைக்கவோ முடியும் என்ற புதிய நம்பிக்கையை விஞ்ஞானிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.

May 21, 2026

'ஹைப்ரிட் B(A)' அரிய வகை ரத்தம்.!

தாய்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், உலகிலேயே மிக அரிதான 'ஹைப்ரிட் B(A)' வகை ரத்தம் கண்டுபிடிப்பு..சுமார் 5.4 லட்சம் மாதிரிகளில் வெறும் 3 பேருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி..ஏற்கனவே அறியப்பட்ட ரத்த கூறுகளின் கலவையாக ‘ஹைப்ரிட் B(A) இருப்பதால், அவசர காலங்களில் இவர்களுக்கு ரத்தம் வழங்குவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். 

May 20, 2026

பெண்களுக்கு நுங்கு சிறந்த கோடை உணவு .

நுங்கில் உள்ள சில இயற்கை anti-oxidants & plant compounds உடல் செல்களை பாதுகாக்கும்.குறிப்பாக "Anthocyanin" போன்ற சேர்மங்கள் செல்களின் oxidative stress-ஐ குறைக்க உதவுகின்றன.இதனால் overall health support கிடைக்கலாம் ஆனால்...“ஒரே ஒரு உணவு cancer-ஐ முழுவதும் தடுக்கிறது” என்று சொல்ல முடியாது.மார்பக ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை.சமச்சீர் உணவு.வழக்கமான உடற்பயிற்சி.நல்ல தூக்கம் .வழக்கமான சுகாதார சோதனை.

May 20, 2026

வங்கி கணக்குகளை காலி செய்யும் 'சிம் ஸ்வாப் மோசடி...!மக்களே உஷார்..!

தனி நபர் விவரங்களைத் திருடி போலி சிம் கார்டு மூலம் வங்கி OTP-களை இடைமறித்துக் கணக்கிலுள்ள பணத்தைக் கொள்ளையடிக்கும் 'சிம் ஸ்வாப்' மோசடி குறித்துச் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது..

May 20, 2026

'புளியங்கொட்டை!

"உடலுக்குள் புகுந்த பிளாஸ்டிக்கை வெளியேற்ற முடியுமா?" முடியும் என்கிறது புதிய ஆராய்ச்சி! நமது உடல் உறுப்புகளில் நீண்ட நாட்களாகத் தங்கியிருக்கும் 90% மைக்ரோ பிளாஸ்டிக்கை (Microplastics) நீக்கும் அபார சக்தி கொண்ட ஒரு பொருள் 'புளியங்கொட்டை!

May 20, 2026

இந்தியா உலகின் மிகவும் விலைமதிப்புள்ள கற்களில் ஆதிக்கம் செலுத்துகிறது!

தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்ட ராஜஸ்தானின் “மகரானா சங்கமர்பள் பளிங்குக்கல்”, உலகில் பளபளப்பு ஒருபோதும் மங்காத ஒரே கல்லாகும். மேலும், ஆந்திரப் பிரதேசத்தின் “பிளாக் கேலக்ஸி கிரானைட்” மற்றும் “இந்தியன் கிரீன் மார்பிள்" ஆகியவை அவற்றின் தனித்துவமான அழகுக்காக உலகளவில் மிக அதிக விலையில் விற்கப்படுகின்றன!

May 20, 2026

உணவு செரிமானமாகும் நேரம்

1தண்ணீர் - சுமார் 5 நிமிடங்கள்2தர்பூசணி - சுமார் 20 நிமிடங்கள்3ஆப்பிள் - சுமார் 40 நிமிடங்கள்4 கேரட் - சுமார் 50 நிமிடங்கள்5 உருளைக்கிழங்கு - சுமார் 60 நிமிடங்கள்6 முட்டை - சுமார் 30-60 நிமிடங்கள்7 கோழி இறைச்சி - 2-3 மணி நேரம்8 முந்திரி -2-3 மணி நேரம்9 பாதாம் - 2-3 மணி நேரம்10 கலப்பு உணவு - 3-6 மணி நேரம்11 பால் - 2-3 மணி நேரம்12 தயிர் - 2-3 மணி நேரம்13 ரொட்டி - 2-3 மணி நேரம்14 சாதம் - 1-2 மணி நேரம்15 சாலட் - 30-60 நிமிடங்கள்16 வாழைப்பழம் - 30-60 நிமிடங்கள்17 திராட்சை - 30-60 நிமிடங்கள் 18 சீஸ் - 3-4 மணி நேரம்19 மட்டன் - 4-6 மணி நேரம் 20 ஜங்க் உணவு - 6+ மணி நேரம்லேசான உணவு → வேகமான செரிமானம் கனமான உணவு → மெதுவான செரிமானம் சாப்பாட்டுக்குப் பிறகு சிறிது நடக்கவும்.செரிமானம் மேம்படும்.

May 19, 2026

வெயில் காலத்தில் குளிப்பதற்கு நலங்குமாவு.

வியர்குரு, துர்நாற்றம், சரும பாதிப்பை தவிர்க்க நலங்குமாவு பயன்படுத்தலாம். வெட்டிவேர், விளாமிச்சை வேர், சந்தன சிராய், கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு, கார்போக அரிசி தலா 100 கிராம் சேர்த்து, இதனுடன் பச்சை பயிரை 500 கி சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். சோப்புக்கு பதிலாக இந்த நலங்குமாவை பூசி குளித்து வர குளிர்ச்சி தன்மை, இயற்கையான வாசனை ஆகியவை கிடைக்கும். தோலுக்கு தேவையான மாய்ஸ்சரை தரக்கூடியது நலங்குமாவு. இதனால் சரும தொல்லைகள் வராது.

1 2 ... 42 43 44 45 46 47 48 ... 136 137

AD's



More News