சிறுபான்மையின மக்களுக்கு தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது ..
தமிழ்நாட்டில் வாழும் மதவழி சிறுபான்மையினர்களான கிறித்துவர், இசுலாமியர், பௌத்தர், சமணர், பார்சி மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டிருக்கும் தொழிலை விரிவுபடுத்தி தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவதற்கும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், விராசாத் - (கைவினை கலைஞர் கடன் திட்டம்), சுய உதவி குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவதற்காகவும், கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காகவும் கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வட்டார அளவில் கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது. அதன்படி (04.08.2026) அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், (05.08.2026) அன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், (06.08.2026) அன்று சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலும் மற்றும் (07.08.2026) அன்று சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.
இம்முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற கீழ்கண்ட ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.கடன் விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் (தொ.எண்: 04562-2425709), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் /நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய அலுவலகங்களிலிருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம்.
சிறுபான்மையினர் மதத்திற்கான சான்று /சாதிச் சான்றிதழ் /பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், வருமான சான்றிதழ் நகல்,இருப்பிட சான்றிதழ்/ குடும்ப அட்டை நகல், திட்ட தொழில் அறிக்கை, பாஸ்போர்ட் புகைப்படம்-2, கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை கொண்டு செல்லவும். கல்விக் கடன் கோருவோர்கள் மேற்கண்ட ஆவணங்களுடன் உண்மைச் சான்றிதழ் அசல் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் நகல் ஆகியவற்றை கொண்டு செல்லவும்.
மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட அலுவலகங்களையும், வங்கிகளையும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply