உணவு வகைகள் கீழ்க்காணும் உணவு பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.இவைஎல்லாம் நமக்குத்தெரிந்தஉணவுவகைகள்தானேஎன்றுஅலட்சியப்படுத்தவேண்டாம். நினைவாற்றலை அதிகரிக்கும் சத்துகள் இவற்றில் அடங்கியுள்ளன.இந்த உணவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தினசரிநாம்உண்ணும்உணவில் இருக்குமாறுபார்த்துக்கொண்டால், எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும்.பசலைக்கீரையில் ஃபோலிக் அமிலம் நிறைய உள்ளது.ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூ பெர்ரி பழ வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் ஆப்பிளில் குவார்செட்டின் (Quercetin) என்னும் சத்து நினைவாற்றலை மேம்படுத்தும் முக்கியமான ஊட்டச்சத்து.ஆப்பிளைப் போலவே வெங்காயத்திலும் க்வார்சிடின் உள்ளது. கூடுதலாக அந்தோசயானின் (Anthocyanin) என்கிற பொக்கிஷத்தையும் வெங்காயம் வைத்திருக்கிறது.மீன் வகைகள் ஞாபக சக்தியை மேம்படுத்தக் கூடியவை. குறிப்பாக, டுனா என்கிற மீன் வகைகளில் ஒமேகா என்னும் சத்து அபரிமிதமாக இருக்கிறது.எண்ணெயும் இதில் முக்கிய இடம்பிடிக்கிற மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்று லவங்கப்பட்டை எண்ணெய் போன்றவற்றை அளவறிந்து பயன்படுத்துங்கள்.முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் என்று பலர் சொன்னாலும், நம் மூளைக்கு அந்த மஞ்சள் கரு மிகவும் உகந்தது.சர்க்கரை வள்ளிக் கிழங்கில் இருக்கும் வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுக்கு மறதியை விரட்டும் வல்லமை உண்டு.ராஜ்மாவில் உள்ள தையமின் என்கிற வைட்டமினும் நமக்குத் தேவை.உலர்ந்த திராட்சையானது இரும்புச்சத்து பி. காம்ப்ளக்ஸ், ஃபோலிக் ஆசிட், கால்சியம் மற்றும் மக்னீஷியம் போன்றவற்றைக் கொண்டது.வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருப்பதைப் பலரும் அறிவீர்கள்.கீரின் டீயானது வயதான பின் வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சார்ந்த நோய்களைத் தடுக்கிறது..முளைக்கட்டிய கோதுமையில் ஞாபகசக்தி அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் சத்துகள் உண்டு.காபி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பூண்டு, வல்லாரைக் கீரை, வால்நட் போன்றவையும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன.
சொரியாஸிஸ் என்பது ஒரு தோல் நோய்.இது பரம்பரையாக அடுத்த அடுத்த தலைமுறையினருக்கு வரும் நோய். ஒருவரிடமிருந்து அடுத்தவருக்குப் பரவும் தொற்று நோய் அல்ல. இளம் குழந்தைகள் முதல் வயதான பெரியோரையும் இந்நோய் தாக்குகிறது.ஆரம்பம் ஒரு சிவப்புப் புள்ளிதான். புள்ளி பெரிதாக வட்ட வட்டமாக மலர்ந்து, அரிப்புடன் கூடிய உலர்ந்த வெள்ளை நிறச் செதில்களுடன்(Silverwhitescales) பரவிச் செதில்கள் உதிர ஆரம்பிக்கின்றன. உடலில் இந்நோய்காணப்படும் இடங்கள் முழுங்கை, முழங்கால், உள்ளங்கை, உள்ளங்கால், முதுகின் கீழ்ப் பகுதி, இடுப்பின் மேல் பகுதி, தலைப்பகுதி. இது தோல் நோய் என்றாலும், சில நேரங்களில், கை விரல்கள், கால் விரல்கள், மூட்டுகளையும் விரல் நகங்களையும் பாதிக்கிறது.இந்நோய் அதிகப்படுத்தும் காரணிகள் -மன உளைச்சல்,மது அருந்துதல், புகைப்பிடித்தல்,சூழ்நிலை மாற்றம், கோடைக்காலம், குளிர்காலம்,தவறான உணவுப் பழக்கங்கள்.ஸ்டீராய்டு போன்ற களிம்புகள் மற்றும் மிதோடிரைக்ஸ்டைட் போன்ற மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியது வரும். புதுவரவாக, உள்ளBiologics(Monoclonalantibodies). நோய்த் தாக்கத்தின் கடுமையைக் குறைத்து, நோயாளர்கள் மற்ற சக மனிதர் போன்று இயல்பான வாழ்க்கை வாழ வழி வகுக்கிறது.
புதியகுறிக்கோளைஅமைத்துக்கொள்ளவும்புதியகனவுகளைக்காணவும்எப்போதும்வயதுஒருதடைஇல்லை.ரசிக்கப்படாத இன்னொரு குழந்தைப் பருவம் முதுமை. அத்தகைய முதுமைப் பருவத்தை ரசனையோடு வாழப் பழகிக்கொள்வதே. முதுமைப் பருவத்தின் வெற்றி ஆகும். எப்போது ஒரு மனிதன் நோயின்றி இருக்கிறானோ, அப்போதுதான் தன்னம்பிக்கை வளரும்.முதுமையில் வரும் பலவிதமான நோய்களை இளமையில் நம் உடலைப் பேணுவதன் மூலம் வெல்லலாம். வயதின் மாற்றங்கள் பற்களையும், ஈறுகளையும் பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.முதுமையில் வரும் பல் நோய்கள் பல் தேய்மானம்,பற்குழி,ஈறுநோய்,பற்கள் காணாமல் போதல்,வறண்ட வாய், முதலியன நாம் பொதுவாகப் பார்க்கக்கூடிய பற்கள் சம்பந்தப்பட்ட நோய்களாகும். அதிலும் குழியினாலோ, ஈறு பிடிமானம் இல்லாமல் போனதினாலோ நாம் நமது பற்களை இழக்க நேரிட்டால் அதனால் வரும் பாதிப்புகள் மனதளவிலும், உடலளவிலும் ஏராளம்.நவீனச் சிகிச்சை முறையில், இழந்த பற்களை மீண்டும் செயற்கையாகம் பொருத்திச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் முறையே “பல் உள்வைப்புகள்' ஆகும்.(Dental Implants). இது இழந்த பற்களின் வேர்ப் பகுதிக்குள் அமைத்துச்செயல்படும்.இச்சிகிச்சை தன்னம்பிக்கையை மேம்படுத்தும். வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும்.
கால்கள் வீங்கும் தொல்லை மூத்த குடிமக்களில் பலருக்கு ஏற்படும். இதற்கு மூன்று வகையான காரணிகள் உள்ளன.இரவில் நெடுநேரம் படுத்த நிலையில் இருப்பதால், காலையில் சிலருக்கு இரண்டு கால்களிலும் வீக்கம் வரலாம். இது சாதாரணமான வீக்கம்தான். கவலைப்படத் தேவையில்லை. சிறிது தூரம் நடந்தால் வீக்கம் குறைந்துவிடும்.சமயங்களில் வேறு ஏதேனும் நோயின் அறிகுறியாகவும் கால்களில் வீக்கம் வரலாம். ரத்தச்சோகை, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, இதயம் செயலிழப்பு, நுரையீரல் செயலிழப்பு போன்ற தீவிரமான பிரச்னைகளின்வெளிப்பாடாகவும் கால்கள் வீங்கும். இதுமருத்துவ அவசரநிலை. உடனே மருத்துவர்உதவியை நாட வேண்டும்.இதில் உட்கொள்ளும் மருந்துகளின் காரணமாகவும் கால்கள் வீங்கும். உதாரணம்: ஆம்லோடிப்பின் மாத்திரை.ஏதேனும் அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட பின்னர், முதியோர்கள் படுக்கையிலேயே தொடர்ந்து படுத்திருக்க வேண்டியிருக்கும். இதனால் கால்களில் உள்ள அசுத்தரத்தம், ரத்தக்குழாயில் உறைந்துவிடும். இதுபோல் ரத்தப்போக்கைத் தடை செய்வதால் கால்களில் வீக்கம் வரும். இதற்கு Deep Venous Thrombosis என்று பெயர். இதுவும் தாமதமின்றி உடனே கவனிக்க வேண்டிய பிரச்னை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முற்றிலும் நினைவிழந்த நிலையில் (Coma) இருப்பவருக்கு தனது நிலையைப் பற்றி எதுவும் தெரியாதது மட்டுமல்ல, வெளியிலிருந்து வரும் எவ்விதத் தூண்டுதல்களையும் அறியாத ஒரு நிலையில் இருப்பார். ஆனால் இதயத்துடிப்பு, சுவாச நிலை, சிறுநீரகத்தின் செயல் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாடு ஓரளவிற்கு ஒரு காலகட்டம் வரை சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கும். மூச்சு அடிக்கடி விடுதல் அல்லது மெதுவாக விடுதல் போன்ற நிலை ஏற்படும். பொதுவாக காய்ச்சலும் கூடவே இருக்கும்.காரணங்கள்நுரையீரல் செயலிழப்பு, இதயம் வலிமை இழத்தல்,சிறுநீரகம் செயலிழப்பு,கல்லீரல் செயலிழப்பு,அளவிற்கு அதிகமான ரத்தப்போக்கு, உ.ம்.: விபத்து, அறுவை சிகிச்சை,அளவிற்கு அதிகமான தூக்க மாத்திரை,மதுவின் விளைவு,ரத்தத்தில் மிகக்குறைந்த அல்லது அதிகமாக உள்ள சர்க்கரையின் அளவுதைராய்டு குறைவாகச் சுரத்தல்,தயாமின் வைட்டமின் குறைவு,வலிப்பு நோய்,அதீத நீர் வறட்சி,உப்பின் அளவு மிகக்குறைந்த நிலை,நோய்த்தொற்று, உ.ம்.ஃபேக்ட்டீரியா, வைரஸ் கிருமிகளின் தாக்கம்,மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவு (Brain haemorrhage),கபாலத்திற்கு உள்ளே மற்றும் மூளைக்கு வெளியே உள்ள இடைவெளியில் ஏற்படும் ரத்தக்கட்டி (Sub dural haematoma),மூளையில் ஏற்படும் சாதாரண கட்டி அல்லது புற்றுநோய்,தலைக்காயம்.மருத்துவர், இந்நிலையில் உள்ளவரின் நெருங்கிய உறவினரிடம் இந்நிலை எவ்வாறு ஏற்பட்டது என்று முழுமையாகக் கேட்டறிவது மிகவும் அவசியம். உதாரணம்: திடீரென்று கீழே விழுதல், விபத்திற்கு உள்ளாவது, மருந்தை அளவிற்கு அதிகமாக உண்ணுதல்.நோயாளியை மருத்துவர் முழுமையாகப் பரிசோதனை செய்து முற்றிலும் நினைவிழந்தநிலைக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பார்.முற்றிலும் நினைவிழந்த நிலைக்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் சிகிச்சை அளிக்க முயற்சிக்க வேண்டும். இதற்கான காரணத்தைக் கண்டறிய உறவினர்களின் பங்கு மிகவும் அவசியம்.
ரத்தநாள அடைப்பு (Coronary Artery) இதய வால்வுக் கோளாறு (Valvular Heart Disease) தமனி வீக்கம் (Aneurysmal Disease) இதய செயலிழப்பு ( Heart Failure ) மேற்கண்ட நோயால் தவிக்கும் எல்லோருக்கும் வாழ்நாள் முழுவதும்மருத்துவச் சிகிச்சை அவசியம். சுமார் 25% பேருக்கு இதய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். முதுமையில் செய்யப்படும் முக்கியமான இதய அறுவை சிகிச்சைகள் மாற்று ரத்தநாள அறுவை சிகிச்சை (Coronary Artery Bypass Surgery - CABG) வால்வு மாற்றும் அறுவை சிகிச்சை (Valve Replacement Surgery) தமனி மாற்றும் அறுவை சிகிச்சை (Aneurysm Surgery) இதயச் செயலிழப்பு அறுவை சிகிச்சை (Surgery for Heart Failure) முதுமையில் அறுவை சிகிச்சை செய்வதில் உள்ள முக்கியமான சிரமங்கள் அவர்களது மனநலப் பாதிப்பு, நிறைய பேருக்குச் சிகிச்சை செய்துகொள்ளும் மனபலம் இருப்பதில்லை. . காப்பீடுத் திட்டம் இல்லாதவர்களே அதிகம் என்பதால் பணக் கஷ்டம் ஒரு முக்கியமான தடங்கல். பலவித உடல் உபாதைகள்சேர்ந்து இருப்பதால் இவர்கள் சிகிச்சையில் ஆபத்தும் செலவும் அதிகம். கூட்டுக் குடும்ப வாழ்க்கை குறைந்துவரும் நிலையில் இவர்களைப் பார்த்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை என்பது நிதர்சனமான, ஆனால் கசப்பான உண்மை. வயது முதிர்ந்தவர்களே சமுதாயத்தின் சொத்து. அவர்களைப் பேணிக்காப்பதால் சமுதாயத்திற்கு ஏற்படும் நலன்கள் கணக்கிலடங்காது. இன்று உலகளாவிய அறிவியல் முன்னேற்றங்களால் இவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வதில் உள்ள பயம் கணிசமாகக் குறைந்திருக்கிறது.
நம் ரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் மிகமுக்கியமான பணியைச் செய்கின்றன சிறுநீரகங்கள். உடலில் இருக்கும்அதிகப்படியான நீரை அகற்றும் இயற்கை வடிகட்டியாகவும் சிறுநீரகங்களே செயல்படுகின்றன.நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்குத் தாமதமின்றி உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது.போதுமான அளவு தண்ணீரை அதிகம் பருக வேண்டும். வயது வந்தவர்கள் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். முதுமையில் தாக உணர்ச்சி சற்றுக் குறையும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டுமே என்ற கவலையும் இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தண்ணீர் அருந்துவதைத்தவிர்த்துவிடக்கூடாது.இதய நோயாளிகள் மற்றும் சிறுநீரகத் தொல்லை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தண்ணீர் குடிக்கலாம்.நமது உணவுமுறையில் உப்பின் அளவு அதிகமாகவே உள்ளது. ஒருநாளில் சராசரியாக 10 முதல் 15 கிராம் உப்பைச் சேர்த்துக்கொள்கிறோம். உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளில் 5 கிராம் பயன்படுத்தினால் போதும் என்று பரிந்துரைத்துள்ளது. எனவே, நம் உணவில் உப்பின் அளவைப் பாதியாகக் குறைத்தாலே சிறுநீரகம் பல ஆண்டுகள் பழுதின்றி உழைக்கும்.முக்கியமாக உப்பு அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். ஊறுகாய், அப்பளம், வடகம், உப்பு அதிகம் உள்ள பிஸ்கட் வெண்ணெய், சீஸ், இறைச்சி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றில் உப்பு அதிகம்.சிறுநீரில் நோய்த்தொற்று ஏற்பட்டால் தாமதிக்காமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.சிறுநீர்த்தாரையில் அடைப்பு போன்ற தொல்லைகள் ஏதும் இருப்பின் (உதாரணம்: சிறுநீரகம் மற்றும் சிறுநீர்த் தாரையில் இருக்கும் கட்டிகள், கற்கள், புராஸ்டேட் சுரப்பியின் வீக்கம்) அவை நாளடைவில் சிறுநீரகத்தைச் செயலிழக்கச் செய்யும்.காலம் தாழ்த்தாமல் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனை பெற வேண்டும்.புகையிலையை நிறுத்த வேண்டும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.ஆண்டுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யும்போது சிறுநீரகம் சார்ந்த பரிசோதனைகளை (ரத்தத்தில் யூரியா, க்ரியாடினின், சிறுநீரில் புரதம்) அவசியம் செய்துகொள்ள வேண்டும்.
இந்தத் தொல்லை அதிகமாக பொதுவாக முதியோர்களுக்கே வருகிறது. எனவே, முதுமைதான் இதற்கான அடிப்படைக் காரணம் என்று புரிந்துகொள்ளலாம். ஆனால், முதுமை மட்டுமே காரணம் அல்ல. தசை இழப்பிற்கான காரணத்தை அறிய இன்னும் சரியான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை.சுற்றுப்புறச் சூழ்நிலையின் பாதிப்பு, சில நோய்கள் மற்றும் ஹார்மோன் மாற்றத்தினால் இந்நோய் இருக்கலாமோ " என்று கணித்திருக்கிறார்கள். இவை * எல்லாமே நிரூபிக்கப்படவில்லை. சுறுசுறுப்பாக இயங்கிய அன்றைய தலைமுறையினருக்கே இந்தநிலை என்றால், இன்று செயலற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் இளைஞர்களுக்கு வெகுசீக்கிரத்தில் தசையிழப்பு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதைச் சொல்லத் தேவையில்லை.அறிகுறிகள்தோள்பட்டைத் தசைகள் சுருங்கி, பார்ப்பதற்கு இளைத்திருப்பது போல் தோன்றும். அவற்றின் செயல்திறனும் குறைவதால், அன்றாடம் செய்யும் வேலைகளை எளிதாகச் செய்ய முடியாது. இளைால் தன்னுடைய பிவலைகளைச் செய்வதற்கு மற்றவரின் உதவியை நாட வேண்டியிருப்பதால், அடுத்தவரைச் சார்ந்தே வாழவேண்டிய நிலை வரும். ஆகையால் இவர்களின் உடல் தரம் வெருவாகக் குறைந்துவிடும்.வளர்ச்சி ஹார்மோன் (Growth Hormone), டெஸ்ட்டோஸ்டிரோன் மற்றும் இன்சுலின் போன்ற சில ஹார்மோன்களின் உற்பத்தியும் குறையத் தொடங்குகின்றன. மார்புத் தசைகளும் சுருங்கத் தொடங்குவதால், இதயம் மற்றும் நுரையீரல் தசைகளும் சுருங்கி, மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். நரம்பணுக்கள் குறைவதால் மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் இயக்கம் தொடர்பான செயல்கள் தடைபடும்போது அடிக்கடி நிலை தவறிக் கீழேவிழுவார்கள். அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதோடு நீண்ட நாள் மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும்.நோயைக் கண்டறிதல்தசை பலம் அறியும் பரிசோதனை, கைப்பிடிப் பரிசோதனை போன்ற பரிசோதனை முறைகள் இருக்கின்றன. ஒரு பொருளைச் சரியாக எப்படிப் பிடிக்கிறார் என்பதையெல்லாம் சோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.
மூச்சுத் திணறல் வரும்போது தவிர்க்க வேண்டிய மருந்துகள்: தூக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை. நாடித்துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து. (உ.ம். அட்டிரினிலின்), உயர் ரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உம். புரோபரனலால்)சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ உட்கொள்ள வேண்டும்.எந்த அளவிற்கு விரைவில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்
கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வரும் இன்றைய காலத்தில் தனித்திரு நிலையில்தான் பல முதியோர்கள் வாழ்ந்து வருகிறார்கள். கல்விக்காகவோ, திருமணமாகியோ, வேலை விஷயமாகவோ குழந்தைகள் வெளியூர் சென்று விடுகிறார்கள். இதனால் முதியோர்கள் தனியாக வசிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. இப்படித் தனியாக வசிப்பவர்கள் 'விழித்திரு' மனநிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சில தற்காப்பு நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அப்போதுதான்தனிமையும் இனிமையாக மாறும்.தனியாக வசிக்கும் முதியோர்கள். அக்கம்பக்கத்தினரிடம் நல்ல உறவை வைத்துக்கொள்வது அவசியம்.அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதையோ, அவர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதையோ தவிர்க்க வேண்டும்.கதவுகளைக் கொஞ்சமாகத் திறக்கும்விதமாகக் கதவுக்கும் வாசலுக்கும் இடையே சங்கிலி பொருத்திக்கொள்ள வேண்டும்.வீட்டில் கண்காணிப்பு கேமரா அவசியம் பொருத்த வேண்டும். அந்தக் காட்சிகளை உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உங்கள் குழந்தைகள், உறவினர்கள் பார்க்கும்விதமாக அமைத்துக் கொள்ளலாம். இந்தப் பாதுகாப்பு உணர்வே நிம்மதியை அளிக்கும்.வீட்டில் டார்ச்லைட் வைத்திருப்பது அவசியம். இன்வெர்ட்டர் இணைப்பு இருந்தால்,மின்சாரம் தடைப்பட்டாலும் கவலை இல்லாமல்இருக்கலாம்.அவசர உதவி தேவைப்படும்போது போன் அழைக்க, வீட்டுக்கு அருகே இருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் தொலைபேசி செய்து எண்களை வைத்திருங்கள்.சற்று அதிக சத்தம் எழுப்பக்கூடிய அலாரமும் வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.தினமும் வெளியூரில் உள்ள உங்கள் குழந்தைகள், உறவினர்களுடன் பேசுங்கள். அது நீங்கள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்யும்."சிறிது தூரமே வெளியே சென்றாலும், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கிய உங்களின் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். சில சமயங்களில் இது உயிரைக்கூடக் காக்க உதவும்.வெளியில் செல்லும்போது தேவையில்லாமல் அதிக நகைகளை அணிய வேண்டாம். முதுமையில் நகை மற்றும் ஆடை ஆபரணங்களில் அதிக நாட்டம் வேண்டாம். இதன்மூலம் தேவையில்லாத சிக்கல்களைத் தவிர்க்கலாம்.விழாக்களுக்குச் செல்லும்போது முடிந்தவரை தனியாகச் செல்ல வேண்டாம். யாரையேனும் துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள். பாதுகாவலர் மற்றும் வேலையாட்களை நியமிப்பதில் கவனம் தேவை. வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர் போன்றவர்கள் முன்னே பணத்தைப் பற்றியோ நகைகளைப் பற்றியோ பேச வேண்டாம்.நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளைப் பாதுகாப்புக்காக வளர்க்கலாம். பாசமாக இருக்கும் அவை மனதுக்கும் ஆறுதல் தரும்.இரவில் சிறிய விளக்கு எரியுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிச்சம் இருக்கும் இடத்துக்குத் திருடர்கள் பெரும்பாலும் செல்ல மாட்டார்கள்.மேற்கண்ட வழிமுறைகளை முடிந்தளவுக்குக் கடைப்பிடியுங்கள். காலம் செல்லச் செல்ல நீங்கள் தனியாக இருப்பதை மறந்து பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை உணர்வீர்கள் .