விளையாட்டு போட்டிகள் 25TH MARCH
செஸ்
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரீ தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.இதன் 8வது சுற்றில் திவ்யா, ஆஸ்திரியாவின் படெல்கா மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய திவ்யா, 71வது நகர்த்தலில் முதல் வெற்றியை பதிவு செய்தார். மற்றொரு போட்டியில் ஹரிகா (கருப்பு), ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோரியாச்சினா (வெள்ளை) மோதினர். இப்போட்டி 37வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.எட்டு சுற்றுகளின் முடிவில் ஹரிகா (4.5 புள்ளி), திவ்யா (3.5) முறையே 3, 7வது இடத்தில் உள்ளனர்.
மல்யுத்தம்
ஆசிய மல்யுத்த 'சீனியர்' சாம்பியன்ஷிப் இன்று ஜோர்டானில் துவங்குகிறது. கிரிகோ ரோமன் பிரிவில் 10, 'பிரீஸ்டைல்' பிரிவில் 20 (10 ஆண் +10 பெண்) என இந்தியா சார்பில் மொத்தம் 30 பேர் களமிறங்குகின்றனர்.இதில் 20 வயதுக்குட் பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பில் உலக 2 முறை தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல், சாதிக்க உள்ளார்.23வயது பிரிவின் உலக சாம்பியன் ரீத்திகா ஹூடா (76 கிலோ), 17 வயது பிரிவு உலக சாம்பியன் மான்சி லாதெர் (68 கிலோ), மணிஷா (62 கிலோ) உள்ளிட்டோர் மீது எதிர்பார்ப்பு காணப்படுகிறது.ஆண்கள் பிரிவில் தீபக் புனியா, 'சீனியர்' அரங்கில் பதக்கம் வெல்ல காத்திருக்கிறார்.
கிரிக்கெட்
சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை அணி, மும்பையை வீழ்த்தியது. தொடரை வெற்றியுடன் துவக்கிய மகிழ்ச்சியில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், பிரிமியர் போட்டியில் மட்டும் பங்கேற்கிறேன். ஒவ் வொருமுறைகளமிறங்கும் போது, நான் சிறப்பாக விளையாட வேண்டுமென ரசிகர்கள் விரும்புவது ஒரு அற்புதமான உணர்வு. இன்னும் சில காலம் விளையாடலாம்.
கால்பந்து
ஆசிய கோப்பை கால் பந்து தொடர் 2027ல் சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது.இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச் சுற்று இன்று துவங்குகிறது. 24 அணிகள், ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் நடக்கும்.ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கலாம் .
0
Leave a Reply