25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

வயதானவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, தைராய்டு, சிறுநீரக பிரச்சனை போன்ற நோய்களில் ஏதேனும் இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை தவிர்க்காமல் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் இந்த மாத்திரைகளோடுவைட்டமின்டி.பி6, பி 12, கால்சியம்மாத்திரைகளையும்பரிந்துரைத்திருப்பார்கள்.அதையும்தவிர்க்காமல்எடுத்துகொள்ளுங்கள்.

மருத்துவர் குறிப்பிட்ட அளவு மட்டுமேயான மாத்திரைகளை எடுத்துகொள்ள வேண்டும். சுயமாக மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதே போன்று மாத்திரைகள் வாங்கும் போது அது பயன்பாட்டில் உள்ளதா என்பதையும் பரிசோதிப்பது அவசியம். மாத்திரைகள் விஷயத்தில் எப்போதும் சமாதானம் ஆக வேண்டாம்.

நீரிழிவு, இரத்த அழுத்தம், இதய நோய், தைராய்டு என எந்த நோயாக இருந்தாலும் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வயதானவர்கள் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

வீடு தேடி வந்து ரத்த பரிசோதனை செய்கிறார்கள். நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் கொண்டிருப்பவர்கள் வீட்டிலேயே அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வசதீயாக வீட்டிலேயே பரிசோதனை செய்யும் கருவி வாங்கி வைத்துகொள்ளலாம்.

எந்த நோயும் இல்லை ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று சொல்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி உரிய காலத்தில் பரிசோதனை செய்ய வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News