25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


.'ப்ரைனொசோமா”  ( கொம்பு பல்லி )
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

.'ப்ரைனொசோமா” ( கொம்பு பல்லி )

 ஊர்வனவகைஅமெரிக்காவில்வாழும்தனித்துவமுள்ளவிலங்கினம்கொம்புபல்லி.ஆங்கிலத்தில்இதன்அறிவியல்பெயர்.'ப்ரைனொசோமாஎன்பதாகும்.வட அமெரிக்காவில் மெக்சிகோ, கனடா பாலைவன புல்வெளி பகுதிகளில்அதிகம் காணப்படுகிறது. இதன் தற்காப்பு நடைமுறைகள் மிகவும் உடல் அமைப்பு, நடத்தை  வித்தியாசமானது.

இதன் தலை மற்றும் உடல் பகுதியில் கொம்பு போன்ற முட்கள் நிறைந்து உள்ளன. இதன் உதவியால் பாறை மற்றும் மண்ணுடன் ஒன்றி மறைந்து வாழ்கிறது. எதிரியின் பார்வையில் இருந்து தப்புகிறது.இதன் உடல், பரந்து, தட்டையாக இருக்கும்; சூழலுக்கு ஏற்ப உடல் நிறத்தை மாற்றும் திறன் உடையது. முதன்மை உணவாக எறும்புகளையும், பூச்சிகளையும் உண்ணும்.

இதன் கண்களுக்கு அருகில் நுண்ணிய ரத்த நாளங்கள் உள்ளன. இதை பயன்படுத்தி எதிரி மீது ரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கும். அந்த ரத்தம் கசப்பு சுவையுடன் இருக்கும். இதை கண்டு பூனை, நாய் போன்ற இதன் எதிரி விலங்குகள் திகைத்து ஓடிவிடும். உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பு நடைமுறையாக இதை பின்பற்றுகிறது கொம்பு பல்லி.

முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினம் இது. பாலைவனத்தில் தட்ப வெப்ப மாற்றங்களுக்கு ஏற்ப, உடல் வெப்பத்தை அமைத்து கொள்ளும். குளிர்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடும். சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கு ஏற்ப வாழ்வை அமைத்து கொள்ளும்.காடு அழிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பட்டால் கொம்பு பல்லி இனம் உலகில் குறைந்து வருகிறது. இந்த விலங்கினத்தை பாதுகாப்பது நம் கடமை.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News