90 வயதிலும் ஆரோக்கியம்... வெண்ணிற ஆடை மூர்த்தியின் வாழ்க்கை முறை!
90 வயதிலும் உற்சாகமாக இருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார்.
"நான் எப்போதும் வீட்டில் சமைத்த சைவ உணவையே சாப்பிடுவேன். ஆடம்பர உணவுகளை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாவிட்டாலும், இரவில் சீக்கிரம் உணவருந்துவேன். இதுவரை உடல்நலக் குறைவால் எந்த படப்பிடிப்பும் பாதிக்கப்படவில்லை. தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நடிப்பில் இருந்து விலகியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply