25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சமையலுக்கு பயன்படுத்தும்  புளி ,வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு, 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது என்று நிபுணர்கள் ஆய்வுகளில் தெரியவந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சமையலுக்கு பயன்படுத்தும்  புளி ,வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு, 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது என்று நிபுணர்கள் ஆய்வுகளில் தெரியவந்தது.

தண்ணீர் சேமிப்பு அமைப்புகளில்கூட கண்ணுக்கு தெரியாத வகையில் பிளாஸ்டிக் நுண் துகள்கள்கலந்திருப்பது பல இடங்களில் தெரியவந்துள்ளது. பிளாஸ்டிக்கழிவுகள் பூமியை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன..

சமையலுக்கு பயன்படுத்தும் புளியில் உள்ள இயற்கை பொருட்கள், தண்ணீரில்கலந்திருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை ஈர்த்துநீக்குவதில் திறம்பட செயல்படுவதை விஞ்ஞானிகள் அறிந்தனர் .

இதனை அடிப்படையாக கொண்டு புளி போன்ற பிசின் நிறைந்த திரவத்தை கொண்ட வெண்டைக்காய், வெந்தய சாறுகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவையும் நீர்நி லைகளில் கலந்து இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை தண்ணீரில் இருந்து பிரித்து இழுத்துக்கொண்டன.

ஒரு லிட்டர் தண்ணீரில் இது போன்ற காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒருவித பொடியை ஒரு கிராம் அளவு கலந்தாலே பல மடங்கு மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் பிரிக்கப்படுவது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு ஒரு மணி நேரத்தில் முறையே 67 சதவீதம் மற்றும் 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது இந்த ஆய்வுகளில் தெரியவந்தது. கழிவுநீர் சுத்திகரிப்பு செயல் பாட்டில் மாசுகளை அகற்ற தற்போது பாலி அக்ரிலாமைடு என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில், மேற்கண்ட தாவர சாறுகளை நீர் சுத்திகரிப்பு செயல்பாட்டில்பயன்படுத்துவதால், மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் எளிதாக அகற்றப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.   சமையலுக்கு பயன்படுத்தும்  புளி ,வெண்டைக்காய் சாறு மற்றும் வெந்தய சாறு, 93 சதவீதம் பிளாஸ்டிக் துகள்களை நீக்கி தண்ணீரை சுத்தம் செய்தது என்று நிபுணர்கள் ஆய்வுகளில் தெரியவந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News